செய்திகள் :

'Full' பாதுகாப்பு: இனி யாரும் ஆன்லைன் மோசடியில் ஏமாறமாட்டார்கள்?' - RBI-ன் புதிய முயற்சி

post image

தொழில்நுட்பம் அப்டேட் ஆக... ஆக, இன்னொரு பக்கம், ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும், வகைகளும் நீண்டுகொண்டே போகின்றன.

இந்த மோசடிகளுக்குப் பெரியவர்கள், சிறியவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள் என எந்த வித்தியாசமும் இல்லை.

ஓய்வுப்பெற்ற அரசு அதிகாரிகள் முதல் சிட்டிங் எம்.பி வரை டிஜிட்டல் அரஸ்ட் போன்கால் வருகின்றன...வந்திருக்கின்றன. ஐ.டியில் வேலைபார்க்கும் ஜென் Z கிட்ஸ்களுக்குக் கூட, 'பொருள் டெலிவரி செய்ய வந்துருக்கோம்... OTP சொல்லுங்க' என்று வகை வகையாக மோசடிகள் நடந்துகொண்....டே இருக்கின்றன.

இந்த மோசடிகளுக்கு ஃபுல் ஸ்டாப் வைக்க இந்திய ரிசர்வ் வங்கி சில பரிந்துரைகளை முன்னெடுத்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி | RBI
இந்திய ரிசர்வ் வங்கி | RBI

ஆன்லைன் மோசடி ஒன்று நடந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம். அதை சில நிமிடங்களிலேயே கண்டுபிடித்திருப்போம்.

ஆனால், பணம் ஏற்கெனவே மோசடி பேர்வழியின் வங்கிக் கணக்கிற்குச் சென்றுவிட்டதால், அடுத்து ஒன்றும் செய்ய முடியாது. வங்கிகளை நாடினாலும், பணம் மோசடி பேர்வழியின் வங்கிக் கணக்கில் இருந்தால் மட்டும் தான், அந்தப் பணத்தை ஃப்ரீஸ் செய்ய முடியும்.

இதற்கும், வங்கியை மோசடி நடந்த இரண்டு மணிநேரத்திற்குள் தொடர்புகொள்ள வேண்டும். இது பெரிய நடைமுறை. பதற்றத்தில் பலராலும் அத்தனை நடைமுறையையும் செய்து முடிக்க முடியாது.

அதனால், இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய நடைமுறைப்படி,

ஒரு நபரிடமிருந்து இன்னொரு நபருக்கு பணம் பரிவர்த்தனை செய்யும்போது, அந்தப் பணம் பெறுநரின் வங்கிக்கணக்கில் சென்று சேர 1 மணி நேரம் ஆகும்.

அந்த 1 மணிநேரத்திற்குள், மோசடி கண்டுபிடிக்கப்பட்டால், பணம் பரிவர்த்தனை ஆகாமல் தடுத்துவிடும். இது ரூ.10,000-க்கு மேலான பணப்பரிவர்த்தனைகளுக்கே பொருந்தும்.

மோசடிகளில் பெறப்படும் பணம் பெரும்பாலும் தனிநபரின் வங்கிக் கணக்கில் தான் பெறப்படும். அதற்கு தான், இந்தச் செக்.

இது நெட் பேங்கிங், RTGS, IMPS, NEFT, வாலட் பேங்கிங் ஆகியவற்றிற்கும் பொருந்தும்.

பரிவர்த்தனை
பரிவர்த்தனை

அடுத்து,

ஒருவேளை, நாம் ஒருவருக்கு பணம் அனுப்புகிறோம் என்று வைத்துக்கொள்வோம். வங்கி அந்தப் பண பரிவர்த்தனையைச் சந்தேகப்பட்டால், நம்மிடம் மீண்டும் 'Confirmation'-ஐ கேட்கும்.

நாம், 'ஓகே' கொடுத்தப் பின் தான், பெறுநரின் வங்கிக் கணக்கிற்கு அந்தப் பணம் செல்லும்.

