செய்திகள் :

காட்பாடி: `ஊராட்சிகளில் உள்கட்டமைப்பு வளர்ச்சி’ - வீடுதோறும் கடிதம்; கவனம் ஈர்த்த துரைமுருகன்

post image

தி.மு.க பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் தனது காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் நிலையில், இன்றைய தினம் இறுதிக்கட்ட பரப்புரையில் தீவிரம் காட்டி வருகிறார். இதனிடையே, `உங்களின் குரலாக ஒரு மடல்’ என்ற தலைப்பில் தனது தொகுதியிலுள்ள ஊராட்சிகள் ஒவ்வொன்றிலும் பெறப்பட்ட கோரிக்கைகளை தொகுத்து, அதை கடிதமாக தயார் செய்து, வீடுதோறும் சென்றடையச் செய்திருக்கிறார் துரைமுருகன்.

துரைமுருகன்

அதில், ``எனதருமை ஊராட்சி மக்களே! உங்களின் சேவகனாக பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறேன். உங்கள் ஊராட்சியின் வளர்ச்சிசார்ந்து கீழ்காணும் கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இந்த கோரிக்கைகள் மட்டுமல்லாது, உள்கட்டமைப்பு வளர்ச்சி சார்ந்து, நீங்கள் முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளையும் தொடரவுள்ள திராவிட மாடல் 2.O ஆட்சியில் நிறைவேற்றுவேன் என உறுதியளிக்கிறேன்’’ எனத் தெரிவித்திருக்கிறார் துரைமுருகன்.

`கரூர் விஷயத்துக்கு வரேன்... நான் போலீஸ் கொடுத்த டைம்க்குதான் வந்தேன்.!' - விஜய் ஓப்பன் டாக்

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தின் கடைசி நாளான இன்று, நந்தனம் YMCA மைதானத்தில் தவெக தலைவர் விஜய் தனது கடைசி பிரசார உரையை ஆற்றியிருந்தார்.விஜய் பேசியதாவது, ``தமிழ்நாட்டுல இதுவரைக்கும் வாங்காத அளவுக்க... மேலும் பார்க்க

'ஸ்டாலின் தன் தந்தை கலைஞரை சாகும்வரை கவனித்துக்கொண்டார்; ஆனால் எனக்கு வாய்த்த பிள்ளை'- ராமதாஸ்

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவர் மகன் அன்புமணி இடையே கருத்து வேறுபாடு நீடித்து வரும் நிலையில், இருவரும் தங்களுக்குத்தான் கட்சி சொந்தம் எனக் கூறி வருகின்றனர்.`உண்மையான பா.ம.க., நாங்கள்தான்' எனக் ... மேலும் பார்க்க

`என்னைக் கொல்ல முயற்சி; செந்தில் பாலாஜியும் அவர் தம்பியும்தான்..!' - எம்.ஆர்.விஜயபாஸ்கர் `பகீர்'

கரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். திமுக சார்பில் ஆசி.தியாகராஜன் களத்தில் உள்ளார்.கரூர் தொகுதியில் உள்ள முக்கிய பிரச்னைகளில் ஒன்றான இனா... மேலும் பார்க்க