செய்திகள் :

IPL: கேன்வாஸ் ஷுவில் பயிற்சி; சைக்கிளில் பயணம்; மும்பை அணியில் அசத்தும் அஸ்வனி குமார் - யார் இவர்?

post image

'எப்போதெல்லாம் விளையாட வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று நினைப்பேன்' என உத்வேகமாக பேசிய மும்பை அணியின் இளம் வீரரான அஸ்வனி குமார் குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய (ஏப்ரல்.20) ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.

பலரின் பாராட்டுகளைப் பெற்று வரும் இந்த அஸ்வனி குமார் யார்?

அஸ்வனி குமார்
அஸ்வனி குமார்

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அஸ்வனி குமாருக்கு 24 வயது. அவரது தந்தை சாதரண விவசாயி.

கிரிக்கெட் விளையாடத் தேவையான அடிப்படை வசதிகள் கூட இல்லாத சூழலில், கேன்வாஸ் காலணிகளை அணிந்து கொண்டு, ஷேர் ஆட்டோ மற்றும் சைக்கிளில் பல கிலோமீட்டர் பயணம் செய்து கிரிக்கெட் பயிற்சியை பெற்றிருக்கிறார்.

உள்ளூர் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார் அஸ்வனி குமார். விஜய் ஹசாரே டிராபி மற்றும் ரஞ்சி டிராபி சையது முஷ்டாக் அலி டிராபியில் சிறப்பாக விளையாடி இருக்கிறார்.

இந்நிலையில் தான் தடைகளைத் தகர்த்து கிரிக்கெட் சாதனைப் படைக்க நினைத்த அஸ்வனி குமாரை கடந்த 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.30 லட்சத்தை கொடுத்து ஏலத்தில் எடுத்தது.

அஸ்வனி குமார்
அஸ்வனி குமார்

அந்த சீசனில் கொல்கத்தா அணிக்கு எதிராக தனது அறிமுக ஆட்டத்திலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். அதேபோல இந்த சீசனிலும் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தான் ஒரு சிறந்த பவுலர் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.!

GT vs MI: "ஹர்திக் பாயுடன் இணைந்துதான் திட்டமிட்டேன்" - மும்பையின் கம்பேக் வெற்றி குறித்து அஸ்வனி

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்20) ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், மும்பை அணியும் மோதின.இதில் 99 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் புள்ளி... மேலும் பார்க்க

GT vs MI: "மைதானத்தில் நான் கொடுத்த எனர்ஜி எனக்கே தலைசுற்றலை ஏற்படுத்தியது, ஆனால்.!"- ஹர்திக்

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல்20)நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு மு... மேலும் பார்க்க

GT vs MI: 'OG is Back டி' - கம்பேக் கொடுத்த மும்பை இந்தியன்ஸ்; வீழ்ந்த குஜராத் டைட்டன்ஸ்!

"மூழ்காத ஷிப்பே மும்பை ஷிப்பா" எனப் பாட வைக்குமளவு தனது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது மும்பை அணி.ரபடாவின் பீரங்கித் தாக்குதலில் தொடங்கி, திலக் வர்மாவினை கதாநாயகனாக்கிய குஜராத்தின் திக்திக்... மேலும் பார்க்க

CSK: சென்னை அணிக்குப் பின்னடைவு? - ஆயுஷ் மாத்ரேவுக்கு பதில் யாரை களமிறக்கப் போகிறது சிஎஸ்கே?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை ரசிகர்கள் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிபடுத்தவில்லை. சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சொதப்பி வருகிறது. இதுவரை ஆறு போட்டிகளி... மேலும் பார்க்க

Dhoni: தோனி எப்போது களமிறங்குவார்? - சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி விளக்கம்

காயத்தில் இருந்து குணமடைந்து பயிற்சியை தொடங்கியுள்ள தோனி எப்போது கம்பேக் கொடுப்பார்? என்று சிஎஸ்கே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பய... மேலும் பார்க்க

PBKS Vs LSG: 'எல்லாரும் அவங்க ஸ்டைல்ல ஆடுறாங்க, அதுதான் எங்களுக்குத் தேவை'– ஸ்ரேயஸ் ஐயர்

ஐபிஎல் 2026-ன்நேற்றைய (ஏப்ரல் 19)ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த அதிரடி வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைதக்க... மேலும் பார்க்க