ஒவ்வொரு முறை, ஒருவருக்கு பணம் அனுப்பும் போதும், 1 மணிநேரம் கழித்து தான் பணம் செல்லும் என்றால், அது மிகவும் சிரமம். அதனால், வழக்கமாக பணம் அனுப்புகிற நபரை நாம் 'Whitelist' செய்துகொள்ளலாம். அதனால், அந்த நபருக்குப் பணம் சென்று சேர்வதில் தாமதம் இருக்காது.

கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் போன்ற பிசினஸ் வங்கிக் கணக்குகளுக்குச் செல்லும் பரிவர்த்தனையில் இந்தப் பரிந்துரைப்படி தாமதமாகாது.

முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் செய்யும் பரிவர்த்தனைகளில், இடையில், 'நம்பகமான நபர்' என்று ஒருவர் இருப்பார். முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் ரூ.50,000-க்கு மேல் பண பரிவர்த்தனை செய்யும் போது, நம்பகமான நபரின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே, அந்தப் பரிவர்த்தனை முழுமையாக முடியும்.

இந்த நம்பகமான நபரை மாற்ற வேண்டுமானாலும், நபர் மாற 24 மணிநேரம் எடுக்கும். இதுவும் மோசடியைத் தடுப்பதற்கான ஒரு வழி தான்.

இந்திய ரிசர்வ் வங்கியின் இந்தப் பரிந்துரை நடைமுறைக்கு வந்தால், மோசடிகள் தடுக்கப்படுமா? - நீங்க என்ன நினைக்கிறீங்க? கமென்ட்டில் பதிவிடுங்கள்

திண்டுக்கல்: 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாகன பேரணி; மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு | Photo Album

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழு தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குகளை உறுதி செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சரவணன் பல்வேறு விதமான விழிப்புணர்வு பிரசாரங்க... மேலும் பார்க்க

20 பேர் பலியான சத்தீஸ்கர் ஆலை விபத்து: வேதாந்தா நிறுவனர் அனில் அகர்வால் மீது வழக்குப் பதிவு!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சக்தி மாவட்டத்தில் அமைந்துள்ள வேதாந்தா மின் நிலையத்தின் கொதிகலனில் (boiler) ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக, வேதாந்தா ரிசோர்சஸ்... மேலும் பார்க்க

VIP பணிகளுக்காக முடக்கப்பட்ட ஆம்புலன்ஸ்?: 'பறிபோன ஊடகவியலாளர் உயிர்' - பகீர் குற்றச்சாட்டு

மத்தியப் பிரதேசத்தில் 'ஸ்வர்ண் மங்கலம்' (Swarn Mangalam) என்ற மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் தீபக் சோனி. இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று ரைசெனில் நடைபெற்ற ஒரு விவசாயக் கண்காட்சியில் கலந்துகொள்... மேலும் பார்க்க

சரிவிலிருந்து இந்திய ரூபாய் மதிப்பு மீண்டது எப்படி? போர் நிறுத்தம் மட்டும் காரணமல்ல

சில மாதங்களாகவே, இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டு இருந்தது.கடந்த 30-ம் தேதி, இந்திய ரூபாயின் மதிப்பு இன்ட்ரா டேயில் ரூ.95-ஐ கூட தொட்டது. இது வரலாற்றின் புதிய வீழ்ச்சி. இந்த நிலைமையெல்லாம் இப்போது... மேலும் பார்க்க

'திருப்பரங்குன்றத்தைத் தவிர வேறு பிரச்னையே இல்லையா?' - தீப விவகாரத்தில் காட்டமான நீதிபதிகள்

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், `திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த இந்து மக்களுக்கு அனுமதி மறுத்த அதிகாரிகள், ரம்ஜான் அன்று இஸ்லாமியர்கள் மலை மேலே ச... மேலும் பார்க்க

`என் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் கல்லுப்பட்டி ஆலமர மேடை' - நெகிழ்ந்த தங்கம் தென்னரசு

``என் மனதில் என்றும் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும் மேடை இந்தக் கல்லுப்பட்டி ஆலமர மேடைதான்" - தந்தை தங்கப்பாண்டியன் பிரசாரத்தைத் தொடங்கிய ஆலமர மேடையில் தனயன் தங்கம் தென்னரசு உணர்ச்சி பூர்வமான பிரசா... மேலும் பார்க்க