செய்திகள் :

காரைக்குடி: 4 மணிநேர 'ரோட் ஷோ' - பேசாமல் சென்ற விஜய்; ஏமாற்றமடைந்த தொண்டர்கள்! - என்ன நடந்தது?

post image

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், த.வெ.க தலைவர் விஜய் இன்று சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். காரைக்குடி தொகுதி வேட்பாளர் பிரபுவை ஆதரித்து, கண்ணதாசன் மணிமண்டபம் அருகே உள்ள திடலில் விஜய் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

காரைக்குடி நட்சத்திர வேட்பாளர்கள் தொகுதி. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தொடர்ந்து அந்தத் தொகுதியில் கோலோச்சும் மாங்குடி என தவெக-வுக்கு சவாலான தொகுதிகளில் ஒன்று. எனவே, இந்த தொகுதியில் விஜய் என்ன பேசுவார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

விஜய்
விஜய்

சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றடைந்த விஜய், அங்கிருந்து பிரத்யேக பிரசார வாகனம் மூலம் காரைக்குடி நோக்கிப் புறப்பட்டார். மதுரையிலிருந்து காரைக்குடி செல்லும் வழிநெடுகிலும் ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் திரண்டிருந்தனர். கூட்ட நெரிசல் காரணமாக விஜய்யின் வாகனம் மெதுவாகவே நகர முடிந்தது.

திறந்தநிலை வாகனத்தின் மேலே நின்றபடி, ரசிகர்களைப் பார்த்துக் கையசைத்து சுமார் 4 மணிநேரத்திற்கும் மேலாக விஜய் சாலைப் பயணம் மேற்கொண்டார்.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, குறிப்பிட்ட அந்த இடத்தில் பிரசாரம் மேற்கொள்ள மதியம் 12 மணி முதல் 2.30 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், வழியெங்கும் நிலவிய கடுமையான கூட்டத்தால் விஜய்யால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பிரசாரத் திடலுக்கு வர முடியவில்லை. அவர் பிற்பகல் 2.40 மணியளவில்தான் மேடைக்கு அருகில் வந்து சேர்ந்தார்.

அனுமதி வழங்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டதாலும், தேர்தல் விதிமீறல் சிக்கல்களைத் தவிர்க்கவும் விஜய் மேடையில் உரையாற்றவில்லை. வாகனத்தில் இருந்தபடியே காரைக்குடி வேட்பாளர் பிரபுவை மட்டும் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

தவெக விஜய் காரைக்குடி
தவெக விஜய் காரைக்குடி

காலை முதலே சுமார் 40 டிகிரிக்கும் மேலான கடும் வெயிலில், தனது தலைவரின் பேச்சைக் கேட்கக் காத்திருந்த தொண்டர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விஜய் ஒரு சில வார்த்தைகளாவது பேசுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் அறிமுகத்தோடு அங்கிருந்து புறப்பட்டதால் தொண்டர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி விஜய் வந்ததால், அங்கு நிலவிய சூழலைத் தேர்தல் அதிகாரிகள் வீடியோ பதிவு செய்துள்ளனர். நேரக் கட்டுப்பாடு மீறப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

'என்னுடைய பணம் இல்லை' முதல் ராஜினாமா வரை: யஷ்வந்த் வர்மா 'கட்டுக்கட்டான' பண வழக்கு|Timeline

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்ட குற்றச்சாட்டு எழுந்தும், ஓராண்டு கழித்து இன்று தான் நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா செய்த செய்தி வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் டைம்லைனை இங்கே காணலாம். ம... மேலும் பார்க்க

அண்ணா நகர் களத்தில் சிற்றரசை முன்னிறுத்திய உதயநிதி! - உச்சகட்ட பரபரப்பில் தேர்தல் பிரசாரம்

அண்ணா நகர் தெருக்கள் முழுவதும் பிரசாரக் குரல் முழங்க, பொதுமக்கள் மத்தியில் உற்சாகம் காணப்பட்டது. திமுக கொண்டு வந்த திட்டங்கள், செய்த வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றைப் பட்டியலிட்டு பேசிய உதயநிதி, "சிற்றரசு... மேலும் பார்க்க

``திமுகவின் 'சைடு டிஷ்' திருமாவளவன்" - தேர்தல் பரப்புரையில் நடிகை விந்தியா சாடல்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பரப்புரை தீவிரமாகியிருக்கிறது. திண்டிவனம் தொகுதி தி.மு.க கூட்டணிக் கட்சியான விசிக-வுக்கு ஒதுகப்பட்டது. அதனடிப்படையில் விசிக பொதுச் செயலாளர் வன்னி அரசு தி... மேலும் பார்க்க

'இடஒதுக்கீடு குறித்த பேச்சு?' - எம்.ஜி.ஆர் சந்தித்த மிகப்பெரிய தோல்வி பற்றி தெரியுமா? | Vote Vibes

தமிழக அரசியலில் தோல்வியே காணாதவர் என்று போற்றப்படும் எம்.ஜி.ஆர் தனது அரசியல் பயணத்தில் ஒரு தேர்தலில் மோசமான தோல்வியைத் தழுவி இருக்கிறார். அது எப்போது தெரியுமா? திமுகவில் இருந்து விலகிய எம்.ஜி.ஆர் 1972... மேலும் பார்க்க

சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் திரும்பிய ஈரான்: சீனா - பாகிஸ்தான் கூட்டணி சாதித்தது என்ன?

கடந்த 38 நாள்களாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மிகக் கடுமையான போர் பதற்றம் நீடித்து வந்தது. திங்களன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ``புதன்கிழமைக்குள் ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படாவிட... மேலும் பார்க்க