செய்திகள் :

`48 மணி நேரம் ஓய்வு' - வானதி சீனிவாசன் சிகிச்சை குறித்து மருத்துவமனை விளக்கம்

post image

கோவை வடக்கு தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசன், தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே நேற்று தேர்தல் பரப்புரையின் இடையே வானதி சீனிவாசனுக்கு திடீரென கால் வீக்கம் ஏற்பட்டது. இதனால் அவநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 48 மணி நேரம் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தினர். இதனால் வேட்பாளர் வானதி சீனிவாசன் இல்லாமலே, தொகுதிக்குள் பா.ஜ.க.வினர் அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே வானதி சீனிவாசன் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது, "வானதி சீனிவாசனுக்கு வலது காலில் ஏற்பட்ட லேசான தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் மற்றும் பிற ஆதரவு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, இரண்டு நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்தபோது, அவர் எடுத்த மருந்துகளில் ஒன்றினால் லேசான அலர்ஜி ஏற்பட்டது. இதன் காரணமாக கண்காணிப்பிற்காக ஐசியூ பிரிவிற்கு மாற்றப்பட்டார்." எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜன நாயகன் படக் கசிவு: "தேர்தலைக் குறிவைத்து நடத்தப்பட்ட திட்டமிட்ட அரசியல் சதி" - அன்புமணி காட்டம்

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக கூட்டணியில் இருக்கும் அன்புமணி தரப்பு பா.ம.க தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. திருவண்ணாமலையில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட அன்புமணி செய்தியாளர்களைச் சந்தி... மேலும் பார்க்க

``சீனா பெரிய பிரச்னைகளை சந்திக்கும்" - எச்சரிக்கும் அதிபர் ட்ரம்ப்; பின்னணி என்ன?

ஈரான் - அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோதிலும், இரு தரப்பினரும் அப்பகுதியிலும் அதைச் சுற்றியுள்... மேலும் பார்க்க

`ஒரு பக்கம் பேச்சுவார்த்தை.. மறுபக்கம் போர்க்கப்பல்கள்' - அமெரிக்காவின் இரட்டை வியூகம் பலிக்குமா?

ஈரான் - அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது பிரச்னைக்குரிய இடமாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணையை அமெரிக்க கடற்படை கப்பல்கள் கடந்துசென்றன. வழக்கமாக அமெரி... மேலும் பார்க்க

அதிமுகவுக்காக பேசக் கிளம்புகிறாரா பழ கருப்பையா? - பின்னணி என்ன?

நடக்கவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ இ அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிப்பதென முடிவு செய்துள்ளதாம் பழ கருப்பையா தலைமையிலான தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம் (டிடிகே)2023 ம் ஆண்டு இ... மேலும் பார்க்க