செய்திகள் :

டாக்ஸ் பயத்தில் டாலரைத் தூங்க விடுகிறீர்களா? - US NRI-களுக்கான ₹5 கோடி சீக்ரெட்!

post image

“H1B விசா எக்ஸ்டென்ஷன் வந்திருச்சா?” என்ற பக்-பக் டென்ஷனும், “இன்னும் ஒரு மூணு வருஷத்துல பணத்தைச் சேர்த்துட்டு இந்தியாவுக்கே நிரந்தரமா திரும்பிடலாம்” என்ற அந்தப் பொய்யான வாக்குறுதியும்தான் அமெரிக்க வாழ் இந்தியர்களின் NRI தேசிய கீதம்!

ஐ.டி கம்பெனியில் வேலை, கையில் ஆறு இலக்க டாலர் சம்பளம், வீக்கெண்ட் ஆனால் காஸ்கோ (Costco) ஷாப்பிங் என வெளிப்பார்வைக்கு உங்களின் 'அமெரிக்கக் கனவு' பிரகாசமாகத்தான் தெரிகிறது. ஆனால், உள்ளே நடக்கும் நிஜப் போராட்டம் உங்களுக்கு மட்டும்தானே தெரியும்!

தங்கக் கூண்டிற்குள் தூங்கும் டாலர்கள்

சம்பளம் என்னவோ பெரிதாகத்தான் இருக்கிறது. ஆனால், 401(k) பிடித்தம், மலைக்க வைக்கும் வீட்டு வாடகை அல்லது மார்ட்கேஜ் (Mortgage), குழந்தைகளின் டே-கேர் (Daycare) பில், கார் இன்ஷூரன்ஸ் என எல்லாவற்றையும் டாலரிலேயே கட்டிய பிறகு, மிஞ்சுவது வெறும் பெருமூச்சு மட்டும்தான்.

"நம்ம பையன் அமெரிக்காவுல செட்டிலாயிட்டான்" என்று ஊரில் உள்ளவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், ஒரு லே-ஆஃப் அறிவிக்கப்பட்டால், அடுத்த 60 நாள்களுக்குள் வேறு வேலை தேடியாக வேண்டுமே என்ற கத்தி எந்நேரமும் உங்கள் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கிறது.

இந்த மன அழுத்தத்திலிருந்து தப்பிக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்களின் சிறுகச் சிறுகச் சேர்த்த டாலர்களை அப்படியே 'சேஸ்' (Chase) அல்லது 'பாங்க் ஆஃப் அமெரிக்கா' செக்கிங் அக்கவுண்டில் (Checking Account) எந்த வளர்ச்சியுமின்றி 0.01% வட்டிக்குத் தூங்க விடுகிறீர்கள்.

பணவீக்கம்

இரட்டைப் பணவீக்கமும், வரி பயமும்!

இப்படிப் பணத்தைத் தூங்க விடுவதால் நீங்கள் எவ்வளவு பெரிய நஷ்டத்தைச் சந்திக்கிறீர்கள் தெரியுமா? அமெரிக்காவில் ஒருபக்கம் பணவீக்கம் உங்கள் வாங்கும் திறனைக் குறைக்கிறது. மறுபக்கம், உங்கள் "இந்தியா ரிட்டர்ன்" கனவும் மெல்லக் கருகுகிறது.

பத்து வருடங்களுக்கு முன் இருந்த இந்தியா இப்போது இல்லை. சென்னை OMR-ல் ஒரு நல்ல 3BHK வீட்டின் விலையே இன்று 2 கோடியைத் தாண்டுகிறது. ஒரு இன்டர்நேஷனல் பள்ளியின் ஃபீஸ் பல லட்சங்களைத் தொடுகிறது. நாளைக்கே நீங்கள் ஊருக்குத் திரும்ப நேர்ந்தால், உங்களின் தற்போதைய லைஃப்ஸ்டைலைத் தொடர உங்களிடம் போதுமான நிதி (Corpus) இருக்கிறதா?

"சரி, டாலரை இந்திய மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்" என்று நீங்கள் நினைத்தால், அமெரிக்க IRS-ன் FATCA மற்றும் PFIC சட்டங்கள் உங்களை அச்சுறுத்துகின்றன. "இந்தியாவில் முதலீடு செய்தால் அமெரிக்காவில் டாக்ஸ் கட்டியே பாதிப் பணம் போய்விடுமே" என்ற நடுக்கத்தில், பல NRI-கள் முதலீட்டையே செய்யாமல் தள்ளிப்போடுகிறார்கள். இது மிகப்பெரிய நிதித் தற்கொலை!

Money
Money | NRI | Wealth Building

₹5 கோடி மேஜிக்: கணக்கு என்ன சொல்கிறது?

இந்த 60-நாள் விசா பயத்திலிருந்தும், நிதிப் பாதுகாப்பின்மையிலிருந்தும் நிரந்தரமாக விடுபட உங்களுக்குத் தேவையானது ஒரு மேஜிக் நம்பர்: அதுதான் ₹5 கோடி!

டாலர் கணக்கில் பார்த்தால் இது தோராயமாக $600,000 மட்டுமே. இது உங்களால் 100% சாத்தியம். எண்களின் வித்தையைப் பாருங்கள். மாதம் $1,200 (சுமார் ₹1 லட்சம்) உங்களால் முதலீடு செய்ய முடியுமா? உங்கள் வீக்கெண்ட் அவுட்டிங் மற்றும் அமேசான் பர்ச்சேஸ்களைக் கொஞ்சம் முறைப்படுத்தினாலே இந்தத் தொகையை எளிதாக எடுக்க முடியும்.

