செய்திகள் :

சல்மான் கான், யாஷ், மோகன்லால், மம்மூட்டி, நிவின்பாலி.! மாஸ் ஹீரோக்களுடன் அசத்தும் நயன்தாரா லைன்அப்

post image

இந்திய சினிமாவில் 23வது ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. கடந்த 2003ல் மலையாளத்தில் சத்யன் அந்திக்காடின் 'மனசினக்கரே' மூலம் அறிமுகமானவர் 23 ஆண்டுகளுக்கு பிறகும் ஹீரோயினாக பட்டொளிவீசி பறக்கிறார்.

சல்மான் கான், பாலகிருஷ்ணா, மம்மூட்டி, மோகன்லால், யாஷ், நிவின்பாலி என பலரின் படங்களில் பிசியாக இருக்கிறார். ''சினிமாதான் என்னுடைய வாழ்க்கையாக மாறிவிடும் என்று எனக்குத் தெரியாது. ஒவ்வொரு ஃப்ரேமும், ஒவ்வொரு காட்சியும் இன்று என்னை செதுக்கி இருக்கிறது. சினிமாவுக்கு நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்" என்று நெகிழ்ச்சியாக சொல்லும் நயன்தாராவின் லைன் அப் குறித்த அப்டேட் இது.

patriot

தமிழை தவிர இதர மொழிகளில் ஹீரோக்களுடன் நடித்து வரும் நயன்தாரா, தமிழில் ஹீரோயின் சென்ட் ரிக்கில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். 'மூக்குத்தி அம்மன்2', 'மண்ணாங்கட்டி சின்ஸ் 1960', 'ராக்காயி' 'ஹாய்' இவை எல்லாமே ஹீரோயின் சென்ட்ரிக் தான்.

'மூக்கத்தி அம்மன் 2'வை சுந்தர்.சி இயக்கி முடித்துவிட்டார். ஃபேன்டஸி படம் என்பதால் கிராபிக்ஸ் வேலைகள் நடந்து வருகிறது. 'ஹாய்' படத்தில் நயன்தாராவுடன் கவின், பாக்யராஜ், பிரபு, ராதிகா என சீனியர்கள் பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. முதல் சிங்கிள் மே முதல் வாரத்தில் வருமென எதிர்பார்க்கப்படுகிறது. 'யாரடி நீ மோகினி' போல இது ஒரு காதல் கதை என்கிறார்கள்.

nayan

கார்த்தியின் 'சர்தார் 2'வை தயாரித்திருக்கும் நிறுவனம் தான் 'மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' படத்தையும் தயாரித்துள்ளது. யூடியூப்பர் டியூட் விக்கி இயக்கியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து முடிந்திருக்கிறது. யோகிபாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன் என பலரும் நடித்துள்ளனர். விரைவில் இதன் அப்டேட்களை எதிர்பார்க்கலாம்.

ஹீரோயின் சென்ட் ரிக்கான 'ராக்காயி'யை செந்தில் நல்லசாமி இயக்கி வருகிறார். பீரியட் படமான இப்படமும் நயனின் லைனப்பில் உள்ளது.

மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லால் பகத்பாசில் உள்பட பல டாப் ஹீரோக்கள் இணைந்து நடித்துள்ள 'பேட்ரியாட்' படம் ரெடியாகிவிட்டது. கமலின் 'விஸ்வரூபம் 2' படத்தின் எடிட்டரான மகேஷ் நாராயணன், இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இதற்கு முன் மலையாளத்தில் திரைக்கதை, படத்தொகுப்பு, டைரக்ஷன் என பணியாற்றியவர். 'பேட் ரியாட்' மே முதல் தேதியன்று வெளியாகிறது. இது தவிர நிவின்பாலியோடு 'டியர் ஸ்டுடன்ட்ஸ்' என்ற படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர்கள் ஜார்ஜ் பிலிப் ராய், சந்திப் குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தை நிவின்பாலி தனது நண்பர்களோடு இணைந்து தயாரித்திருக்கிறார்.

nayan

கன்னடத்தில் 'கே.ஜி.எஃப்' யாஷ்ஷுடன் 'டாக்ஸிக்' படத்தில் கங்காவாக வருகிறார் நயன். விஜய்யின் 'ஜனநாயாகன்' படத்தை தயாரித்திருக்கும் கே.வி.என் நிறுவனம் தான் 'டாக்ஸிக்'கையும் தயாரித்துள்ளது. பான் இந்தியப்படமாக மிகப்பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் வி.எஃப்.எக்ஸ்.வேலைகள் பெங்களூருவில் ஜரூராக நடந்து வருகிறது. இப்படம் ஜூன் 4ம் தேதி திரைக்கு வருகிறது.

