செய்திகள் :

மேற்கு வங்கம்: 'எல்லாம் திட்டமிட்ட திரைக்கதை.!'- காரப்பொரி வாங்கி சாப்பிட்ட மோடியை விமர்சித்த மம்தா

post image

294 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலும், ஏப்ரல் 29 ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தலும் நடக்கிறது.

வாக்கு எண்ணிக்கை மே-4 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இதனிடையே பிரதமர் மோடி நேற்று (ஏப்ரல்.20) மேற்கு வங்க மாநிலத்தில் ஜர்கிராம் நகரில் தேர்தல் பிரச்சாரத்தின்போது திடீரென வாகனத்தில் இருந்து இறங்கி சாலையோரம் இருக்கக்கூடிய கடைக்கு சென்று காரப்பொரி வாங்கி சாப்பிட்டார்.

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது. இந்நிலையில் பிரதமர் மோடியின் இந்தச் செயலை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்திருக்கிறார்.

தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய மம்தா பானர்ஜி, "வாகனத்தில் இருந்து திடீரென இறங்கி பிரதமர் காரப்பொரி சாப்பிடும்போது எப்படி கேமராக்கள் தயாராக இருந்தன.

இந்த முழு நிகழ்வும் முன்னரே திட்டமிட்டு எழுதப்பட்ட ஒரு திரைக்கதை. காரப்பொரி சாப்பிட்டது வெறும் நாடகம்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

தேர்தலுக்காக இதுபோன்ற நாடகங்களை பிரதமர் அரங்கேற்றுகிறார். பிரதமர் தனது பாக்கெட்டில் இருந்து சரியாக 10 ரூபாய் நோட்டை எடுத்து கொடுக்கிறார்.

அவர் பாக்கெட்டில் 10 ரூபாய் வைத்திருப்பதை யாராவது நம்ப முடியுமா?" என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறார்.

`ஹோலோகிராம் டு ரோபோட்' - ஹைடெக் பிரசாரத்தில் கலக்கும் தவெக-வினர்!

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில்குமார் நேற்று (20.04.2026) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, ரோபோட்டுடன் இணைந்து வீதியோரங்களில் நடைபயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். ரோபோட்டின் கழுத்தில் கட்சிக... மேலும் பார்க்க

திருவண்ணாமலை: கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 15 வயது சிறுமி; திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கோயில் திருவிழாவிற்குச் சென்ற இடத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்த... மேலும் பார்க்க

Iran: "அச்சுறுத்தல்களின் நிழலில் பேச்சுவார்த்தை நடக்காது" - ஈரான் என்ன சொல்கிறது?

இந்திய நேரப்படி, நாளை அதிகாலை அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் முடிவடைகிறது. இன்று பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடக்கவிருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயாராக உள்ளது. அமெரி... மேலும் பார்க்க

'ஒரு தொகுதியில் ஒரே பேர்ல 10 வேட்பாளர்கள் இருந்தாலும் குழப்பம் இருக்காது' - தேர்தல் ஆணைய ஏற்பாடுகள்

இன்னும் இரண்டு நாள்களில் 2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல். வாக்காளர்களுக்கு வசதியாக தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ள சில ஏற்பாடுகள் குறித்து பார்ப்போம்.1. செல்போன்களுக்கென டோக்கன் வசதி:பொதுவாக வ... மேலும் பார்க்க