செய்திகள் :

'டார்கெட் 1 லட்சம் வாக்குகள்!' - பெரம்பூரில் வெல்வாரா விஜய்? |களநிலவரம் ஓர் அலசல்!

post image

தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில், பெரம்பூரில் விஜய்யை 1 லட்சம் வாக்குகள் பெற வைப்போம் என டார்கெட் நிர்ணயித்து தொகுதிக்குள் தவெகவினர் பணியாற்றி வருகின்றனர். ஆக்டிவாக பிரசாரம் செய்தாலும் சில இடங்களில் தவெக சறுக்குவதாகவும் களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. பெரம்பூரில் விஜய் வெல்வாரா?

Vijay
Vijay

விஜய் கடந்த மார்ச் 30 ஆம் தேதி அம்பேத்கர் கல்லூரியில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பெரம்பூரிலிருந்து பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார். அன்று மாலையிலிருந்தே தொகுதியில் தவெக நிர்வாகிகள் விஜய்க்காக பிரசாரம் செய்ய தொடங்கிவிட்டனர்.

Vijay
Vijay

'தொகுதியில் மொத்தம் 7 வார்டுகள் இருக்கிறது. அதை 14 வட்டங்களாக பிரித்து வட்டத்துக்கு 50 பேர் கொண்ட டீமை அமைத்து ஒரே சமயத்தில் 700 பேர் தொகுதி முழுவதும் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்து வருகிறோம். எங்களுக்கு நல்ல வரவேற்பும் இருக்கிறது. தலைவரே தொகுதியில் நிற்பதால் மக்கள் விசில் சின்னத்தில் வாக்களிக்க ஆர்வமாகவும் இருக்கின்றனர்.

Vijay
Vijay

அவர்களின் வாக்கை சிந்தாமல் சிதறாமல் பூத்துக்கு கொண்டு வர பூத் கமிட்டியையும் வலுப்படுத்தியிருக்கிறோம். SIR க்குப் பிறகு தொகுதியில் 298 பூத்கள் இருக்கின்றன. பூத்துக்கு ஆக்டிவாக வேலை செய்யக்கூடிய 10 தொண்டர்களை நியமித்திருக்கிறோம். அதேமாதிரி, சென்னையிலேயே அதிகமாக பெரம்பூர் தொகுதியில் 44000 கட்சி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஒரு உறுப்பினர் இன்னும் இரண்டு பேரை கேன்வாஷ் செய்தாலே தொகுதியில் 1,30,000 வாக்குகளை எங்களால் எட்டமுடியும். குறைந்தபட்சமாக நாங்கள் 1 லட்சம் வாக்குகளையாவது எட்ட வேண்டுமென டார்கெட் வைத்து ஓடிக்கொண்டிருக்கின்றோம்' என்கின்றனர்.

தொகுதியை வசப்படுத்தும் வகையில் பெரம்பூரில் இன்னொரு ரவுண்ட் பிரசாரத்தையும் செய்ய விஜய் திட்டமிட்டிருக்கிறாராம். அதுவும் பிரசாரத்தின் கடைசி நாட்களான ஏப்ரல் 20 அல்லது 21 இல் விஜய் தொகுதி முழுவதையும் சுற்றி வரும் வகையில் ரோடு ஷோவுக்கும் திட்டமிட்டு வருகிறார்களாம். தேர்தலுக்கு இரண்டு நாளுக்கு முன்பு தொகுதிக்குள் விஜய் செய்யப்போகும் அந்த பிரசாரம் 1 லட்சம் வாக்குகள் எனும் டார்கெட்டை எட்ட பேருதவியாக இருக்குமென நிர்வாகிகள் வெகுவாக நம்புகின்றனர்.

Vijay
Vijay

ஆனால், தவெகவினர் நினைக்குமளவுக்கு விஜய்யின் வெற்றி எளிமையானதாக இருக்காது என்கின்றனர் மாற்றுக்கட்சியினர். தொகுதியின் களநிலவரம் அறிந்தவர்கள் பேசுகையில், 'தவெகவினர் ஆக்டிவாக பிரசாரம் செய்தாலும் அவர்களின் பிரசாரத்தில் மக்களை ஈர்க்கும் தன்மை இல்லை. விஜய் பெண்களுக்காக அறிவித்த அந்த 10 திட்டங்களை மட்டும்தான் நோட்டீஸாக அடித்து விஜய்யின் முகத்தை காட்டி பிரசாரம் செய்கின்றனர். தொகுதியின் பிரச்னைகளைப் பற்றி அவர்கள் பேசுவதே இல்லை. டாஸ்மாக், போதைப் பொருள்கள், அடிப்படை கட்டுமானம், கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு என லோக்கல் பிரச்னைகள் எதைப் பற்றியுமே அவர்கள் பேசுவதே இல்லை.

