செய்திகள் :

``பல நூறு கோடி ரூபாய் முதலீடு; ஒரு காட்சியைக்கூட பகிரக் கூடாது"- ஜன நாயகன் தயாரிப்பாளர் எச்சரிக்கை!

post image

அரசியலில் கவனம் செலுத்தும் வகையில் நடிகர் விஜய், ஜனநாயகன் படம்தான் தனது கடைசி படம் என அறிவித்தார். இந்தப் படத்தில் அவருடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்பட பலர் நடித்துள்​ளனர். கே.​வி.என் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த இப்​படத்தை கடந்த ஜன.9-ல் ரிலீஸ் செய்ய போவ​தாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், இந்தப் படத்​தில் மத நல்லிணக்கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இடம் பெற்​றுள்​ள​தாகக் கூறி, படத்தை மறுஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. பட தணிக்கை சார்ந்த சிக்கல் காரணமாக இந்தப் படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனநாயகன்
ஜனநாயகன்

இந்த நிலையில்தான் ஜனநாயகன் படத்தின் சில நிமிட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பக தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், ``நான் கே.வி.என் புரொடக்ஷன்ஸ் எல்.எல்.பி நிறுவனத்தின் சட்ட ஆலோசகர். எனது கட்சிக்காரரின் அறிவுறுத்தல்களின்படி இந்தப் பொது அறிவிப்பை வெளியிடுகிறேன். எனது கட்சிக்காரர், விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில், அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த 'ஜன நாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆவார்.

பல நூறு கோடி ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், திரையரங்கு, சாட்டிலைட், ஓடிடி மற்றும் வணிக ரீதியாக மிகப்பெரிய மதிப்பைக் கொண்டுள்ளது.

'ஜன நாயகன்' திரைப்படத்தின் சில காட்சிகள், சில நபர்களால் சட்டவிரோதமாக அணுகப்பட்டு, பதிவிறக்கம் செய்யப்பட்டு, நகலெடுக்கப்பட்டு, பல மூன்றாம் தரப்பினருக்கு அனுப்பப்பட்டு, பல்வேறு சமூக ஊடகத் தளங்கள் மூலம் டிஜிட்டல் கசிவு ஏற்படும் தீவிர அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளன என்பது எனது கட்சிக்காரரின் கவனத்திற்கு மிகுந்த அதிர்ச்சியுடனும் அவசரத்துடனும் வந்துள்ளது.

Jananayagan - ஜனநாயகன்
Jananayagan - ஜனநாயகன்

ஜன நாயகன் திரைப்படத்தின் கசிந்த காட்சிகள் அல்லது காணொளிகளை வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப், இணையதளங்கள், டோரண்ட்கள் அல்லது வேறு எந்த டிஜிட்டல் ஊடகம் வழியாகவும் பதிவிறக்கம் செய்வது, அனுப்புவது, பகிர்வது, பதிவேற்றுவது, மீண்டும் பதிவிடுவது, சேமிப்பது அல்லது பரப்புவது ஒரு கடுமையான குற்றச்செயல் மற்றும் பதிப்புரிமை மீறலாகும் என்றும், இதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபரும் தனித்தனியாக குற்றவியல் நடவடிக்கைக்கு உட்படுவார்கள் என்றும் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.

ஜன நாயகன் திரைப்படத்தின் காட்சிகளை சட்டவிரோதமாகப் பதிவிறக்கம் செய்து அனுப்பிய நபருக்கு எதிராக எனது கட்சிக்காரர் ஏற்கெனவே உரிய சட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளார். மேலும், இத்தகைய சட்டவிரோதப் பரப்பலில் ஈடுபட்ட அனைத்து நபர்களுக்கும் எதிராக மேலதிக நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Jana Nayagan - Vijay
Jana Nayagan - Vijay

ஜன நாயகன் தொடர்பான கசிந்த உள்ளடக்கத்தை எந்தவொரு டிஜிட்டல் அல்லது சமூக ஊடகத் தளம் வழியாகவும் எந்த வகையிலும் பதிவிறக்கம் செய்யவோ, பெறவோ, சேமிக்கவோ, அனுப்பவோ, பகிரவோ அல்லது பரப்பவோ கூடாது என்று பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபடும் எவரும், அதன் விளைவுகளுக்குத் தங்கள் சொந்தப் பொறுப்பில், உடனடி உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்." எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: உதயநிதி மீது குற்றச்சாட்டு; ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன?

தமிழகத்தில் தேர்தல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. இன்று காலை இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார். இதற்கிடையில... மேலும் பார்க்க

ஜனநாயகன்: 'விஜய் சாரை கடைசி முறையாக திருவிழா போல் கொண்டாட வேண்டாமா?'- பூஜா ஹெக்டே ஆதங்கம்

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படம் விஜய்யின் கடைசி படம் என்பதால், மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு நிலவி இருந்தது. ஆனால், சென்சா... மேலும் பார்க்க

Jana Nayagan: "இது மன்னிக்க முடியாதது" - 'ஜனநாயகன்' படக்காட்சிகள் கசிந்ததற்கு சூர்யா கண்டனம்

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரி மாதமே வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்சார் சான்றிதழ் கிடைக்காததனால் படத்தின் ரிலீஸ் தடைப்பட்டது. ஜனநாயகன் திரைப்படம்நேற்று இரவு, 'ஜனநாய... மேலும் பார்க்க

சல்மான் கான், யாஷ், மோகன்லால், மம்மூட்டி, நிவின்பாலி.! மாஸ் ஹீரோக்களுடன் அசத்தும் நயன்தாரா லைன்அப்

இந்திய சினிமாவில் 23வது ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. கடந்த 2003ல் மலையாளத்தில் சத்யன் அந்திக்காடின் 'மனசினக்கரே' மூலம் அறிமுகமானவர் 23 ஆண்டுகளுக்கு பிறகும் ஹீரோயினாக பட்டொளிவீசி பறக்கிற... மேலும் பார்க்க

What To Watch: 'LIK', 'தாய் கிழவி', 'TN 2026' - இந்த வார ரிலீஸ்கள் இவைதான்

LIK: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி:நயன்தாரா மற்றும் '7 ஸ்கிரீன் ஸ்டுடியோ' லலித் குமார் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் எழுதி இயக்கியிருக்கும் படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'. பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, கௌர... மேலும் பார்க்க

LIK Review: காதல் தரும் சயின்ஸ் பிக்ஷன் நாக் அவுட் பன்ச்! - லைக், ஷேர், சப்ஸ்கிரைப் செய்யலாமா?

2040-ல் பசுமை உலகத்தில் வைப் வாசேவும் (பிரதீப் ரங்கநாதன்) அவருடைய தந்தை அன்புகடலும் (சீமான்) வசித்து வருகிறார்கள். அலைப்பேசிக்கு அடிமைப்பட்டிருக்கும் சமூகத்தை அதிலிருந்து மீட்பதே இந்த பசுமை உலகத்தின் ... மேலும் பார்க்க