Doctor Vikatan: ஒரு வாரமாக மலம் கழிக்காத 4 வயதுக் குழந்தை; சிகிச்சை தேவையா?
திருமணத்தை நிறுத்திய பெண் உடலில் HIV ரத்தத்தை செலுத்திய வாலிபர்; விரக்தியில் பெண் எடுத்த முடிவு
ஐதராபாத்தை சேர்ந்த சேர்ந்தவர் மனோகர். இவருக்கும் அவரது உறவுக்கான 24 வயது பெண்ணிற்கும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மனோகர் பெற்றோருக்கு எச்.ஐ.வி தொற்று இருந்தது. எனவே மனோகருக்கு எச்.ஐ.வி இருக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதி அப்பெண்ணின் பெற்றோர் மனோகருக்கு ரத்தப் பரிசோதனை செய்து பார்த்தனர். இதில் மனோகருக்கும் எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மனோகருடனான தனது திருமணத்தை அப்பெண் உடனே ரத்து செய்துவிட்டார்.
இதனால் கோபத்தில் மனோகர் தனது உடம்பில் இருந்து எடுக்கப்பட்ட எச்.ஐ.வி பாதித்த ரத்தத்தை எடுத்து அப்பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து அப்பெண்ணின் உடம்பில் கட்டாயப்படுத்தி செலுத்திவிட்டு சென்றுவிட்டார்.

இதனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அப்பெண் மிகவும் மன அழுத்தத்தில் இருந்து வந்தார். வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் வீட்டிற்குள் வசித்து வந்தார். திடீரென அப்பெண் தனது வீட்டில் தூக்குப்போட்டுக்கொண்டார். உடனே அவரை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். எச்.ஐ.வி காரணமாக மன அழுத்ததில் இதுபோன்ற ஒரு விபரீத முடிவை எடுத்ததாக இன்ஸ்பெக்டர் பொச்சரன் தெரிவித்தார்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் சமூக ஊடகங்களில் சித்தரிக்கப்பட்ட விதத்தால் தான் இது போன்ற முடிவை எடுத்ததாக அப்பெண் எழுதி வைத்திருந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே மனோகர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்கொலை எண்ணம் தவறானது. தற்கொலை தண்டனைக்குரிய குற்றம்



















