செய்திகள் :

நெருங்கும் ட்ரம்ப் காலக்கெடு; ஈரான் மின் உற்பத்தி மையங்களை பாதுகாக்க மனிதச் சங்கிலி?

post image

ஈரான் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை இன்று மாலை 8 மணிக்குள் திறக்கவில்லையெனில் ஈரானில் உள்ள மின் உற்பத்தி மையங்கள்மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அதேசமயம் போர்நிறுத்தத்திற்கு அமெரிக்கா தெரிவித்த திட்டத்தை ஈரான் நிராகரித்ததோடு, போர்நிறுத்தம் செய்ய ஈரான் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறது. இதனால் மத்திய கிழக்கில் இன்று மாலை கடுமையான தாக்குதல் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுப்படை ஈரானில் மின் உற்பத்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தும் என்பதால் மின் கட்டமைப்புகள் அருகில் மனிதச் சங்கிலி அமைக்கும்படி இளைஞர்களிடம் ஈரான் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து ஈரான் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அலிரெசா ரஹிமி அளித்த பேட்டியில், ''இன்று பிற்பகல் 2 மணிக்கு முக்கிய மின் கட்டமைப்புகள் அருகில் விளையாட்டு வீரர்கள், தடகள வீரர்கள், மாணவர்கள் ஒன்று சேர வேண்டும். இளைஞர்களின் சொந்தப் பரிந்துரையின் பேரிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மின் நிலையங்களைச் சுற்றி ஒரு 'மனித வளையத்தையோ' அல்லது 'மனிதச் சங்கிலியையோ' அமைக்குமாறு, பல்கலைக்கழக இளைஞர்கள், இளம் கலைஞர்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் என பலதரப்பிலிருந்து எங்களுக்குப் பரிந்துரைகள் வந்தன.

ஈரானிய இளைஞர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கான மனிதச் சங்கிலி எனப்படும் இப்பிரச்சாரம், ஒற்றுமையையும் உறுதியையும் பிரதிபலிக்கும் நோக்கம் கொண்டது. நாடு முழுவதிலும் உள்ள இளைஞர்களின் பங்கேற்புடன், மின் நிலையங்களைச் சுற்றி இந்த மனிதச் சங்கிலி உருவாகும். நாட்டின் உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதிலும், ஒரு பொன்னான எதிர்காலத்தை உருவாக்குவதிலும் இளைஞர்களுக்குள்ள அர்ப்பணிப்பின் அடையாளமாக இது விளங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று ரஹிமி கூறினார்.

ட்ரம்ப் அளித்துள்ள பேட்டியில், ``இன்று மாலை 8 மணிக்குத் தாக்குதலைத் தொடங்கி 12 மணிக்குள் அதாவது 4 மணி நேரத்தில் மின் உற்பத்தி மையங்களை முற்றிலுமாக அழிப்போம் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார். தெஹ்ரானில் உள்ள செயற்கை நுண்ணறிவுத் திறன்களுடன் தொடர்புடைய கட்டமைப்புகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய அமெரிக்க செயற்கை நுண்ணறிவுத் தரவு மையத்தை தாக்கப்போவதாக ஈரான் சூசகமாகத் தெரிவித்துள்ளது.

"GMTக்குப் பதில் மகாகால் ஸ்டாண்டர்ட் டைம்(MST)"- நேரக்கணக்கீட்டு முறையை மாற்ற கோரும் மத்திய அமைச்சர்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன் நகரில் இருக்கும் மகாகால் கோயில் மிகவும் பிரபலமான கோயில்.தர்மேந்திர பிரதான்சமீபத்தில் உஜ்ஜைன் நகரில் சர்வதேச நேரக் கணக்கீட்டு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கலந்து க... மேலும் பார்க்க

சிறப்புப் படை, 12 விமானங்கள், ஹெலிகாப்டர்கள்- ஈரானுக்குள் நுழைந்த அமெரிக்கா விமானியை மீட்டது எப்படி?

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ஈரான் மீது அமெரிக்க படைகள் F-15E மூலம் குண்டுகளை வீசியது. அப்போது ஈரான் வான் பாதுகாப்பு தடுப்பு ஏவுகணை மூலம் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் இருந்த இரண்டு பே... மேலும் பார்க்க

"என் மகளின் கண்ணியமே எனக்கு முக்கியம்" - விவாகரத்து பெற்ற மகளை மேள தாளங்களுடன் அழைத்து வந்த தந்தை

உத்தரப்பிரதேசத்தில் கோர்ட்டால் விவாகரத்து வழங்கப்பட்ட மகளை ஆரவாரத்துடன் மேளதாளங்களுடன் தந்தை ஒருவர் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர் ஞானேந்திர சர்மா. ஓய்... மேலும் பார்க்க

600 மைல் சென்று தாக்கும் ஏவுகணை தயார்: ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தும் அமெரிக்கா!

அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல் இரண்டாவது மாதத்தில் சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்கா கூட்டுப்படை நடத்தி வரும் வான்வெளித்தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகி... மேலும் பார்க்க

வீட்டுப் பணியாளருக்கு உரிமையாளர் காட்டிய அன்பு; நெகிழ வைத்த வைரல் வீடியோ!

நவீன உலகில் இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு நடுவே, எளிமையான அன்பு இன்னும் உயிர்ப்புடன் இருப்பதைச் சில எளிய சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. சமீபத்தில் வைரலான இந்தச் செய்தி, ஒரு முதலாளிக்கும் தொழிலாளிக்கு... மேலும் பார்க்க