செய்திகள் :

ஸ்பைடர் மேனுக்கே சவால் விடும் 89 வயது பாட்டி! - 27-வது மாடியிலிருந்து அசால்ட்டாக இறங்கி சாகசம்!

post image

சீனாவின் பெய்ஜிங் நகரில் வசிக்கும் 89 வயது மூதாட்டி ஒருவர், தனது அடுக்குமாடி குடியிருப்பின் 27-வது மாடியில் எதிர்பாராத விதமாகப் படுக்கையறைக்குள் சிக்கிக்கொண்டார். கதவு தானாகப் பூட்டிக்கொண்ட நிலையில், அவரது செல்போன் வரவேற்பு அறையில் இருந்ததால் யாரையும் உதவிக்கு அழைக்க முடியவில்லை.

பொதுவாக இது போன்ற சூழலில் பதற்றமடைவது இயல்பு, ஆனால் இந்தப் பாட்டியோ சற்றும் யோசிக்காமல் தனது ஜன்னல் வழியாக வெளியேறி, கட்டடத்தின் வெளிப்புறச் சுவற்றின் வழியாகக் கீழே இறங்கத் துணிந்தார்.

வெறும் கைகளால் ஏர் கண்டிஷனர் மெஷின்களைத் தாங்கும் இரும்பு கம்பிகளைப் பிடித்துக்கொண்டு, 27-வது மாடியிலிருந்து அவர் மெல்ல மெல்லக் கீழே இறங்கத் தொடங்கினார்.

AI

இதைக் கண்ட கட்டடப் பாதுகாப்புப் பணியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பாட்டியைப் பார்த்து நகர வேண்டாம் என்று கத்திய போதிலும், அவர் விடாமுயற்சியுடன் கீழே இறங்கி வந்து அனைவரையும் திகைக்க வைத்தார்.

கிட்டத்தட்ட 21-வது மாடியை அவர் எட்டியபோது, சுமார் 50 மீட்டர் உயரத்தில் தொங்கிக்கொண்டிருந்த அவரைத் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பாதுகாப்பு கயிறுகளைப் பயன்படுத்தி, ஜன்னல் வழியாக அவரை உள்ளே இழுத்துக் காப்பாற்றினர். இத்தனை உயரத்தில் இருந்து கீழே இறங்கியும் அவருக்குச் சிறு காயம்கூட ஏற்படவில்லை என்பது ஆச்சரியத்தின் உச்சம். எனினும், நீண்ட நேரப் போராட்டத்தால் அவர் மிகுந்த சோர்வுடன் காணப்பட்டார்.

AI

மீட்கப்பட்ட பின், "நான் தரைத்தளம் வரை இப்படியே இறங்கிவிடலாம் என்றுதான் நினைத்தேன்" என்று அந்தப் பாட்டி சாதாரணமாகக் கூறியது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. சமூக வலைதளங்களில் இந்தப் பாட்டியின் சாகச வீடியோ வைரலாகி வரும் நிலையில், 89 வயதில் இவருக்கு இருக்கும் மனதிடத்தையும் உடல் வலிமையையும் கண்டு, இவரை "ரியல் லைஃப் ஸ்பைடர் வுமன்" மற்றும் "சூப்பர் பாட்டி" என்று புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

அதே சமயம் எதற்கு இத்தகைய விபரீத முயற்சி என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆந்திரா: நீர்வீழ்ச்சியில் செல்ஃபி எடுக்க முயன்றபோது விபரீதம்; நீரில் மூழ்கி உயிரிழந்த 3 மாணவிகள்!

ஆந்திராவில் செல்ஃபி எடுக்க முயன்ற 3 மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திராவின் அனந்தகிரி மண்டலத்தில் உள்ள முலாகும்மி நீர்வீழ்ச்சிக்கு ஜம்புவலசா கிராமத்தைச... மேலும் பார்க்க

தொழிலதிபர் ஆனந்த் அம்பானி பிறந்தநாள் பார்ட்டி - குஜராத்தில் குவிந்த பாலிவுட் நட்சத்திரங்கள்!

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகனான ஆனந்த் அம்பானியின் திருமணத்தை முகேஷ் அம்பானி உலகமே வியந்து பார்க்கும் வண்ணம் நடத்தி வைத்தார். இப்போது ஆனந்த் அம்பானியின் பிறந்த நாளும் வித்தியாசமான முறையி... மேலும் பார்க்க

துரத்திய போலீஸ்; குளத்திற்குள் 5 மணி நேரம் பதுங்கி இருந்த திருடர்; தாமரை தண்டு மூலம் சுவாசித்தாரா?

மத்தியப் பிரதேசத்தில் திருடன் ஒருவன் போலீஸாரிடமிருந்து தப்பிக்கச் செய்த காரியம் போலீஸாரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அங்குள்ள ரயில்களில் அடிக்கடி பெண்களிடம் திருட்டில் ஈடுபட்டு வந்த திருடன் ஒருவ... மேலும் பார்க்க

மும்பை: வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் பூச்சி; கொதித்த பயணிகள்; ரயில்வேயின் பதில் என்ன?

நாடு முழுவதும் முக்கிய ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் என்ற அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. குளிர்சாதன வசதியுடன் இருக்கை வசதி கொண்ட இந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவும்... மேலும் பார்க்க

குறுக்கு வழி பயணத்தால் விபரீதம்: கிணற்றுக்குள் பாய்ந்த கார்... குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் அருகில் உள்ள தீண்டோரி என்ற இடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கார் ஒன்று சாலையோரம் இருந்த கிணற்றுக்குள் விழுந்து 6 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்... மேலும் பார்க்க

நெருங்கும் ட்ரம்ப் காலக்கெடு; ஈரான் மின் உற்பத்தி மையங்களை பாதுகாக்க மனிதச் சங்கிலி?

ஈரான் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை இன்று மாலை 8 மணிக்குள் திறக்கவில்லையெனில் ஈரானில் உள்ள மின் உற்பத்தி மையங்கள்மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள... மேலும் பார்க்க