முதலிரவில் முகத்திரையை எடுக்க ரூ.90 லட்சம்: பெண் வீட்டார் மீது `கொலை முயற்சி' வழ...
Ram Charan: ``நான் கண்டிப்பான தந்தைதான்!" - குழந்தைகள் பற்றி ராம் சரண்
டோலிவுட்டின் முன்னணி நடிகரான ராம் சரண், தற்போது புச்சி பாபு சனா இயக்கத்தில் 'பெத்தி' (Peddi) திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த 2023-ம் ஆண்டு ராம் சரண் - உபாசனா தம்பதிக்கு க்ளின் காரா என்ற மகள் பிறந்தார்.
பின்னர் இந்தாண்டு ஜனவரியில் அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தனர். இந்நிலையில், தனது மூன்று குழந்தைகளுடனான உறவு மற்றும் தனது வளர்ப்பு முறை குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் பகிர்ந்துள்ளார்.

அவர், "வீட்டில் நான் ஒரு கண்டிப்பான அப்பா. குழந்தைகளை குதிக்கவும், மண்ணில் விளையாடவும், உயரமான இடங்களில் ஏறவும், சவால்களை எதிர்கொள்ளவும் அனுமதிப்பவன் நான்.
அவர்களின் தாய் அவர்களை அரவணைப்பவர். ஆனால் தைரியம் தேவைப்படும்போது அவர்கள் என்னிடம்தான் வருவார்கள்.
குழந்தைகள் சுதந்திரமாக வளர வேண்டும்; அவர்கள் சுயமாக உலகைச் சுற்றிப் பார்த்து கற்றுக்கொள்வதையே நான் விரும்புகிறேன்.
அவர்கள் எப்போதுமே என் இதயத்துடிப்பு. அவர்கள் வீட்டில் இல்லாதபோது அந்த இடமே காலியாக இருப்பதுபோல் தோன்றும்.
என் குடும்பம்தான் எனக்கு எல்லாம். எனது பெற்றோரைப் பார்த்து நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் என்னவென்றால், குடும்பத்திற்காக எப்போதும் உடனிருக்கவேண்டும் என்பதுதான்.
எவ்வளவு வேலை இருந்தாலும், வீட்டிற்கு வந்தவுடன் நான் சோம்பேறியாக இருக்க மாட்டேன். என் செல்லப் பிராணிகள் மற்றும் குடும்பத்தினர் அடங்கிய எனது உலகம் ரொம்பவே சிறியது.

ஆனால் அதனை அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டும் என விரும்புகிறேன். முன்பு எனக்கு மூன்று குழந்தைகள் இல்லை, பெரிய பொறுப்புகளும் இல்லை. அப்போது என் வேலை மற்றும் படப்பிடிப்பு மட்டுமே கவனத்தில் இருந்தது.
ஆனால் இப்போது எல்லாவற்றிலும் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். படப்பிடிப்பு முடிந்ததும் என் மகள், மனைவி என ஒவ்வொருவருக்கும் முழுமையாக நேரத்தை ஒதுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்." எனத் தெரிவித்திருக்கிறார்.















