AI மீது 'மாயக் காதல்': அமெரிக்கத் தொழிலதிபர் தற்கொலை - கூகுள் மீது வழக்கு
'ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம்', 'மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு' - விசிக தேர்தல் அறிக்கை
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவிருப்பதால், அரசியல் கட்சிகள் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக முதலில் தெரிவித்திருந்த திருமா, பிறகு விலகினார்.
இத்தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகியப் பிறகு அவருடைய கட்சி வேட்பாளர்களுக்காக அவர் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன்.
அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
``காவல்துறை மற்றும் சிறைத்துறையை சீர்திருத்த பாடுபடுவோம்.
ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற பாடுபடுவோம்.
தனியார் துறையிலும் சமூக நீதியை வென்றெடுப்போம்
இருமொழிக் கொள்கை.
கடலும் காடும் கனிமமும் நமதே
விலையில்லா கல்வியைப் பெறுவோம்.

மருத்துவத்தை அடிப்படை உரிமையாக்குவோம்
மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு பெறுவோம்.
மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு.
தனியார் நிறுவனங்களில் சமூக நீதியை வென்றெடுப்போம்.
உழுபவருக்கு நிலம், இருப்பவருக்கு இடம் என்னும் கொள்கையை நடைமுறைப்படுத்துவோம்.
சிறுபான்மையினரைக் காத்திட சிறப்பு சட்டம் இயற்ற போராடுவோம்
மது மற்றும் போதைப் பொருள்களை ஒழிப்பதற்கு பிரசாரம் மேற்கொள்வோம். "