தெலுங்கில் பாலகிருஷ்ணாவோடு நான்காவது முறையாக கைக்கோர்த்திருக்கிறார். பாலகிருஷ்ணாவின் 111வது படத்தின் அறிவிப்பில் 'பேரரசிற்கு ராணி வந்துவிட்டார்' என அவர் கமிட் ஆனதை அறிவித்தனர். சென்ற நவம்பரில் தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கு முன் பாலகிருஷ்ணாவோடு ‘ஸ்ரீராம ராஜ்ஜியம்’'சிம்ஹா', 'ஜெய் சிம்ஹா' ஆகிய படங்களில் பாலகிருஷ்ணாவோடு நடித்திருக்கிறார். பாலிவுட்டில் ஷாரூக்கானின் 'ஜவான்' படத்திற்கு பிறகு இப்போது சல்மான்கானோடு ஜோடி சேருகிறார். விஜய்யை வைத்து 'வாரிசு' படத்தை இயக்கிய வம்சி இப்படத்தை இயக்குகிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடங்குகிறது.

Jana Nayagan: "இது மன்னிக்க முடியாதது" - 'ஜனநாயகன்' படக்காட்சிகள் கசிந்ததற்கு சூர்யா கண்டனம்

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரி மாதமே வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்சார் சான்றிதழ் கிடைக்காததனால் படத்தின் ரிலீஸ் தடைப்பட்டது. ஜனநாயகன் திரைப்படம்நேற்று இரவு, 'ஜனநாய... மேலும் பார்க்க

What To Watch: 'LIK', 'தாய் கிழவி', 'TN 2026' - இந்த வார ரிலீஸ்கள் இவைதான்

LIK: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி:நயன்தாரா மற்றும் '7 ஸ்கிரீன் ஸ்டுடியோ' லலித் குமார் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் எழுதி இயக்கியிருக்கும் படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'. பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, கௌர... மேலும் பார்க்க

LIK Review: காதல் தரும் சயின்ஸ் பிக்ஷன் நாக் அவுட் பன்ச்! - லைக், ஷேர், சப்ஸ்கிரைப் செய்யலாமா?

2040-ல் பசுமை உலகத்தில் வைப் வாசேவும் (பிரதீப் ரங்கநாதன்) அவருடைய தந்தை அன்புகடலும் (சீமான்) வசித்து வருகிறார்கள். அலைப்பேசிக்கு அடிமைப்பட்டிருக்கும் சமூகத்தை அதிலிருந்து மீட்பதே இந்த பசுமை உலகத்தின் ... மேலும் பார்க்க

"பிரபுதேவாவிடம் ரிஷியை நடிக்க கேட்டதும் அவர் கேட்ட கேள்வி..." - 'முதல் முதலாய்' இயக்குநர் டிரஸ்டினா

பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா - ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'முதல் முதலாய்' இசை ஆல்பம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை அள்ளி வருகிறது. இந்த ஆல்பத்தின் பாடலை எழுதியதோடு, இசையும் அமைத்திருக்... மேலும் பார்க்க

``பல நூறு கோடி ரூபாய் முதலீடு; ஒரு காட்சியைக்கூட பகிரக் கூடாது"- ஜன நாயகன் தயாரிப்பாளர் எச்சரிக்கை!

அரசியலில் கவனம் செலுத்தும் வகையில் நடிகர் விஜய், ஜனநாயகன் படம்தான் தனது கடைசி படம் என அறிவித்தார். இந்தப் படத்தில் அவருடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்பட பலர் நடித்துள்​ளனர். கே.​வி.என் பு... மேலும் பார்க்க