செய்திகள் :

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள்? – கரூரிலிருந்து களமிறங்கியது ஏன்?

post image

கரூர் மாவட்டத்தின் பல்வேறு சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த 18 பேர், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இதனிடையே திமுக கரூர் மாவட்டச் செயலாளரும், மேற்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி, கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் நிலையில், மாற்று வேட்பாளராக அவர் தம்பி அசோக்குமார் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் கரூர் மாவட்டத்தின் பல்வேறு சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த கே.எஸ்.ராஜகோபால், பி.கதிரவன், கே.விஜயன், ஜே.சூரியகுமார், கே.ராஜபாண்டியன், எஸ்.சதீஷ்குமார், ஜே.பிரவீண்குமார், ஜி.பாபு, எல்.ஹக்கிம், எம்.முஹமது இஸ்மாயில், என்.அபிலாசன், டி.விக்னேஷ்வரன், பி.மனோஜ், எல்.ஸ்டீபன்ராஜ், பி.யுவராஜ், கே.தினேஷ்குமார், பி.பழனிவேல், எம்.திருஞானம் ஆகிய 18 பேர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இவர்களின் சமூக ஊடக கணக்குகளை ஆராயும்போது பெரும்பாலானவர்கள் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் என்பதும், பலரது முகநூல் பக்கங்களை நண்பர்கள் அல்லாத மற்றவர்கள் பார்க்க முடியாதபடி பூட்டி வைக்கப்பட்டுள்ளதும் தெரியவருகிறது. வழக்கமாக முக்கிய அரசியல் கட்சியினர் சுயேச்சை வேட்பாளர்களைப் பயன்படுத்தி கூடுதல் பூத் ஏஜென்ட்டுகளை வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் பயன்படுத்தவும், அவர்களது கணக்கில் தேர்தல் செலவுகளை செய்தல் போன்றவற்றைச் செய்வதும் வழக்கம். ஆனால் கோவை தெற்கு தொகுதியில் மட்டும் கரூரைச் சேர்ந்த 18 பேர் போட்டியிடுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அசோக்குமார்
அசோக்குமார்

இது தொடர்பாக திமுக நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, ”தேர்தல் பணிகளைச் செய்ய செந்தில் பாலாஜி தனது கரூர் டீமை மட்டுமே நம்புவது வழக்கம். அந்த வகையில் கோவை தெற்கு தொகுதியில் கரூர் டீம் பணியாற்றி வருகிறது. தனது ஆதரவு சுயேச்சை வேட்பாளர்கள் மூலம் கூடுதல் பூத் ஏஜென்ட்டுகளைப் பயன்படுத்தவும், கூடுதல் தேர்தல் செலவுகளுக்கும் கரூரில் இருந்து வேட்பாளர்களை செந்தில் பாலாஜி இறக்கியுள்ளார்.

கரூரைச் சேர்ந்த வேட்பாளர்கள்
கரூரைச் சேர்ந்த வேட்பாளர்கள்

அதுமட்டுமன்றி இவர்களை தனித்தனியாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியாக அனுப்பி, பணிகளைச் செய்து முடிக்கவும் செய்யவும் திட்டமிட்டுள்ளார்” என்றனர்.

ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி கவலைக்கிடமா? - 'கோம் நகரில் தீவிர சிகிச்சை?' - உளவுத்துறை தகவல்!

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் மூத்த உச்சத் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டார். அதே தாக்குதலில் அவர் மகன் மொஜ்தபா கமேனியும் படுகாயமடைந்தத... மேலும் பார்க்க

`ஸ்டாலின் பாஜக-வோடு ரகசிய உடன்பாட்டில் இருக்கிறார்..!'- மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

தமிழகத்தில் தேர்தல் நடக்கவிருக்கும் அதே நேரத்தில் மேற்கு வங்கத்திலும் தேர்தல் நடக்கிறது. அங்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருப்பதால் முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் ... மேலும் பார்க்க

குஜராத் உள்ளாட்சி தேர்தல்: சோஷியல் மீடியாவுக்கு முக்கியத்துவம்; வேட்பாளர் தேர்வில் பாஜக பிளான் என்ன?

குஜராத் மாநிலத்தில் உள்ள மாநகராட்சிகளுக்கு வரும் 26ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் சோசியல் மீடியா முக்கியமான இடத்தை பிடித்து இருக்கிறது. வேட்பாளர் தேர்வு மற்றும் பிரசாரத்திற்கு இந்த சோசியல் மீ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: இடைத்தேர்தலில் போட்டியிடும் அஜித் பவார் மனைவி; எதிர்த்து வேட்பாளரை நிறுத்திய காங்கிரஸ்

மகாராஷ்டிரா மாநிலம் பாராமதியில் பிப்ரவரி இறுதியில் நடந்த விமான விபத்தில் துணை முதல்வர் அஜித்பவார் அகால மரணம் அடைந்தார். இதையடுத்து அஜித்பவார் வகித்து வந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவி மற்றும் துணை ம... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: இடிந்து விழும் நிலையில் ஜலகம்பாறை பேருந்து நிறுத்தம்; அச்சத்தில் இருக்கும் பயணிகள்

திருப்பத்தூர் மாவட்டம், தூய நெஞ்சக் கல்லூரிக்கு அருகில் ஜலகம்பாறை பகுதியை நோக்கிச் செல்லும் சாலையில் அமைந்திருக்கும் பேருந்து நிறுத்தம், தற்போது கடுமையாகச் சேதமடைந்திருப்பதால் அப்பகுதி மக்கள் மற்றும் ... மேலும் பார்க்க

`பாஜகவுக்கு தமிழ்நாட்டில் அடிமை பழனிசாமி, புதுச்சேரியில் ரங்கசாமி!’ - கடுகடுத்த ஸ்டாலின்

``ரங்கசாமியை பொம்மை முதல்வராக வைத்திருக்கிறார்கள்...”இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய நேற்று மாலை புதுச்சேரி வந்த முதல்வர் ஸ்டாலின், ``தமிழ்நாட்டுக்கும், புதுச்சேரிக்கும் எப்போதும்... மேலும் பார்க்க