செய்திகள் :

'அமெரிக்கா போனால் போகாட்டும்' NATO-விற்கு வேறு ஐடியா சொல்லும் ஜெலன்ஸ்கி; அதில் உக்ரைனுக்கு லாபம்

post image

'நமக்கு வேண்டியபோது உதவவில்லை; இனியும் தேவை வந்தால் உதவமாட்டார்கள்' என்று ஈரான் போரில் அமெரிக்காவிற்கு நேட்டோ உதவாததால் கடும் அதிருப்தியில் இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

இதனால், நேட்டோவில் இருந்து விலகும் பிளானிலும் இருக்கிறார்.

இந்த நேரத்தில் நேட்டோ நாடுகளுக்கு ஐடியா ஒன்றைப் பரிந்துரைக்கிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.
நேட்டோ
நேட்டோ

"நேட்டோவில் இருந்து விலகுவதாக அமெரிக்கா உண்மையில் நினைத்தால், ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு ஐரோப்பிய ஒன்றியத்தைச் சார்ந்தே இருக்கும். ஆனால், இப்போதிருக்கும் நிலையில் இல்லை.

இப்போதைய சூழலில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பல நாடுகள் தேவை என்று நினைக்கிறேன்.

அவை ஐக்கிய ராஜ்ஜியம், உக்ரைன், துருக்கி மற்றும் நார்வே - ஐரோப்பிய நாடுகளின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த நான்கு நாடுகள்.

ஐக்கிய ராஜ்ஜியம், உக்ரைன் மற்றும் துருக்கியின் ராணுவங்களை ஒன்றாக சேர்த்தால், அது ரஷ்யாவின் ராணுவத்தைவிட வலுவாக இருக்கும்.

2030-ற்குள்...

உக்ரைன் மற்றும் துருக்கி இல்லாமல், ஐரோப்பிய நாடுகளால் ரஷ்யாவை ஈடு செய்ய முடியாது.

இந்த நான்கு நாடுகளைச் சேர்ப்பதன் மூலம், பாதுகாப்பான வானம் மற்றும் பெரிய ராணுவப் படையைப் பெறலாம்.

ரஷ்யா 2030-ம் ஆண்டிற்குள் ராணுவத்தில் 2.5 மில்லியன் மக்களைச் சேர்க்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. அப்போது ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பையும், அதன் சார்பின்மையையும் யோசிக்க வேண்டும்.

ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா - உக்ரைன் போர்

முதலில் பாதுகாப்பு தான்

ஐக்கிய ராஜ்ஜியம் ஒரு காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பகுதியாகத் தான் இருந்தது.

துருக்கியைப் பற்றி யோசிக்கவேண்டும் என்கிற போது விவசாயம் குறித்த சில பிரச்னைகள் உண்டு.

ஆனால், சிறந்த பொருளாதாரம் இருக்கும்போது, அனைத்தையும் சமாளிக்கலாம்.

ஆனால், பாதுகாப்பு என்று வரும்போது, அதுதான் முதலில். பின்னர்தான் பொருளாதாரம்" என்று கூறுகிறார்.

ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியதற்குக் காரணமே, நேட்டோவில் உக்ரைன் இணைவதாக எடுத்த முடிவு தான். போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் இந்த முடிவைக் கைவிட வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்திவருகிறது.

இந்த நிலையில், ஜெலன்ஸ்கி மீண்டும் நேட்டோவில் இணைவதில் ஆர்வம் காட்டியுள்ளார்.

Hezbollah: 70 ஆண்டுகாலப் பகை; போர் நிறுத்த நாடகம்; லெபனானைத் தாக்கும் இஸ்ரேல்; பின்னணி என்ன?

``இரண்டு வாரங்களுக்கு ஈரான் போர் நிறுத்தப்படுகிறது'' என்ற செய்தியறிந்து உலக நாடுகள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டு முடிப்பதற்குள், லெபனான் தலைநகர் பெய்ரூட்டைச் சுடுகாடாக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார் இ... மேலும் பார்க்க

வானதி சீனிவாசன் மருத்துவமனையில் திடீர் அட்மிட் - காரணம் என்ன?

பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, கோவை வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களாக கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் உடன் இணைந்து தொகுதிக்குள... மேலும் பார்க்க

"அஸ்ஸாமில் வாக்களிக்க 50,000 பேர் உ.பி-யிலிருந்து வந்திருக்கின்றனர்" - மம்தா 'பகீர்' குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேசியத் தலைவர்களின் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், பா.ஜ.க மீது மேற்கு வங்க முதல்வர் கடுமையான குற்றச்சாட்டுக... மேலும் பார்க்க

“காசு வாங்கி சீட்டை கொடுத்தார் கார்க்கே” - ஹசீனா சையத் பதவி பறிப்பின் பின்னணி!

``மகிளா காங்கிரஸ் கட்சிக்கு எம்.எல்.ஏ சீட் கொடுக்காமல் போனதற்கு காங்கிரஸ் கட்சியில் பணத்திற்கு சீட்டை விற்றதே காரணம்” என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார் மகிளா காங்கிரஸ் மாநில தலைவர் ஹசினா சையத்... மேலும் பார்க்க

“எடப்பாடி தொகுதிக்கு... விஜய் போட்ட புதிய ஸ்கெட்ச்” - விரைவில் அதிரடி அறிவிப்பு!

234 தொகுதிகளில் போட்டியிட வேண்டிய த.வெ.க கட்சி, எடப்பாடி தொகுதியில் போட்டியிட முடியாத காரணத்தினால் 233 தொகுதிகளில் மட்டுமே களமிறங்க உள்ளது. எனவே எடப்பாடி தொகுதியிலும் தனது கொடி பறக்க வேண்டுமென முடிவெட... மேலும் பார்க்க

"இந்தியப் பெண்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்" - ஜெய்ராம் ரமேஷ் காட்டம்

2023-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட 'நாரி சக்தி வந்தன் அதினியம்' எனும் மசோதா மக்களவையிலும், மாநில சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்குகிறது. இந்த மசோதா நிறைவேற்ற 2027-ம் ஆண்டு மக... மேலும் பார்க்க