செய்திகள் :

தொழிலதிபர் ஆனந்த் அம்பானி பிறந்தநாள் பார்ட்டி - குஜராத்தில் குவிந்த பாலிவுட் நட்சத்திரங்கள்!

post image

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகனான ஆனந்த் அம்பானியின் திருமணத்தை முகேஷ் அம்பானி உலகமே வியந்து பார்க்கும் வண்ணம் நடத்தி வைத்தார். இப்போது ஆனந்த் அம்பானியின் பிறந்த நாளும் வித்தியாசமான முறையில் கொண்டாடப்பட்டுள்ளது.

ஆனந்த் அம்பானிக்கு இன்று பிறந்தநாள் என்பதால் நேற்று இரவு மும்பை பாந்த்ரா-ஒர்லி கடல் பாலத்தில் ஆனந்த் அம்பானிக்கு பிறந்தநாள் தெரிவித்து அவரது புகைப்படத்துடன் கூடிய மின்விளக்கு ஜொலித்தது. இது பற்றிய வீடியோ சமூக வலைத்தள பக்கத்தில் வைரலானது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் மும்பையை குஜராத் ஆள்கிறது என்றும், இதற்கு முன்பு சத்ரபதி சிவாஜியின் புகைப்படத்தை இது போன்று பார்த்ததில்லை என்று தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ஆனந்த் அம்பானியின் பிறந்தநாள் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதற்காக சிறப்பு விமானத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஜாம்நகர் சென்றனர். நடிகர் ஷாருக்கான், சல்மான் கான், ரன்வீர் சிங், சஞ்சய் தத், ரிதேஷ் தேஷ்முக், அவரது மனைவி ஜெனிலியா, போனி கபூர், அனன்யா பாண்டே உட்பட பாலிவுட் பிரபலங்கள் அனைவரும் வந்திருந்தனர்.

ஷாருக்கான் தனது மனைவி மற்றும் மகனுடன் தன் வளர்ப்பு நாயையும் அழைத்து வந்திருந்தார். சல்மான் கான் தனது மைத்துனர் ஆயுஷ் சர்மாவுடன் வந்திருந்தார். நேற்று இரவு முழுவதும் பிறந்தநாள் பார்ட்டி களைகட்டி இருந்தது. ஆடலும், பாடலுமாக இருந்தது. முன்னதாக ஆனந்த் அம்பானி தனது பெற்றோருடன் சென்று மும்பையில் உள்ள பிரபலமான சித்தி விநாயக் கோயிலில் தரிசனம் செய்தார். ஆனந்த் அம்பானியின் 31வது பிறந்தநாளையொட்டி ஷீரடி சாய்பாபா கோயில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

துரத்திய போலீஸ்; குளத்திற்குள் 5 மணி நேரம் பதுங்கி இருந்த திருடர்; தாமரை தண்டு மூலம் சுவாசித்தாரா?

மத்தியப் பிரதேசத்தில் திருடன் ஒருவன் போலீஸாரிடமிருந்து தப்பிக்கச் செய்த காரியம் போலீஸாரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அங்குள்ள ரயில்களில் அடிக்கடி பெண்களிடம் திருட்டில் ஈடுபட்டு வந்த திருடன் ஒருவ... மேலும் பார்க்க

மும்பை: வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் பூச்சி; கொதித்த பயணிகள்; ரயில்வேயின் பதில் என்ன?

நாடு முழுவதும் முக்கிய ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் என்ற அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. குளிர்சாதன வசதியுடன் இருக்கை வசதி கொண்ட இந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவும்... மேலும் பார்க்க

குறுக்கு வழி பயணத்தால் விபரீதம்: கிணற்றுக்குள் பாய்ந்த கார்... குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் அருகில் உள்ள தீண்டோரி என்ற இடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கார் ஒன்று சாலையோரம் இருந்த கிணற்றுக்குள் விழுந்து 6 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்... மேலும் பார்க்க

நெருங்கும் ட்ரம்ப் காலக்கெடு; ஈரான் மின் உற்பத்தி மையங்களை பாதுகாக்க மனிதச் சங்கிலி?

ஈரான் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை இன்று மாலை 8 மணிக்குள் திறக்கவில்லையெனில் ஈரானில் உள்ள மின் உற்பத்தி மையங்கள்மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள... மேலும் பார்க்க

"GMTக்குப் பதில் மகாகால் ஸ்டாண்டர்ட் டைம்(MST)"- நேரக்கணக்கீட்டு முறையை மாற்ற கோரும் மத்திய அமைச்சர்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன் நகரில் இருக்கும் மகாகால் கோயில் மிகவும் பிரபலமான கோயில்.தர்மேந்திர பிரதான்சமீபத்தில் உஜ்ஜைன் நகரில் சர்வதேச நேரக் கணக்கீட்டு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கலந்து க... மேலும் பார்க்க

சிறப்புப் படை, 12 விமானங்கள், ஹெலிகாப்டர்கள்- ஈரானுக்குள் நுழைந்த அமெரிக்கா விமானியை மீட்டது எப்படி?

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ஈரான் மீது அமெரிக்க படைகள் F-15E மூலம் குண்டுகளை வீசியது. அப்போது ஈரான் வான் பாதுகாப்பு தடுப்பு ஏவுகணை மூலம் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் இருந்த இரண்டு பே... மேலும் பார்க்க