இது தொகுதி மக்களுக்கு அவர்களிடம் ஒரு அந்நியத்தன்மையை ஏற்படுத்துகிறது. பாமகவுக்கு தொகுதியில் பலமே இல்லையென்றாலும் திலகபாமா ஆக்டிவாக பிரசாரம் செய்கிறார். தொகுதியின் பிரச்னைகளையும் சரியாக தொட்டு பேசுகிறார். மேலும், 'விஜய் ஏன் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்? பெரம்பூர் மக்கள் மீது நம்பிக்கையில்லையா? இவர் வெற்றிப் பெற்றால் பெரம்பூரை ராஜினாமா செய்து மக்களை கைவிட்டு விடுவார்' என சரியான பாயிண்டை பிடித்து பேசுகிறார். திலகபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு இல்லையென்றாலும், விஜய்யின் வெற்றி வாய்ப்பில் சேதாரத்தை ஏற்படுத்தும் வேலையை சிறப்பாக செய்து வருகிறார்.

Vijay
Vijay

அதேமாதிரி, தொகுதிக்குள் திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.சேகர் மீது நல்ல அபிப்ராயம் இல்லையென்றாலும் அவர்களும் கவனமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். விஜய்யை பற்றிய விமர்சனங்களை கவனமாக தவிர்க்கின்றனர். தங்களின் கட்டமைப்புப் பலத்தை நம்பி, சில நூறு வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர் என போட்டு அரசின் நலத்திட்டங்களையும் தேர்தல் அறிக்கையையும் முன்வைத்து தீவிரமாக கேன்வாஷ் செய்து வருகின்றனர். இந்தப் போட்டியில் விஜய் எளிதாக பெரிய வித்தியாசத்தில் வெல்ல முடியும் என நினைப்பது தவறு. எஞ்சியிருக்கும் நாட்களில் மக்களின் பல்ஸை உணர்ந்து லோக்கல் விஷயங்களை முன்வைத்து பிரசாரம் செய்வது மட்டுமே விஜய்யின் வெற்றிக்கு உதவும்' என்கின்றனர்.

பெரம்பூரில் 2,22,000 வாக்குகள் இருக்கிறது. கடந்த முறை ஆர்.டி.சேகர் 1,05, 267 பெற்று வென்றிருந்தார். இந்த முறை தவெக விஜய்க்காக அதே 1 லட்சம் வாக்குகளை டார்கெட்டாக நிர்ணயித்திருக்கிறது. விஜய் பெரம்பூரை கைப்பற்றுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

பணி மாறுதலுக்கு பணம் வாங்கும் முறை ஒழிக்கப்படும்; திருப்பூரில் விஜய் அறிவித்த வாக்குறுதிகள் என்ன?

தவெக தலைவர் விஜய் இன்று திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய விஜய் சில வாக்குறுதிகளை அறிவித்தார்.விஜய் பேசியதாவது, 'நாளை மறுநாள் நம்முடைய தேர்தல் வாக்குறுதிகளை புத்... மேலும் பார்க்க

பீகார் அரசியலில் புதிய சகாப்தம்: முதல் பாஜக முதலமைச்சராகிறார் சாம்ராட் சவுத்ரி - பின்னணி என்ன?

பீகாரில் கடந்த 20 ஆண்டுகளாக நீடித்த நிதிஷ் குமாரின் ஆட்சி நிறைவுக்கு வந்துள்ள நிலையில், மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பா.ஜ.க-வைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி பதவியேற்க உள்ளார். இதன் மூலம், பீகார் மாநில ... மேலும் பார்க்க

நொய்டா போராட்டம்: `பாக்கிஸ்தான் சதி' - அரசு குற்றச்சாட்டு; 2027 தேர்தலை நோக்கித் திரும்பும் அரசியல்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் குறைந்த ஊதியம் மற்றும் மோசமான பணிச்சூழலைக் கண்டித்து 40,000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலை தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த விவகாரம் அம்மாநிலத்தி... மேலும் பார்க்க

``பிரதமர் மோடிக்கு இது இறுதி எச்சரிக்கை" - முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் வீடியோ

நாளை மறுநாள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறப்பட்டது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றத்தில் தீபம்; மாநில விழாவாக தைப்பூசம் - வெளியானது பாஜகவின் தேர்தல் வாக்குறுதி

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று (ஏப்ரல் 14) பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. மத்திய அமைச்சரும், முன்னாள் தேசிய தலைவருமான ஜேபி நட்டா 'புதிய யுகம் படைக்கும் தாமரை... மேலும் பார்க்க

`8,000 ரூபாய் கூப்பனில் என்ன வாங்கப் போகிறீர்கள்?’ - வீட்டுக்குள் சென்று நலம் விசாரித்த ஸ்டாலின்

தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டையில் நேற்று இரவு தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு, அடுத்தகட்ட பரப்புரைக்காக வேலூருக்கு வந்திருக்கிறார். இன்று மாலை 5 மணியளவில், சென்னை-பெங்க... மேலும் பார்க்க