செய்திகள் :

“திருமாவளவன் முதல்வர் ஆக வேண்டும் என மக்கள் சொல்லும் காலம் வரும்” - திருமா அதிரடி

post image

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் களமிறங்கி இருக்கின்றன.

அந்த வகையில் நேற்று ( ஏப்ரல்.13) செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணியை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

அப்போது பேசிய திருமாவளவன், “ஊடகங்கள் எல்லாம் நான்கு முனை போட்டி என்கிறார்கள், அதுவே தப்பு. இரண்டு முனைதான், இரண்டு அணி தான்.

திமுக தலைமையில் ஒரு அணி, அதிமுக தலைமையில் ஒரு அணி. மற்ற இரண்டு பேரும் தனியாக நிற்கிறார்கள். ஒருத்தர் விசில் அடிக்கிறார்.

இன்னொருத்தர் தனியாக ஆவர்த்தனம் செய்கிறார். அவர்கள் போட்டியிலேயே இல்லை. விஜய்க்கு தானாக கூட்டம் வருகிறது, அதனால் அவர் அடுத்த முதலமைச்சர் என ஊதிப் பெருக்குகிறார்கள்.

ஓடி ஆடி உழைக்கத் தேவையில்லை, மக்களுக்கு தொண்டு செய்ய தேவையில்லை, சினிமாவில் ஆட்டம் போட்டால் போதும், அடுத்த முதலமைச்சர் ஆகிவிட முடியும்.

இப்படி ஒரு கனவு, தமிழ்நாட்டில் இருக்கிற ஹீரோ, டைரக்டர் எல்லோருக்கும் அப்படி ஒரு ஆசை இருக்கிறது. 35 வருடமாக இந்த மக்கள் களத்தில் நிற்கிற நாம் கூட இதுவரையில் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்று சொன்னதில்லை.

திருமாவளவன்
திருமாவளவன்

நமக்கு பிராக்டிக்கல் என்னவென்று தெரியும். கிரவுண்ட் ரியாலிட்டி என்னவென்று தெரியும். மக்களாகப் பார்த்து ஏன் திருமாவளவன் இந்தத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகக்கூடாது என்று சொல்லுகிற காலம் வரவேண்டும், அப்படி வரும்.

ஆனால் பலபேர் கட்சி ஆரம்பித்த உடனே நான்தான் முதலமைச்சர், இங்கே இரண்டே இரண்டு பேருக்குதான் போட்டி, ஒன்று DMK இன்னொன்று TVK என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்" எனப் பேசியிருக்கிறார்.

நொய்டா போராட்டம்: `பாக்கிஸ்தான் சதி' - அரசு குற்றச்சாட்டு; 2027 தேர்தலை நோக்கித் திரும்பும் அரசியல்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் குறைந்த ஊதியம் மற்றும் மோசமான பணிச்சூழலைக் கண்டித்து 40,000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலை தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த விவகாரம் அம்மாநிலத்தி... மேலும் பார்க்க

``பிரதமர் மோடிக்கு இது இறுதி எச்சரிக்கை" - முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் வீடியோ

நாளை மறுநாள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறப்பட்டது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றத்தில் தீபம்; மாநில விழாவாக தைப்பூசம் - வெளியானது பாஜகவின் தேர்தல் வாக்குறுதி

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று (ஏப்ரல் 14) பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. மத்திய அமைச்சரும், முன்னாள் தேசிய தலைவருமான ஜேபி நட்டா 'புதிய யுகம் படைக்கும் தாமரை... மேலும் பார்க்க

`8,000 ரூபாய் கூப்பனில் என்ன வாங்கப் போகிறீர்கள்?’ - வீட்டுக்குள் சென்று நலம் விசாரித்த ஸ்டாலின்

தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டையில் நேற்று இரவு தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு, அடுத்தகட்ட பரப்புரைக்காக வேலூருக்கு வந்திருக்கிறார். இன்று மாலை 5 மணியளவில், சென்னை-பெங்க... மேலும் பார்க்க

Election 2026: பதவிக்காக பகையாகிறதா அப்பா - மகன் உறவு; தகிக்கும் தமிழக அரசியல் களம்

'தாயும் பிள்ளையும்தான் என்றாலும் வாயும் வயிறும் வேறு' என்பார்கள். தமிழக அரசியல் களத்தில் இந்தப் பழமொழியை இப்போது கொஞ்சம் மாற்றி 'தகப்பனும் பிள்ளையும்' எனச் சொல்லலாம். வடக்கே மறைந்த முலாயம் சிங் யாதவ் ... மேலும் பார்க்க

'ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம்', 'மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு' - விசிக தேர்தல் அறிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவிருப்பதால், அரசியல் கட்சிகள் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக முதலில் தெரிவித்திருந்த திருமா, பிறகு விலகினார... மேலும் பார்க்க