செய்திகள் :

`ஹோலோகிராம் டு ரோபோட்' - ஹைடெக் பிரசாரத்தில் கலக்கும் தவெக-வினர்!

post image

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில்குமார் நேற்று (20.04.2026) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, ரோபோட்டுடன் இணைந்து வீதியோரங்களில் நடைபயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

ரோபோட்டின் கழுத்தில் கட்சிக் கொடி அச்சிடப்பட்ட துண்டு அணிவிக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் ரசித்து, புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். மனிதர்களை விட ரோபோட்டே அதிக கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

த.வெ.க வினரின் ரோபோட் பிரச்சாரம்
த.வெ.க வினரின் ரோபோட் பிரச்சாரம்

இதற்கு முன்பே த.வெ.க-வினர் கும்பகோணம் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் 3D ஹோலோகிராம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருந்தனர்.

இந்த முறையில், விஜய் ஒரே நேரத்தில் பல இடங்களில் நேரில் தோன்றுவது போன்ற காட்சியை உருவாக்கி, மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தினர். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த நவீன தொழில்நுட்பம் அதிக ஈர்ப்பை ஏற்படுத்தியது.

தற்போதைய தேர்தல் பிரசாரங்களில் ரோபோட், ஹோலோகிராம் போன்ற தொழில்நுட்பங்கள் இணைந்து புதிய பரிமாணத்தை உருவாக்கி வருகின்றன.

த.வெ.க வினரின் ரோபோட் பிரசாரம்
த.வெ.க வினரின் ரோபோட் பிரசாரம்

பாரம்பர்ய முறைகளைத் தாண்டி, வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. இன்னும் சில வருடங்களில் வாக்கு கேட்க வேட்பாளர் வரமால், ரோபோட்டே வீட்டுக்குள் வந்து ‘ஓட்டு போடுங்க’ என்று ரிமைண்டர் கொடுக்கும் போல!

'ஸ்டாலின் தன் தந்தை கலைஞரை சாகும்வரை கவனித்துக்கொண்டார்; ஆனால் எனக்கு வாய்த்த பிள்ளை'- ராமதாஸ்

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவர் மகன் அன்புமணி இடையே கருத்து வேறுபாடு நீடித்து வரும் நிலையில், இருவரும் தங்களுக்குத்தான் கட்சி சொந்தம் எனக் கூறி வருகின்றனர்.`உண்மையான பா.ம.க., நாங்கள்தான்' எனக் ... மேலும் பார்க்க

காட்பாடி: `ஊராட்சிகளில் உள்கட்டமைப்பு வளர்ச்சி’ - வீடுதோறும் கடிதம்; கவனம் ஈர்த்த துரைமுருகன்

தி.மு.க பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் தனது காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் நிலையில், இன்றைய தினம் இறுதிக்கட்ட பரப்புரையில் தீவிரம் காட்டி வருகிறார். இதனிடையே, `உங... மேலும் பார்க்க

`என்னைக் கொல்ல முயற்சி; செந்தில் பாலாஜியும் அவர் தம்பியும்தான்..!' - எம்.ஆர்.விஜயபாஸ்கர் `பகீர்'

கரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். திமுக சார்பில் ஆசி.தியாகராஜன் களத்தில் உள்ளார்.கரூர் தொகுதியில் உள்ள முக்கிய பிரச்னைகளில் ஒன்றான இனா... மேலும் பார்க்க