செய்திகள் :

“எடப்பாடி தொகுதிக்கு... விஜய் போட்ட புதிய ஸ்கெட்ச்” - விரைவில் அதிரடி அறிவிப்பு!

post image

234 தொகுதிகளில் போட்டியிட வேண்டிய த.வெ.க கட்சி, எடப்பாடி தொகுதியில் போட்டியிட முடியாத காரணத்தினால் 233 தொகுதிகளில் மட்டுமே களமிறங்க உள்ளது. எனவே எடப்பாடி தொகுதியிலும் தனது கொடி பறக்க வேண்டுமென முடிவெடுத்துள்ள விஜய் புதிய ஸ்கெட்ச் ஒன்றை போட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும், விசில் சின்னத்தில் த.வெ.க சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டனர். ஆனால், த.வெ.க தலைமையே எதிர்பார்காத ட்விஸ்ட் எடப்பாடி தொகுதியில் நடந்தேறியது. அந்த தொகுதிக்கு த.வெ.க சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருண்குமார் வேட்புமனு முழுமையாக பூர்த்தி செய்யப்படாமல் போனதால் நிராகரிக்கப்பட்டது.

அ.தி.மு.க தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

அதோடு மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்த, அவரின் மனைவி மனுவும் உரிய தகவல் இல்லாமல் போனதால் நிராகரிக்கப்பட்டது. இப்படி ஒரே நேரத்தில் இரண்டு மனுக்களும் நிராகரிக்கப்பட்டதால், த.வெ.க அங்கு போட்டியிட முடியவில்லை. ஏற்கனவே திட்டமிட்டு, தனது வேட்புமனுவில் உரிய தகவல்களை பதிவிடாமல் இருந்ததோடு,வேட்புமனு பரசீலனை அன்று வேட்பாளரும் மாயமாகிவிட்டார்.

“இந்த தொகுதியில் அ.தி.மு,க வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் போட்டியிடுவதால், த.வெ.கவினால் தனது வாக்குகள் பிரிந்துவிடாமல் இருக்கவே, அ.தி.மு.க தரப்பு அருண்குமாரை விலைக்கு வாங்கிவிட்டது“ என த.வெ.க-வினர் புலம்பி வருகிறார்கள்.

``எங்கள் தொகுதிக்கு சரியான வேட்பாளரை நிறுத்தியிருந்தால் இப்படி நடந்திருக்காது” என் த.வெ.க தலைமை நிர்வாகிகளிடம் குமுறியிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து நாம் களம் காண வேண்டுமென விஜய் தனது நிர்வாகிகளிடம் சொல்லியுள்ளார். இதனால் புதிய யுக்தியை த.வெ.க தலைமை கையில் எடுத்துள்ளது.

த.வெ.க தலைமைக்கு நெருக்கமானவர்கள் நம்மிடம், “தற்போது எடப்பாடி தொகுதியில் 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளார்கள். அதில் தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர் வேட்பாளர்களை தவிற பிற வேட்பாளர்கள் அனைவரும் சுயேட்சைகளாக போட்டியிடுகிறார்கள்.

அதில் சுயேட்சையாக களம் இறங்கியுள்ள, பிரேம்குமார் என்கிற வேட்பாளரை த.வெ.க தரப்பு கையில் எடுத்துள்ளது. இந்த வேட்பாளரை த.வெ.க ஆதரவு பெற்ற வேட்பாளராக அறிவித்து, த.வெ.க நிர்வாகிகளை அவருக்கு பணியாற்ற சொல்ல போகிறார்கள். அதாவது எடப்பாடி தொகுதியில் மட்டும், விஜய் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் பிரேம்குமார் களமிறங்க போகிறார்.

