உதயநிதி ஸ்டாலின் வெல்வாரா? | Who will win? | Ground Report | I#57 | துறைமுகம், ச...
சரிவிலிருந்து இந்திய ரூபாய் மதிப்பு மீண்டது எப்படி? போர் நிறுத்தம் மட்டும் காரணமல்ல
சில மாதங்களாகவே, இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டு இருந்தது.
கடந்த 30-ம் தேதி, இந்திய ரூபாயின் மதிப்பு இன்ட்ரா டேயில் ரூ.95-ஐ கூட தொட்டது. இது வரலாற்றின் புதிய வீழ்ச்சி.
இந்த நிலைமையெல்லாம் இப்போது கொஞ்சம் சரியாகி, ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.92 - 93 என இருந்து வருகிறது.
ஏன் இந்த திடீர் மாற்றம் என்ற கேள்விக்கு, 'இந்திய ரிசர்வ் வங்கியின் தலையீடு' முக்கிய காரணம் என்பது பதில்.

எப்படி இதை செய்தது?
ஏப்ரல் 10-ம் தேதிக்குள் (இன்று தான்) இந்திய வங்கிகள் வைத்திருக்கும் டாலரின் அளவு 100 மில்லியன் டாலராக மட்டுமே இருக்க வேண்டும் என்று லிமிட்டை செட் செய்தது இந்திய ரிசர்வ் வங்கி.
இதனால், வங்கிகள் பில்லியன் கணக்கான டாலரை சந்தையில் விற்றன. இதனால், டாலரின் சப்ளை அதிகரித்து, அது இந்திய ரூபாயிற்கு சாதகமாக இருந்தது.
அடுத்ததாக, இந்திய ரூபாயின் மதிப்பை நிலையாக வைக்க, வட்டி விகிதத்தில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை இந்திய ரிசர்வ் வங்கி.
வேறு..?
போர் நிறுத்த அறிவிப்பு... அமைதிப் பேச்சுவார்த்தை போன்ற காரணங்களால், கச்சா எண்ணெயின் விலை சற்று குறைந்துள்ளது மற்றும் டாலருக்கான தேவையும் குறைந்துள்ளது.
இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி 7.4 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனாலும், இந்திய ரூபாயின் மதிப்பு வலுவாகி உள்ளது.





















