செய்திகள் :

'இடஒதுக்கீடு குறித்த பேச்சு?' - எம்.ஜி.ஆர் சந்தித்த மிகப்பெரிய தோல்வி பற்றி தெரியுமா? | Vote Vibes

post image

தமிழக அரசியலில் தோல்வியே காணாதவர் என்று போற்றப்படும் எம்.ஜி.ஆர் தனது அரசியல் பயணத்தில் ஒரு தேர்தலில் மோசமான தோல்வியைத் தழுவி இருக்கிறார். அது எப்போது தெரியுமா?

திமுகவில் இருந்து விலகிய எம்.ஜி.ஆர் 1972-ஆம் ஆண்டு, தனது ஆதரவாளர்களுடன் இணைந்து அதிமுக-வைத் தொடங்குகிறார்.

முதல்வர் அரியணையில் எம்.ஜி.ஆர்

கட்சியைத் தொடங்கிய அவர் 1977-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவைத் தோற்கடித்து முதல்வர் அரியணையில் அமர்ந்தார்.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மூன்றாவது வருடத்தில், 1980-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.

அந்தத் தேர்தலில் திமுக, இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க அதிமுக, ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தைச் சந்தித்தது.

படுதோல்வி

இந்த நாடாளுமன்றத் தேர்தல்தான் எம்.ஜி.ஆருக்குத் தோல்வியைக் கொடுத்தது. அந்தத் தேர்தலில் அதிமுக மொத்தமாகவே இரண்டே இடங்களில்தான் வெற்றி பெற்றது. ஒன்று கோபிச்செட்டிப்பாளையம். மற்றொன்று சிவகாசி. அதேசமயம் திமுக - இந்திரா காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அந்தக் கூட்டணியில் இந்திரா காங்கிரஸ் 23 தொகுதிகளில் போட்டியிட்டு, 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

தோல்விக்கானக் காரணம்

அதேபோல, திமுக 16 தொகுதிகளில் போட்டியிட்டு, அனைத்திலும் வெற்றி பெற்றது.

இந்தத் தோல்வி, எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் அவர் சந்தித்த மிகப்பெரிய தோல்வியாகக் கருதப்படுகிறது.

1980 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, தமிழ்நாட்டில் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்துவது குறித்து எம்.ஜி.ஆர் பேசியதுதான் இந்தத் தோல்விக்கான முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

'4 மணிக்கு முதல்வர் முன்னிலையில் கட்சியில் இணையுங்கள்...' - பிரஷர் போடும் திமுக; குழப்பத்தில் அஜிதா!

முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை 4 மணிக்கு தூத்துக்குடிக்குச் செல்லவிருக்கிறார். அதற்குள் தவெக நிர்வாகி அஜிதாவை திமுக முகாமுக்கு இழுத்து முதல்வர் முன்னிலையில் கட்சியில் இணைத்து விட வேண்டுமென ஒரு டீம் தீவி... மேலும் பார்க்க

பேச்சுவார்த்தை தோல்வி: "ஈரானுக்கு கெட்ட செய்தி; ஆனாலும் ஒரு நல்ல செய்தி" - அமெரிக்கா சொல்வது என்ன?

அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பேசியதாவது..."எங்களுடைய நிபந்தனைகளை ஈரான் ஒத்துக்கொள்ளவில்லை. ... மேலும் பார்க்க

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை: 21 மணி நேரம் நடந்தும் கைக்கூடாதது ஏன்? Quick Points

கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி தொடங்கிய போர், நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் நல்ல முடிவை எட்டும் என்று உலகமே நினைத்திருந்தது.ஆனால், பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லமாபாத்தில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வா... மேலும் பார்க்க

பாலக்கோடு: கே.பி.அன்பழகனுக்கு டாக்டர் செந்தில்குமாருக்குப் போட்டி எப்படி இருக்கு? களநிலவரம் என்ன?

ஐந்து முறை தொடர்ந்து வெற்றிபெற்று ஆறாவது முறையாக பாலகோட்டில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு எதிராக, முன்னாள் எம்.பி டாக்டர் எஸ்.செந்தில்குமாரை தி.மு.க நிறுத்தியுள்ளது.கே.பி.அன்பழகன்... மேலும் பார்க்க

பாஜக பூத் கமிட்டி: "தமிழக பாஜக செயல்வீரர்களை எண்ணி பெருமைப்படுகிறேன்" - மோடி பாராட்டு; காரணம் என்ன?

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களின் பிரசாரம் தீவிரமாகியிருக்கிறது.தமிழ்நாட்டில் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என தேசிய ஜனநாயகக் கூ... மேலும் பார்க்க

திருவள்ளூர்: "விஜய் ஒரு நல்ல நடிகர்; அவ்வளவுதான் தெரியும்" - நடிகை நளினி

திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வி.ஜி. ராஜேந்திரனை ஆதரித்து, பிரபல நடிகை நளினி இன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடு... மேலும் பார்க்க