செய்திகள் :

``எனக்கு பயமா... தைரியம் இருந்தா களத்துல மோதுங்க...'' செந்தில்பாலாஜி ஆவேசப் பேட்டி

post image

செந்தில்பாலாஜி போட்டியிடுவதால் கோவை தெற்கு தமிழகம் முழுக்க கவனிக்கப்படும் தொகுதியாக மாறியிருக்கிறது. `கரூர்ல இருந்து அவரா கோவைக்கு வரல... நான்தான் வரவச்சிருக்கேன். கரூரில் திமுகவின் வெற்றி கன்ஃபார்ம். கோவையிலும் திமுக-வின் வெற்றியை உறுதி செய்வதற்காக செந்தில்பாலாஜிக்கு இங்கே டியூட்டி போட்ருக்கேன்' என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிரடியாக பதில்கொடுத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அதற்கேற்ப இரவு, பகல் பாராமல் வெற்றிக்காக உழைத்து வரும் செந்தில்பாலாஜியை பிரசாரம் முடித்துவிட்டு வந்த நள்ளிரவில் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்....

``இரவு 11 மணிக்கு பேசுறோம், காலையிலிருந்து இடைவெளியே இல்லாம ஓடிட்டே இருக்கீங்க. ஆனாலும், உங்க எனர்ஜி குறையலையே?”

``வேலைன்னு வந்துட்டா பார்த்துதான் ஆகணும். இன்னைக்கு காலையில 7 மணிக்கு ஆரம்பிச்சேன், இரவு 10 மணிவரை களத்துல இருந்துருக்கேன். மதியம் ரெஸ்டெல்லாம் கிடையாது. தேர்தல் முடியுற வரை அப்படித்தான்”

``தேர்தல் நேரத்துல மட்டும்தான் இப்படியா இல்லை பொதுவாவே நீங்க இப்படித்தானா?

``வழக்கமா தினமும் 4 மணி நேரம் தூங்குவேன். இப்போ 2 மணி நேரம் தூங்குறேன் அவ்வளவுதான்”

``கரூரிலிருந்து ஏன் கோவைக்கு வந்தீங்கன்ற கேள்வி உங்ககிட்ட தொடர்ந்து முன்வைக்கப்பட்டது. இப்போ முதலமைச்சரே விளக்கம் கொடுத்துருக்காரே...”

``2021 முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கொரோனா சமயத்துல எனக்கு சேலத்துல பொறுப்பு கொடுத்திருந்தாங்க. அந்தப் பணிகளை சிறப்பா பார்த்தோம். பிறகு, கோயம்புத்தூர்ல அமைச்சர் இல்லாததால இங்கே இன்சார்ஜா போட்டாங்க. இங்கே வந்து 100 மாநகராட்சி வார்டு, பேரூராட்சி நகராட்சின்னு 150 இடங்கள்ல பொதுமக்களை சந்திச்சு 1 லட்சத்து 41,000 மனுக்கள் வாங்கிருக்கோம். அதைத்தொடர்ந்து, கோவையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர், பல்வேறு நலத்திட்டங்களை கோவைக்கு கொடுத்தாங்க. இப்படி, இங்கே அமைச்சர் இல்லாதனால அந்தப் பொறுப்பை எடுத்துகிட்டு அரசுப் பணிகளை வேகப்படுத்தினோம்.

முதலமைச்சர்கிட்ட கேட்டு, நிறைய நிதிகளைப் பெற்று பல திட்டங்களை கோவைக்கு கொண்டுவந்து செயல்படுத்தியிருக்கோம். கோவையில இருக்கக்கூடிய 10 தொகுதிகள்ல எல்லா பகுதிகளுக்கும் போயிருக்கேன் மக்கள்கூட நல்ல அறிமுகம் இருக்கு. நெருங்கிப் பழகியிருக்கேன். அவங்களோட தேவைகளை முழுவதுமா அறிஞ்சு செயல்படுறோம். ஆனாலும், இந்த முறை வாய்ப்பு கேட்கும்போது, கரூருக்குத்தான் விருப்ப மனு கொடுத்திருந்தேன். ஆனால், எங்கள் தலைவர் கோயமுத்தூர்னு அறிவிச்சிருந்தாங்க. எங்கள் தலைவர் என்ன கட்டளையிடுறாரோ அதைச் செயல்படுத்த வேண்டியது ஒரு தொண்டனாகிய என்னுடைய கடமை. தலைவருடைய கட்டளையை ஏற்று இங்கே தேர்தல் களத்துல பணியாற்றிட்டிருக்கேன்.”