இந்த 1 லட்சத்தை, சரியான இந்திய ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் (Equity Mutual Funds), 15 வருடங்களுக்குச் சீராக (SIP) முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்தியப் பங்குச்சந்தையின் சராசரியான 12% கூட்டு வட்டி (CAGR) உங்களுக்குக் கிடைத்தால்:

15 வருடங்களில் நீங்கள் செலுத்திய மொத்த அசல்: வெறும் ₹1.8 கோடி ($216,000).

12% கூட்டு வட்டியின் (Power of Compounding) மேஜிக்கால் உங்களுக்குக் கிடைக்கும் முதிர்வுத் தொகை: தோராயமாக ₹5.04 கோடி!

கூட்டு வளர்ச்சி (compounding)

பணக்காரனாக ஊர் திரும்புங்கள்!

இந்த ₹5 கோடியை அடைந்துவிட்டால், உங்களின் ஒட்டுமொத்தப் பயமும் பறந்துவிடும். இந்தத் தொகையிலிருந்து ஆண்டிற்கு 6% பாதுகாப்பான வருமானம் ஈட்டினால் கூட, மாதம் ₹2.5 லட்சம் வருமானம் கிடைக்கும். இதன் பிறகு, அமெரிக்க வேலையை நீங்கள் 'தேவைக்காக' அல்லாமல், 'விருப்பத்திற்காக' மட்டுமே செய்யலாம். விசா டென்ஷன் உங்களை ஒன்றும் செய்ய முடியாது.

இந்த இலக்கைச் சட்டப்பூர்வமாக அடைவது எப்படி?

PFIC வரிச் சட்டங்களைச் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வது எப்படி? இரட்டை வரி விதிப்பைத் தவிர்த்து (DTAA), டாலரை லாபகரமாக இந்தியாவில் முதலீடு செய்வது எப்படி? எந்த ஃபண்டுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும்?

இந்தக் கேள்விகளுக்கான துல்லியமான விடைகளையும், உங்களுக்கான ₹5 கோடி செல்வத் திட்டமிடலையும் தெரிந்துகொள்ள, மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான லாபம் வழங்கும் சிறப்புப் பயிற்சி வகுப்பில் இணையுங்கள்.

Labham Workshop April 23 2026

₹5 கோடி இலக்கு! அடைவது எப்படி? - அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கான முதலீட்டு வழிகாட்டல்

₹5 கோடி செல்வத்தை உருவாக்கும் ரகசியங்கள்.

டாலர் வருமானத்தை லாபகரமாக முதலீடு செய்வது எப்படி?

அமெரிக்க வரிகளை (Taxes) புத்திசாலித்தனமாக நிர்வகிப்பது எப்படி?

அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கான சிறப்பு செல்வத் திட்டமிடல்.

நாள்: ஏப்ரல் 23, 2026, வியாழன்

நேரம்: இரவு 08:30 மணி முதல் 10:00 மணி வரை (இந்திய நேரம் - IST)

பேச்சாளர்: டீம் லாபம்

100 பேருக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு கட்டாயம்.

முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-apr23-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_apr23_2026

லே-ஆஃப் பயத்திலும், டாக்ஸ் குழப்பத்திலும் சிக்கித் தவிப்பதை நிறுத்துங்கள். உங்கள் ₹5 கோடி நிதிச் சுதந்திரப் பயணத்தை இன்றே திட்டமிடுங்கள்! வகுப்பில் சந்திப்போம்!

உங்களின் ஒரு ஓட்டு... உங்கள் பணத்தின் தலையெழுத்து | Election and Economy

மனித மூளை எப்போதுமே சிறிய எண்களை உதாசீனப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல கோடிப் பேர் வாக்களிக்கும் ஒரு தேசத்தில், "என் ஒற்றை வாக்கு என்ன மாயத்தைச் செய்துவிடப் போகிறது?" என்ற நினைப்பு நம்மி... மேலும் பார்க்க

பெண்களே, `ரெகுலர்' சேமிப்பை நிறுத்துங்கள்! - ₹1 கோடி சேர்க்கும் சீக்ரெட் இதோ!

தோழிகளே! எப்படி இருக்கீங்க? குடும்பத்துல எந்தச் செலவாக இருந்தாலும், கொடுத்த பணத்துல கச்சிதமா பட்ஜெட் போட்டு, மாசக் கடைசியில கொஞ்சப் பணத்தை மிச்சம் பிடிச்சு அஞ்சறைப் பெட்டியிலோ, பீரோவிலோ சேமித்து வைப்ப... மேலும் பார்க்க

பறிபோகும் வேலை, அச்சத்தில் இளைஞர்கள்... கேள்விக்குறியாகும் இந்தியாவின் எதிர்காலம்?!

சமீபத்தில் ஆரக்கிள் (Oracle) நிறுவனம் அனுப்பிய மின்னஞ்சல் ஒன்று ஆயிரக் கணக்கான இந்திய இளைஞர்களின் கனவைத் தகர்த்துள்ளது. இந்த நிறுவனம் உலகளவில் பணிநீக்கம் செய்துள்ள 30,000 ஊழியர்களில் 12,000 பேர் இந்தி... மேலும் பார்க்க

Ergodicity: காம்பவுண்டிங் எட்டாவது அதிசயம்... 'எர்கோடிசிட்டி' ஒன்பதாவது!

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூட்டு வட்டிதான் (Compounding) உலகத்தின் எட்டாவது அதிசயம் என்றார். உண்மைதான். ஆனால் அவர் தலால் ஸ்ட்ரீட்டில் ஆப்ஷன்ஸ் (F&O) ட்ரேடிங் செய்ததில்லை. சந்தையில் காம்பவுண்டிங்கை விட பய... மேலும் பார்க்க