பாலக்கோடு: கே.பி.அன்பழகனுக்கு டாக்டர் செந்தில்குமாருக்குப் போட்டி எப்படி இருக்கு...
CSK vs DC: "எங்களிடம் பந்துவீச்சில் மிரட்டும் வீரர்கள் இல்லை; அதனால்..." - வெற்றி குறித்து ருதுராஜ்
ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல் 11) ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
தொடர் சரிவுகளுக்குப் பிறகு கிடைத்த இந்த வெற்றி குறித்து கேப்டன் ருதுராஜ், மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

வெற்றி குறித்து ருதுராஜ் பேசியவை: "கடைசியாக ஒரு வெற்றியைப் பதிவு செய்தது நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இன்று ஒட்டுமொத்த அணியின் செயல்பாடும் மிகச்சிறப்பாக இருந்தது.
இந்தத் தொடரில் முதலில் பேட்டிங் செய்யும் போதெல்லாம் நாங்கள் ரன்களைக் குவிப்பதில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறோம், இன்றும் அதற்கான நல்ல அறிகுறிகள் தெரிந்தன.
குறிப்பாக, சஞ்சு சாம்சன் களமிறங்கி எதிரணியின் பந்துவீச்சைச் சிதறடித்த விதம் அருமை; அவர் ஒரு பிரமாதமான இன்னிங்ஸை ஆடினார்.
எங்களது பந்துவீச்சு முயற்சியைப் பார்த்து நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். வெளிப்படையாகச் சொல்லப்போனால், எங்களிடம் பந்துவீச்சில் எதிரணியை மிரட்டும் 'எக்ஸ்-ஃபேக்டர்' (X-factor) வீரர்கள் யாரும் இல்லை. அதனால், பந்துகளைச் சரியான லென்த்தில் வீசுவதிலேயே நாங்கள் அதிகக் கவனம் செலுத்தி வருகிறோம்.

கடந்த சில போட்டிகளில் ஒன்றிரண்டு ஓவர்கள்தான் எங்களுக்கு வெற்றியைப் பறித்தன, ஆனால் இன்று பந்துவீச்சாளர்கள் திட்டத்தைச் சரியாகச் செயல்படுத்தினர்.
சென்னையில் விளையாடுவதே தனி சுகம்தான். முடிவு எதுவாக இருந்தாலும் சென்னை ரசிகர்கள் எப்போதும் எங்களுக்குப் பின்னால் இருப்பார்கள். கிரிக்கெட்டை ரசிக்கும் அழகான மனிதர்கள் அவர்கள்" என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

