``எந்தவொரு அரசியல்வாதியும் தனக்கு செல்வாக்கு உள்ள தன் சொந்த தொகுதியை விட்டுவிட்டு வேறு ஒரு தொகுதியில் போட்டியிடுவதை விரும்பமாட்டாங்க. ஆனா, நீங்க துணிஞ்சு அந்த முடிவை எடுத்திருக்கீங்க. தலைமை சொன்ன ஒரே காரணமா அல்லது என்னால எங்க நின்னாலும் ஜெயிக்க முடியும்ங்கிற நம்பிக்கையா?”

``நான் திமுக-வுல சேர்ந்த பிறகு, அரவக்குறிச்சியில் இடைத்தேர்தல்ல போட்டியிட்டு வெற்றிபெற்றேன். பிறகு, 2021 பொதுத்தேர்தல்ல கரூருக்கு விருப்ப மனு கொடுத்தேன். அப்போகூட அரவக்குறிச்சி ரொம்ப பாதுகாப்பான தொகுதிதானே... நீங்க ஏன் கரூருக்கு போறீங்கன்னு நிறையபேர் கேட்டாங்க. நான் சொந்த வீட்டை விட்டு வாடகை வீட்டுக்கு போகல. என் தொகுதி, நான்நிக்கிறேன்னு சொன்னேன்.

அதிமுக ஆளுங்கட்சியா இருக்கு. நிறைய செலவுகள் பண்ணுவாங்க. போட்டி கடுமையா இருக்குமேன்னு அவங்களுக்கு ஆச்சர்யமா இருந்துச்சு. ஆனா, என்னைப் பொறுத்தவரைக்கும் அதை போட்டியாவே எடுத்துக்கல. எனக்கு மக்கள் மேல நம்பிக்கை இருக்கு. மக்களும் என் மேல நம்பிக்கை வெச்சிருக்காங்க. நிச்சயமா வாக்களிச்சு வெற்றிபெற வைப்பாங்கன்ற நம்பிக்கையில போட்டியிட்டேன். அதேபோல மக்கள் நல்ல ஒரு வெற்றியை கொடுத்தாங்க.

தொடர்ந்து இந்த 5 வருஷத்துல, நான் முதலமைச்சர்கிட்ட கேட்டு ரூ.5,000 கோடி அளவுக்கான வளர்ச்சி திட்டங்களை கரூர்ல செயல்படுத்தியிருக்கோம். சுதந்திரம் பெற்ற காலம் முதல் செய்யாத அளவுக்கான சாதனை நடந்திருக்கு. அப்படி கோயம்புத்தூருக்கும் நம்மளால செய்ய முடியும்ங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. இந்த 5 வருஷத்துல கோயம்புத்தூர்ல சாலை வசதிகள், தெருவிளக்குகள், பாதாள சாக்கடைகள், குடிநீர் திட்ட பணிகள்னு ரூ.20,000 கோடிக்கும் அதிகமான அடிப்படை கட்டமைப்பு பணிகள் நடந்திருக்கு.

இதைத்தவிர, செம்மொழிப் பூங்கா, பெரியார் அறிவுலகம், ஜிடி நாயுடு மேம்பாலம், மேற்கு புறவழி சாலை, ஹாக்கி மைதானம் என நிறைய சிறப்பு திட்டங்களை கோவைக்கு முதலமைச்சர் கொடுத்திருக்காங்க. ஆகையால, கோவை மக்கள் முதலமைச்சர்மீது பெரும் பற்றும் பாசமும் வெச்சிருக்காங்க. 2021 தேர்தலைப் போல இல்லாம இந்த தேர்தல்ல ஒரு வெற்றியை கொடுப்பாங்க என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.”

