செய்திகள் :

Jana Nayagan: "இது மன்னிக்க முடியாதது" - 'ஜனநாயகன்' படக்காட்சிகள் கசிந்ததற்கு சூர்யா கண்டனம்

post image

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரி மாதமே வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், சென்சார் சான்றிதழ் கிடைக்காததனால் படத்தின் ரிலீஸ் தடைப்பட்டது.

ஜனநாயகன் திரைப்படம்
ஜனநாயகன் திரைப்படம்

நேற்று இரவு, 'ஜனநாயகன்' படத்தின் சில காட்சிகள் இணையத்தில் லீக் ஆனது. இது ரசிகர்களையும், படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இந்நிலையில், திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இப்படியான பைரசியை ஒழிக்க வேண்டும் எனக் குரல் கொடுத்து வருகிறார்கள்.

நடிகர் சிரஞ்சீவி, "'ஜனநாயகன்' திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்திருப்பது என்னை ஆழமாகக் கவலைப்படுத்துகிறது.

சினிமா என்பது நம்பிக்கை, உழைப்பு மற்றும் பலரின் கூட்டுக் கனவுகளால் உருவாக்கப்படுகிறது.

இத்தகைய சம்பவங்கள் தொழில்துறையில் உள்ள அனைவரையும் பாதிக்கின்றன. உழைப்பைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இது நினைவூட்டுகிறது.

சினிமாவை மதிக்கவும் பாதுகாக்கவும் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். பைரசியை ஒழியுங்கள். சினிமாவைக் காப்பாற்றுங்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

'ஜனநாயகன்' படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்திருப்பது பற்றி நடிகர் சூர்யா, "ஒரு முழு குழுவினரின் ஆர்வமும், உழைப்பும் இப்படி ஆக்கப்பட்டிருப்பது மனதை உடைக்கும் வகையிலும், நியாயமற்றதாகவும் இருக்கிறது.

நான் உங்களிடம் உண்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், தயவுசெய்து இந்தப் படத்தை இங்கே பார்க்காதீர்கள், பகிர்ந்துகொள்ளாதீர்கள், அல்லது விவாதிக்காதீர்கள்.

அவர்களின் உழைப்பை மதியுங்கள். நான் என் நண்பர்களுடன் நிற்கிறேன். இந்தச் செயலைக் கண்டிக்கிறேன், இது மன்னிக்க முடியாதது" எனப் பதிவிட்டிருக்கிறார்.

சல்மான் கான், யாஷ், மோகன்லால், மம்மூட்டி, நிவின்பாலி.! மாஸ் ஹீரோக்களுடன் அசத்தும் நயன்தாரா லைன்அப்

இந்திய சினிமாவில் 23வது ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. கடந்த 2003ல் மலையாளத்தில் சத்யன் அந்திக்காடின் 'மனசினக்கரே' மூலம் அறிமுகமானவர் 23 ஆண்டுகளுக்கு பிறகும் ஹீரோயினாக பட்டொளிவீசி பறக்கிற... மேலும் பார்க்க

What To Watch: 'LIK', 'தாய் கிழவி', 'TN 2026' - இந்த வார ரிலீஸ்கள் இவைதான்

LIK: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி:நயன்தாரா மற்றும் '7 ஸ்கிரீன் ஸ்டுடியோ' லலித் குமார் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் எழுதி இயக்கியிருக்கும் படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'. பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, கௌர... மேலும் பார்க்க

LIK Review: காதல் தரும் சயின்ஸ் பிக்ஷன் நாக் அவுட் பன்ச்! - லைக், ஷேர், சப்ஸ்கிரைப் செய்யலாமா?

2040-ல் பசுமை உலகத்தில் வைப் வாசேவும் (பிரதீப் ரங்கநாதன்) அவருடைய தந்தை அன்புகடலும் (சீமான்) வசித்து வருகிறார்கள். அலைப்பேசிக்கு அடிமைப்பட்டிருக்கும் சமூகத்தை அதிலிருந்து மீட்பதே இந்த பசுமை உலகத்தின் ... மேலும் பார்க்க

"பிரபுதேவாவிடம் ரிஷியை நடிக்க கேட்டதும் அவர் கேட்ட கேள்வி..." - 'முதல் முதலாய்' இயக்குநர் டிரஸ்டினா

பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா - ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'முதல் முதலாய்' இசை ஆல்பம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை அள்ளி வருகிறது. இந்த ஆல்பத்தின் பாடலை எழுதியதோடு, இசையும் அமைத்திருக்... மேலும் பார்க்க

``பல நூறு கோடி ரூபாய் முதலீடு; ஒரு காட்சியைக்கூட பகிரக் கூடாது"- ஜன நாயகன் தயாரிப்பாளர் எச்சரிக்கை!

அரசியலில் கவனம் செலுத்தும் வகையில் நடிகர் விஜய், ஜனநாயகன் படம்தான் தனது கடைசி படம் என அறிவித்தார். இந்தப் படத்தில் அவருடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்பட பலர் நடித்துள்​ளனர். கே.​வி.என் பு... மேலும் பார்க்க