பிரேம்குமாருக்கு ஒதுக்கப்டட் சுயேட்சை சின்னதுக்கு ஆதரவு கேடடு,த.வெ.க நிர்வாகிகள் வேலை செய்ய போகிறார்கள்” என்கிறார்கள். காரைக்குடி சுற்றுப்பயணத்தை முடித்து சென்னைக்கு விஜய் வந்தவுடன், இதற்கான அறிவிப்பு அறிக்கையாக வெளியாக உள்ளது.

இந்நிலையில் பிரேம்குமாரை விஜய் தரப்பு கையில் எடுத்த விவரம் அ.தி.மு.க முகாமிற்கு தெரிந்துவிட்டது. அங்கிருந்து பிரேம்குமாரை தொடர்பு கொண்டு, விஜய் ஆதரவுடன் களம் இறங்கவேண்டாம் என் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. ஆனால், த.வெ.க தலைமையிலிருந்தே பிரேம்குமாரை தொடர்பு கொண்டு விஜய்யிடம் போனில் பேச வைத்திருக்கிறார்கள். இந்த டீலிங் சுபமாக முடிந்திருப்பதால், 233 தொகுதியில் விசில் சின்னத்தில் நிற்கும் த.வெ.க, எடப்பாடியில் மட்டும் சுயேட்சை சின்னத்தில் களம் இறங்க தயாராகிவிட்டது என்கிறார்கள்.

Hezbollah: 70 ஆண்டுகாலப் பகை; போர் நிறுத்த நாடகம்; லெபனானைத் தாக்கும் இஸ்ரேல்; பின்னணி என்ன?

``இரண்டு வாரங்களுக்கு ஈரான் போர் நிறுத்தப்படுகிறது'' என்ற செய்தியறிந்து உலக நாடுகள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டு முடிப்பதற்குள், லெபனான் தலைநகர் பெய்ரூட்டைச் சுடுகாடாக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார் இ... மேலும் பார்க்க

வானதி சீனிவாசன் மருத்துவமனையில் திடீர் அட்மிட் - காரணம் என்ன?

பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, கோவை வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களாக கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் உடன் இணைந்து தொகுதிக்குள... மேலும் பார்க்க

"அஸ்ஸாமில் வாக்களிக்க 50,000 பேர் உ.பி-யிலிருந்து வந்திருக்கின்றனர்" - மம்தா 'பகீர்' குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேசியத் தலைவர்களின் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், பா.ஜ.க மீது மேற்கு வங்க முதல்வர் கடுமையான குற்றச்சாட்டுக... மேலும் பார்க்க

“காசு வாங்கி சீட்டை கொடுத்தார் கார்க்கே” - ஹசீனா சையத் பதவி பறிப்பின் பின்னணி!

``மகிளா காங்கிரஸ் கட்சிக்கு எம்.எல்.ஏ சீட் கொடுக்காமல் போனதற்கு காங்கிரஸ் கட்சியில் பணத்திற்கு சீட்டை விற்றதே காரணம்” என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார் மகிளா காங்கிரஸ் மாநில தலைவர் ஹசினா சையத்... மேலும் பார்க்க

'அமெரிக்கா போனால் போகாட்டும்' NATO-விற்கு வேறு ஐடியா சொல்லும் ஜெலன்ஸ்கி; அதில் உக்ரைனுக்கு லாபம்

'நமக்கு வேண்டியபோது உதவவில்லை; இனியும் தேவை வந்தால் உதவமாட்டார்கள்' என்று ஈரான் போரில் அமெரிக்காவிற்கு நேட்டோ உதவாததால் கடும் அதிருப்தியில் இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இதனால், நேட்டோவில் இருந... மேலும் பார்க்க

"இந்தியப் பெண்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்" - ஜெய்ராம் ரமேஷ் காட்டம்

2023-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட 'நாரி சக்தி வந்தன் அதினியம்' எனும் மசோதா மக்களவையிலும், மாநில சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்குகிறது. இந்த மசோதா நிறைவேற்ற 2027-ம் ஆண்டு மக... மேலும் பார்க்க