John Ternus: ஆப்பிள் சிஇஓ பதவியிலிருந்து விலகும் டிம் குக்; புதிய தலைவராக ஜான் ட...
SRH vs DC: "கேமராவை என் அப்பா பக்கம் திருப்பி அவர் ரியாக்ஷனைப் பாருங்க" - ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா
ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல் 21) ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
அபிஷேக் சர்மாவின் அதிரடி சதமே சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
இந்நிலையில் ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு பேசிய அபிஷேக் சர்மா, "நான் எப்போதும் போல பவர்பிளேயைப் பயன்படுத்த விரும்பினேன்.

இந்தச் சிறப்புமிக்க மைதானத்தில் (ஹைதராபாத்) ரன் எடுப்பது எப்போதும் ஒரு தனி உணர்வுதான். நான் ரசிகர்களை உற்சாகப்படுத்த விரும்பினேன்.
நாங்கள் சுயமாக விளையாடுவதற்கான சுதந்திரத்தை கேப்டனும் பயிற்சியாளரும் தருகிறார்கள். வெறும் ஒரு அணியாக மட்டும் இல்லாமல், இளைஞர்களை வளர்க்க வேண்டும் என்பதில் சன்ரைசர்ஸ் நிர்வாகம் உறுதியாக இருக்கிறது.
எனது பெற்றோர் இங்கு வந்திருக்கிறார்கள். அது ஒரு நெகிழ்ச்சியான தருணம். எனது சகோதரிக்குத் தொற்று (infection) ஏற்பட்டதால் அவர் இன்று வரவில்லை, அவருக்கு இந்த விருதைச் சமர்பிக்கிறேன்.
உண்மையைச் சொல்லப்போனால், நான் 12 வயதிற்குட்பட்டோர் (U12) போட்டிகளில் விளையாடிய காலத்திலிருந்தே என் தந்தை டிவி திரைக்குப் பக்கத்தில்தான் உட்கார்ந்திருப்பார்.
இந்தப் போட்டியின்போதும் அப்படித்தான் நான் விளையாடுவதைப் பார்த்துகொண்டிருந்தார்.

நான் நான்-ஸ்ட்ரைக்கர் முனையில் இருக்கும்போது, எப்படி விளையாட வேண்டும் என்று அவர் சைகை காட்டுவார். அது இப்போதும் தொடர்கிறது. அடுத்த முறை ஒரு கேமராவை அவர் பக்கம் திருப்பி அவர் ரியாக்ஷன்களைப் பாருங்கள், அது வேடிக்கையாக இருக்கும்.
நான் அவரைப் பார்ப்பதும், அவர் எனக்கு அறிவுரைகள் வழங்குவதும் எனக்கு உதவியாக இருக்கிறது. பெற்றோர்கள் மற்றும் நண்பர்களுக்கு முன்னால் சிறப்பாக விளையாடுவது எப்போதும் ஸ்பெஷல்தான்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

















