செய்திகள் :

``மூன்றாம் தர பேச்சாளர்போல எடப்பாடி பழனிசாமி பேசுவது வருத்தம் அளிக்கிறது!" - கனிமொழி

post image

ஈரோடு மேற்கு தொகுதி தி.மு.க வேட்பாளரும், அமைச்சருமான முத்துசாமியை ஆதரித்து தி.மு.க பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழி வெள்ளோடு நால்ரோட்டு பகுதியில் நேற்றிரவு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

தொண்டர்கள் மத்தியில் பேசிய எம்.பி கனிமொழி, "எடப்பாடி பழனிசாமியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்க்க முடிகிறது. பா.ஜ.க - வுடன் கூட்டணி வைத்த நிறைய பேர் என்ன ஆனார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். பீகாரில் பலமுறை முதலமைச்சராக இருந்தவர் இன்று ராஜ்ய சபாவில் உறுப்பினராக இருக்கிறார்.

கனிமொழி

இது போன்று எத்தனையோ கட்சிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. அதே போன்று அமித் ஷா மனது வைத்தால் ஏதாவது ஒரு மாநிலத்திற்கு எடப்பாடி பழனிசாமி கவர்னராகலாம். ஒருபோதும் முதல்வராக முடியாது. எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் பயம், ஜுரத்தைத் தொடர்ந்து தற்போது ஜன்னி வந்து விட்டதால் என்ன பேசுகிறோம், யாரை பேசுகிறோம் எனத் தெரியாமல் பேசி வருகிறார். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய தரத்தைக்கூட புரிந்து கொள்ளாமல் மூன்றாம் தர பேச்சாளர்போல எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது" என்றார்.

சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் திரும்பிய ஈரான்: சீனா - பாகிஸ்தான் கூட்டணி சாதித்தது என்ன?

கடந்த 38 நாள்களாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மிகக் கடுமையான போர் பதற்றம் நீடித்து வந்தது. திங்களன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ``புதன்கிழமைக்குள் ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படாவிட... மேலும் பார்க்க

`சாபக்கேடு' என விமர்சித்த பாகிஸ்தான்; 'அழிவுக்கு அழைப்பு விடுப்பதற்குச் சமம்'- எச்சரிக்கும் இஸ்ரேல்!

``லெபனானிலும் தனது இனப்படுகொலையை அரங்கேற்றும் தீய சக்தியான இஸ்ரேல், மனித குலத்திற்கே ஒரு சாபக்கேடு" என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் கண்டனம் தெரிவித்திருந்தார். தற்போது இஸ்ரேல் இதற... மேலும் பார்க்க

Melania Trump: "எனக்கு எப்ஸ்டீனுடன் தொடர்பா?" - மெலனியா ட்ரம்ப் விளக்கம்

அமெரிக்காவில் சிறுமிகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கைதான ஜெஃப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019 ஆம் ஆண்டு சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார்.எப்ஸ்டீன் பல்வேறு தரப்பினருட... மேலும் பார்க்க