வாக்குசேகரிப்பின்போது செந்தில்பாலாஜிக்கு ஆரத்தி எடுக்கும் பெண்கள்

``கோவையில் அதிமுகவைப் பொறுத்தளவில் வேலுமணி எப்படி வலுவா இருக்கிறாரோ அதேபோல திமுக-வுக்கு ஒரு வலிமையான தலைவர் வேண்டும் என்கிற அடிப்படையில உங்களை இங்கே கொண்டு வந்திருக்கிறார்களா?”

``நான் அப்படி பாக்கல. பழம்பெரும் தலைவர்கள் எல்லாம் இங்க நிறைய இருந்திருக்காங்க. கோவைக்கு பல வரலாறுகள் இருக்கு. அந்த வரலாற்றுல நான் ஒரு சின்ன கடுகளவுகூட இருக்க மாட்டேன். இருந்தாலும் இப்போ எனக்கொரு வாய்ப்பு கொடுத்திருக்காங்க. அந்த வாய்ப்பை சரியா பயன்படுத்தணும் நினைக்கிறேன். ரொம்ப கடுமையா களத்துல பணியாற்றுறேன். காலையில 7 மணிக்கு நடக்க ஆரம்பிச்சா மதியானம் 1 மணி வரைக்கும் நடக்கிறோம். மாலையில 5 மணிக்கு நடக்க ஆரம்பிச்சா இரவு 10 மணி வரைக்கும் நடக்குறோம்.

ஒவ்வொரு வீடு வாரியா நடந்துபோய்தான் வாக்காளரை சந்திச்சு வாக்குகள் சேகரிக்கிறோம். `ஏன் நடந்தே போறீங்க வெயில்ல சிரமமா இருக்காதா, ஜீப்ல போகலாமே'ன்னு நிறையபேர் கேட்டாங்க. ஒவ்வொரு வீட்லயும் வரவேற்கிறதுக்கு கையில ஆரத்தி தட்டு, பூவோட காத்திருக்காங்க. நான் ஜீப்ல போனா நல்லா இருக்காது. அவங்களால ஆரத்தி எடுக்கவோ பொட்டு வைக்கவோ முடியாது என்னாலயும் அவங்கிட்ட ஒன் டு ஒன் பேச முடியாது. அவங்க பிரச்னைகளை கேட்க முடியாது. ஆனா நடந்துபோனா அது எல்லாமே சாத்தியம். அதனாலதான் நடந்தே போய் வாக்கு சேகரிக்கிறேன்"

செந்தில்பாலாஜி வாக்குசேகரிப்பின்போது

``ஆனா, தோல்வி பயத்துலதான் நீங்க வீதிவீதியா நடந்து போறீங்கன்னு அண்ணாமலை போன்றவர்கள் விமர்சனம் செய்கிறார்களே...?”

``சார் இது என்னோட பழக்கம். 2006-ல ஃபர்ஸ்ட் எலெக் ஷன்ல நின்னப்போ எனக்கு 31 வயசு. அப்போ கரூர்ல நகராட்சி இப்படி முழுமையா நடந்துதான் போனேன். எப்போதுமே நகர பகுதிகள்ல நடந்து போறதும், ஊரக பகுதிகள்ல கிராமங்களுக்கு ஜீப்ல போய் ஓட்டு கேட்கிறதும் என் ஸ்டைல்.

``இவ்வளவு விளக்கங்கள் கொடுத்தாலும் கரூர் சம்பவத்துக்காகதான் செந்தில் பாலாஜி கோவைக்கு வந்துருக்கிறார் என்று முன்வைக்கப்படும் விமர்சனங்களை எப்படி பார்க்கிறீர்கள்?"

