செய்திகள் :

டிவி, ரேடியோவில் வரும் இரைச்சல் சத்தம்; எங்கிருந்து வருகிறது? - இது தெரியாமப் போச்சே?! - 22

post image

பழைய ரேடியோக்களில் அலைவரிசை கிடைக்காதபோது வரும் `உஷ்' என்ற இரைச்சலிலும், பழைய ஆண்டெனா தொலைக்காட்சிகளில் அலைவரிசை இல்லாதபோது திரையில் தெரியும் கறுப்பு-வெள்ளைப் புள்ளிகளிலும் நமது பிரபஞ்சத்தின் தொடக்க கால அதிர்வுகள் ஒட்டிக்கொண்டிருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?!

இரைச்சல் சத்தம்
இரைச்சல் சத்தம்

சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பு (Big Bang) நிகழ்ந்தபோது அளப்பரிய ஆற்றலும் ஒளியும் உருவானது. பிரபஞ்சம் விரிவடைந்து குளிர்வடையத் தொடங்கியதும், அந்தத் தொடக்க கால ஒளியின் அலைநீளம் நீண்டு, இன்று அது நுண்ணலைகளாக (Microwaves) மாறியுள்ளது.

இதற்கு அண்ட நுண்ணலை பின்னணிக் கதிர்வீச்சு (Cosmic Microwave Background - CMB) என்று பெயர். ரேடியோவில் அலைவரிசை இல்லாதபோது நாம் கேட்கும் சத்தத்தில் சுமார் 1% இந்தப் பெருவெடிப்பின் எச்சமான கதிர்வீச்சினால் ஏற்படுகிறது.

1965-ஆம் ஆண்டு, அர்னோ பென்சியாஸ் (Arno Penzias) மற்றும் ராபர்ட் வில்சன் (Robert Wilson) என்ற இரு விஞ்ஞானிகள், நியூஜெர்சியில் ஒரு பெரிய ரேடியோ ஆண்டெனாவைச் சோதித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு விசித்திரமான இரைச்சல் பின்னணியில் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது.

அது நியூயார்க் நகரத்தின் இரைச்சலாக இருக்குமோ அல்லது ஆண்டெனாவில் தங்கியிருந்த புறாக்களின் எச்சத்தால் ஏற்பட்ட சத்தமாக இருக்குமோ என நினைத்து, ஆண்டெனாவை முழுமையாகச் சுத்தம் செய்தனர். ஆனாலும் அந்த `உஷ்' இரைச்சல் சத்தம் நிற்கவில்லை.

அந்தச் சத்தம் பூமியில் இருந்தோ, நமது சூரிய குடும்பத்தில் இருந்தோ வரவில்லை; ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் அனைத்துத் திசைகளில் இருந்தும் சீராக வருகிறது என்பதை அவர்கள் உணர்ந்தனர்.

பெருவெடிப்புக் கோட்பாட்டிற்கான மறுக்க முடியாத ஆதாரமாக இது அமைந்தது. இதற்காக 1978-ல் இவர்களுக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது.

இரைச்சல் சத்தம்
இரைச்சல் சத்தம்

இந்த CMB கதிர்வீச்சுதான் பிரபஞ்சத்தில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பழமையான ஒளியாகும். இந்த நுண்ணலைகளை மனிதக் கண்களால் பார்க்க முடியாது. ஆனால், ரேடியோ மற்றும் தொலைக்காட்சி ஆண்டெனாக்கள் இவற்றை உணர்ந்து இரைச்சலாக வெளிப்படுத்துகின்றன.

இனிமேல் ரேடியோவிலோ டிவியிலோ அலைவரிசை கிடைக்காத அந்தச் சலிப்பான இரைச்சலைக் கேட்கும்போது எரிச்சலடைய வேண்டாம்.

நாம் 13.8 பில்லியன் ஆண்டுகள் பழமையான பிரபஞ்சத்தின் முதல் மூச்சுக்காற்றை, பெருவெடிப்பின் எதிரொலியைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்வோம்!

Rapido ஓட்டுநரின் அநாகரீக செயல்; `பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறதா?' வைரலாகும் ஸ்கிரீன்ஷாட்

அனுஷ்கா என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஸ்கிரீன்ஷாட்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவர் ஒரு இடத்திற்குச் செல்ல ராபிடோ பைக் சேவையைப் பயன்படுத்தியுள்ளார். பயணம் முடிந்த பிறகு, அந்த ப... மேலும் பார்க்க

புதுச்சேரி: மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது | Photo Album

புதுச்சேரியில் மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டது.வலைகளை சீரமைக்கும் மீனவர்வலைகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்படகு எஞ்சின் பழுது நீக்கம்படகு முழுமையாக பழுதுபார்க்க கரையில் ஏற்றும் பணிவலைகளை சீரம... மேலும் பார்க்க

"பூனைக்குட்டிகளுக்கு `தந்தை' யார்?" - பூனைகளின் காதல் பஞ்சாயத்தும் போலீஸின் அதிரடி தீர்ப்பும்!

பொதுவாக விவாகரத்து அல்லது குடும்பத் தகராறுகளில் `குழந்தை பராமரிப்புச் செலவு' கேட்டு நீதிமன்றம் செல்வதைப் பார்த்திருப்போம். ஆனால், பெங்களூருவில் ஒரு படி மேலே போய், "உன் பூனைதான் என் பூனையைக் கர்ப்பமாக்... மேலும் பார்க்க

“எல்லாருக்கும் ‘Yes’ சொன்னேன்… ஆனா என் வாழ்க்கை இப்போ ‘No’ சொல்ல ஆரம்பிச்சுடுச்சு”- பேசும் மனசு - 6

“நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து, நான் எப்போதும் நம்பிக்கைக்குரிய ஆளாக இருக்கவேண்டும் என்று நினைத்துதான் வேலை செய்து வருகிறேன். யாராவது உதவி கேட்டால்,... மேலும் பார்க்க

Fridge-ன் Freezer-ல் ஏன் Light இல்லை? - இது தெரியாமப் போச்சே?! - 20

பிரிட்ஜைத் திறந்தால் பளிச்சென்று லைட் எரியும், ஆனால் ஃப்ரீசரைத் திறந்தால் லைட் இருக்காது. பனி படிந்து விளக்கு உடையும் என்பதுபோல் காரணங்கள் சொல்லப்பட்டாலும் அது ஏன் என்பதன் பின்னணியில் சுவாரசியமான தகவல... மேலும் பார்க்க

`முகம் பார்க்கும் கண்ணாடி வெள்ளையா... பச்சையா?' - இது தெரியாமப் போச்சே?! - 19

நாம் தினமும் முகம் பார்க்கும் கண்ணாடி முழுவதும் நிறமற்றதோ, வெள்ளையானதோ அல்ல; அது மிக மெல்லிய பச்சை நிறம் கொண்டது. mirror colorவாகனத்தின் டயர் தேய்ந்துவிட்டதா... கண்டுபிடிப்பது எப்படி? - இது தெரியாமப் ... மேலும் பார்க்க