செய்திகள் :

பேச்சுவார்த்தை தோல்வி: "ஈரானுக்கு கெட்ட செய்தி; ஆனாலும் ஒரு நல்ல செய்தி" - அமெரிக்கா சொல்வது என்ன?

post image

அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பேசியதாவது...

"எங்களுடைய நிபந்தனைகளை ஈரான் ஒத்துக்கொள்ளவில்லை.

நல்ல நம்பிக்கையுடனும், ஒப்பந்தம் மேற்கொள்ளவும் வந்திருக்கிறோம் என்று அதிபர் கூறினார்.

ஆனால், அதற்கான வழி இங்கு எதுவும் இல்லை.

ஜே.டி.வான்ஸ் - ஷெபாஸ் ஷெரீப்
ஜே.டி.வான்ஸ் - ஷெபாஸ் ஷெரீப்

வரும் காலத்தில் ஈரான் எந்தவொரு அணு ஆயுதத்தையும் தயாரிக்கக் கூடாது. இப்போது இருக்கும் வசதியையும் அழிக்க வேண்டும் என்று கேட்டோம். ஆனால், அதில் அவர்கள் உடன்படுவதாக இல்லை.

எங்களுடைய நிபந்தனைகள் என்ன, எங்களுடைய ஒப்புதல்கள் என்ன என்பதை தெளிவாகக் கூறிவிட்டோம். ஆனால், அவர்கள் அதற்கு ஒத்துக்கொள்வதாக இல்லை.

பல விஷயங்கள் குறித்து ஈரானிடம் பேசினோம். அது நல்ல செய்தி.

ஆனால், எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை என்பது கெட்ட செய்தி.

இது அமெரிக்காவை விட, ஈரானுக்குத்தான் மிகுந்த கெட்ட செய்தி" என்று பேசியிருக்கிறார்.

ஈரானின் அரசு செய்தி நிறுவனம் டெலிகிராமில் குறிப்பிட்டுள்ளதாவது...

"ஈரான் மக்களின் தேசிய நலனுக்காக ஈரான் 21 மணி நேரம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது.

ஈரானின்‌ குழு பல முன்னெடுப்புகள் எடுத்தும், அமெரிக்காவின் காரணமில்லாத நிபந்தனைகள் பேச்சுவார்த்தையை முன்னோக்கி எடுத்து செல்லவில்லை.

அதனால்தான், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

ஒரே சந்திப்பில் ஒப்பந்தம் ஏற்பட்டுவிடும் என்கிற எதிர்பார்ப்பு யாருக்கும் இருக்காது" என்று தெரிவித்துள்ளது.

நொய்டா போராட்டம்: `பாக்கிஸ்தான் சதி' - அரசு குற்றச்சாட்டு; 2027 தேர்தலை நோக்கித் திரும்பும் அரசியல்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் குறைந்த ஊதியம் மற்றும் மோசமான பணிச்சூழலைக் கண்டித்து 40,000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலை தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த விவகாரம் அம்மாநிலத்தி... மேலும் பார்க்க

``பிரதமர் மோடிக்கு இது இறுதி எச்சரிக்கை" - முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் வீடியோ

நாளை மறுநாள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறப்பட்டது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றத்தில் தீபம்; மாநில விழாவாக தைப்பூசம் - வெளியானது பாஜகவின் தேர்தல் வாக்குறுதி

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று (ஏப்ரல் 14) பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. மத்திய அமைச்சரும், முன்னாள் தேசிய தலைவருமான ஜேபி நட்டா 'புதிய யுகம் படைக்கும் தாமரை... மேலும் பார்க்க

`8,000 ரூபாய் கூப்பனில் என்ன வாங்கப் போகிறீர்கள்?’ - வீட்டுக்குள் சென்று நலம் விசாரித்த ஸ்டாலின்

தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டையில் நேற்று இரவு தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு, அடுத்தகட்ட பரப்புரைக்காக வேலூருக்கு வந்திருக்கிறார். இன்று மாலை 5 மணியளவில், சென்னை-பெங்க... மேலும் பார்க்க

Election 2026: பதவிக்காக பகையாகிறதா அப்பா - மகன் உறவு; தகிக்கும் தமிழக அரசியல் களம்

'தாயும் பிள்ளையும்தான் என்றாலும் வாயும் வயிறும் வேறு' என்பார்கள். தமிழக அரசியல் களத்தில் இந்தப் பழமொழியை இப்போது கொஞ்சம் மாற்றி 'தகப்பனும் பிள்ளையும்' எனச் சொல்லலாம். வடக்கே மறைந்த முலாயம் சிங் யாதவ் ... மேலும் பார்க்க

'ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம்', 'மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு' - விசிக தேர்தல் அறிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவிருப்பதால், அரசியல் கட்சிகள் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக முதலில் தெரிவித்திருந்த திருமா, பிறகு விலகினார... மேலும் பார்க்க