``நான் அதை விமர்சனமா பார்கல. தேர்தல் களத்துல மக்களை சந்திச்சு வீழ்த்த முடியாதவங்கதான் இந்த மாதிரி ஒரு செய்திகளைத் தொடர்ந்து பரப்புறதை வாடிக்கையா வச்சிருக்காங்க. அதைப் பார்த்தா சில நேரங்கள்ல நமக்கு சிரிப்பு வரும். பார்த்துட்டு சிரிச்சிட்டு நாம கடந்து போயிரணும். உண்மையாவே தைரியம் இருந்தா, அவங்கமேல நம்பிக்கை இருந்தா அரசியல் களத்துல மக்களை சந்திச்சு வாக்குகளை கேட்டு வெற்றிபெறணும். என்னால ஜெயிக்க முடியும்ங்கிற நம்பிக்கை இல்லாததாலதான் இந்த மாதிரியான பிரசாரங்களை முன்னெடுக்கிறாங்க. நான் பல தேர்தல்களைப் பார்த்துட்டேன். சில கருத்து கணிப்புகள்கூட எனக்கு நெகட்டிவாகவே போடுவாங்க. ஆனா, ரிசல்ட் வரும்போது எனக்கு பாசிட்டிவாதான் இருக்கும் நான்தான் ஜெயிப்பேன். மக்களின் தேவை என்னங்கிறதை தெரிஞ்சு அதை சரிசெய்யுறதுல கவனம் செலுத்தினா மக்களின் நன்மதிப்பை பெற முடியும். அதைவிட்டுட்டு, அவதூறுகளை பரப்பி வெல்ல முடியாது!"

``கோவை தெற்கு தொகுதியில் கள நிலவரம் எப்படி இருக்கு. வெற்றி எந்தளவுக்கு சாத்தியம்?"

``ரொம்ப நல்லா இருக்கு. நடந்து போகும்போது மக்கள் எவ்வளவு சந்தோஷமா ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுக்கிறாங்க. குறிப்பா முதலமைச்சர்மீது மக்கள் நம்பிக்கை வச்சிருக்காங்க. அவர் செயல்படுத்திய திட்டங்கள் இனி கொடுத்திருக்கக்கூடிய வாக்குறுதிகள் இது இரண்டையும் வெச்சு முதலமைச்சரை சீர்தூக்கி பார்க்கறாங்க. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் மக்களுடைய எண்ணங்கள் என்னன்னு கேட்டீங்கன்னா தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரசியல் தலைவர்களில் ஒரு ஆளுமைமிக்க முதலமைச்சரா நம்முடைய முதலமைச்சரைப் பார்க்கறாங்க அந்த நம்பிக்கையில வாக்களிக்க மக்கள் தயாரா இருக்காங்க''

`கரூர் விஷயத்துக்கு வரேன்... நான் போலீஸ் கொடுத்த டைம்க்குதான் வந்தேன்.!' - விஜய் ஓப்பன் டாக்

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தின் கடைசி நாளான இன்று, நந்தனம் YMCA மைதானத்தில் தவெக தலைவர் விஜய் தனது கடைசி பிரசார உரையை ஆற்றியிருந்தார்.விஜய் பேசியதாவது, ``தமிழ்நாட்டுல இதுவரைக்கும் வாங்காத அளவுக்க... மேலும் பார்க்க

'ஸ்டாலின் தன் தந்தை கலைஞரை சாகும்வரை கவனித்துக்கொண்டார்; ஆனால் எனக்கு வாய்த்த பிள்ளை'- ராமதாஸ்

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவர் மகன் அன்புமணி இடையே கருத்து வேறுபாடு நீடித்து வரும் நிலையில், இருவரும் தங்களுக்குத்தான் கட்சி சொந்தம் எனக் கூறி வருகின்றனர்.`உண்மையான பா.ம.க., நாங்கள்தான்' எனக் ... மேலும் பார்க்க

காட்பாடி: `ஊராட்சிகளில் உள்கட்டமைப்பு வளர்ச்சி’ - வீடுதோறும் கடிதம்; கவனம் ஈர்த்த துரைமுருகன்

தி.மு.க பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் தனது காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் நிலையில், இன்றைய தினம் இறுதிக்கட்ட பரப்புரையில் தீவிரம் காட்டி வருகிறார். இதனிடையே, `உங... மேலும் பார்க்க

`என்னைக் கொல்ல முயற்சி; செந்தில் பாலாஜியும் அவர் தம்பியும்தான்..!' - எம்.ஆர்.விஜயபாஸ்கர் `பகீர்'

கரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். திமுக சார்பில் ஆசி.தியாகராஜன் களத்தில் உள்ளார்.கரூர் தொகுதியில் உள்ள முக்கிய பிரச்னைகளில் ஒன்றான இனா... மேலும் பார்க்க