செய்திகள் :

தமிழகத்தில் பறக்கும் படை வேட்டையில் சிக்கியது இத்தனை கோடிகளா? - அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட தகவல்

post image

தமிழ்நாட்டில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் பணம் குறித்த விவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (ஏப்ரல்.23) நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டின் தேர்தலில் இம்முறை தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.க, நா.த.க என பலமான நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான் உள்ளிட்ட தலைவர்களும், பிரதமர் மோடி, ராகுல் காந்தி போன்ற தேசியத் தலைவர்களும் தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக வாக்குச் சேகரித்தனர்.

கடந்த 30 நாட்களுக்கு மேலாக தேர்தல் பிரசாரங்கள் அனல் பறந்த நிலையில் மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் பணம் குறித்த விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது.

முதல்முறை வாக்காளர்கள் 14.59 லட்சம் பேர் உள்ளனர். தேர்தலுக்காக 1,06,418 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

தமிழ்நாடு முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அர்ச்சனா பட்நாயக் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
அர்ச்சனா பட்நாயக் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

325 வாக்குச்சாவடிகளை பெண்களே நிர்வகிக்கவுள்ளனர்; 75 வாக்குச்சாவடிகளை இளைஞர்கள் நிர்வகிக்கவுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் 62 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தமிழ்நாட்டில் 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை ரூ.1,262 கோடி மதிப்பிலான பரிசுப்பொருட்கள் மற்றும் 543 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.

மணிப்பூர்: தீப்பந்தத்துடன் வீதிக்கு வந்த பெண்கள்; உடைந்த நம்பிக்கையும் ஓயாத கலவரமும்;என்ன நடக்கிறது?

மணிப்பூர் மாநிலத்தில் 2023 மே மாதம் மெய்தி - குக்கி என இரு சமூகத்தினரிடையே தொடங்கிய கலவரம் இன்றுவரை நீடித்து வருகிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர... மேலும் பார்க்க

"எங்களது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்" - ட்ரம்ப் பதிவு; நம்பிக்கையில் பாகிஸ்தான்; மௌனத்தில் ஈரான்

நேற்று பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை திட்டமிட்டது போல நடக்கவில்லை. அமெரிக்கா தரப்பில் இருந்து அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்பு தூதர் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் : பிரசார களத்துக்கு வந்த 'மீன்கள்' ; மேற்கு வங்கத்தை அசைக்கும் உணவு யுத்தம்!

கொல்கத்தாவின் பாரக்பூர் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளரான கௌஸ்தவ் பக்சி, பாரம்பரிய உடை அணிந்து கையில் ஒரு மீனுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்குப் பின்னால் மேளதாளங்கள் முழங்க ஆதரவ... மேலும் பார்க்க

`எங்களுக்குத் தேவை நீதியே தவிர வெறுப்பு அல்ல' - பஹல்காம் தாக்குதல் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் உள்ள பைசரானில், சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கோரமான பயங்கரவாதத் தாக்குதல் நடந்து இன்றுடன் (ஏப்ரல் 22) ஓராண்டு நிறைவடைகிறது. 26 ஆண்களின் உயிரைப் பறித்த இந்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் தொடங்கியது `அமைதி நேரம்’ - ஓய்ந்தது 2026 சட்டமன்றத் தேர்தல் பிரசாரம்!

தமிழ்நாட்டின் சட்டப்பேரவைத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டின் தேர்தலில் இம்முறை தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.க, நா.த.க எனப் பலமான நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. மொத்தம் 5.73 கோடி ... மேலும் பார்க்க

அண்ணா நகர் 2026! - சிற்றரசின் ‘செக்-மேட்’ பாலிடிக்ஸ்!

சென்னை என்றாலே அது ‘திமுகவின் கோட்டை’ என்பது அரசியல் பாலபாடம். அதிலும் விஐபிக்களும், நடுத்தர வர்க்கத்தினரும், அடித்தட்டு மக்களும் சரிவிகிதத்தில் கலந்திருக்கும் அண்ணா நகர் தொகுதியின் களம், 2026 சட்டமன்... மேலும் பார்க்க