செய்திகள் :

Kayadu Lohar: `பவழமல்லி' - நானி முதல் துல்கர் சல்மான் வரை; அசத்தும் கயாடு லோஹரின் லைன் அப்

post image

தமிழில் பிரதீப் ரங்கநாதனுடன் 'டிராகன்' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்குப் ஃபேவரிட்டானவர் நடிகை கயாடு லோஹர்.

மல்லுவுட்டில் டோவினோ தாமஸுடன் இவர் இணைந்து நடித்துள்ள 'பள்ளிச்சட்டம்பி' திரைப்படம் நாளை (ஏப்ரல் 15) திரையரங்குகளில் வெளியாகிறது.

கயாடு லோஹர்
கயாடு லோஹர்

சமீபத்தில் சாய் அபயங்கர் இசையில் வெளியான 'பவழ மல்லி' பாடல் சமூக வலைதளங்களில் பயங்கர வைரல் ஆனது. அதில் கயாடு லோஹரின் நடனமும் ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.

இப்படி, கோலிவுட், டோலிவுட், மல்லுவுட் என ஆல் ஏரியாவிலும் கயாடு லோஹரின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது. அடுத்தடுத்து ரிலீஸுக்கும் பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அவை என்னென்ன என்பதைப் பார்ப்போமா...

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடெல்லா - நானி கூட்டணியில் உருவான 'தசரா' படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் அதே கூட்டணியில் உருவாகும் படம் 'தி பாரடைஸ்'. இப்படத்தில் நானிக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கிறார். கடந்த ஏப்ரல் 11-ம் தேதி கயாடுவின் பிறந்தநாளை முன்னிட்டு, கயாடு லோஹரின் லுக் வெளியிடப்பட்டது.

இதில் சுப்பு என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்த 'ஆயா ஷேர்' பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி அதிரடி ஹிட் அடித்திருந்தது. இத்திரைப்படம் இந்தாண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகவுள்ளது.

கயாடு லோஹர்
கயாடு லோஹர்

இதைத் தாண்டி, தமிழில் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக 'இம்மார்டல்' படத்தில் கயாடு நடித்து வருகிறார். மாரியப்பன் சின்னா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

மேலும், டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், நடிகர் அதர்வாவுடன் இணைந்து 'இதயம் முரளி' திரைப்படத்திலும் கயாடு லோஹர் நடித்து வருகிறார். எக்கச்சக்க நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தின் வேலைகளும் நடந்து வருகின்றன.

இதுதவிர, துல்கர் சல்மானுடன் 'ஐ ஆம் கேம்' (I'm Game) படத்திலும் கயாடு லோஹர் நடிக்கிறார். இவை அனைத்துமே இந்தாண்டு ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன.

"தாலி கட்டும் நேரத்தில் ரோஷன் கண்கலங்கிவிட்டார்!" - காதலன் பற்றி நடிகை ஜனனி

'அவன் இவன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜனனி. அப்படத்தைத் தொடர்ந்து 'தெகிடி', 'பலூன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர், பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். Actress J... மேலும் பார்க்க

"கடும் குளிரான நீரில் 30 முதல் 40 நொடிகள் வரை மூச்சை அடக்கி நடித்தேன்" - பகிரும் ஆர்யா

மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'மிஸ்டர் எக்ஸ்' (Mr X) திரைப்படம் வரும் ஏப்ரல் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு பரோமோஷனி... மேலும் பார்க்க

"த.வெ.க வேட்பாளருக்கு ஆதரவு ஏன்?" - தெளிவுப்படுத்தும் நடிகர் ராமராஜன்

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் ராமராஜன் ஆலங்குளம் தொகுதி தவெக வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. "அதிமுக-வில் இருந்தவர் இப்போது... மேலும் பார்க்க

Arya: "அப்படிச் செய்தால் படம் காலியாகிடும்!" - ஆர்யா ஓபன் டாக்

ஆர்யா, கெளதம் கார்த்திக், மஞ்சு வாரியர் ஆகியோர் நடித்திருக்கும் ஸ்பை த்ரில்லர் திரைப்படமான ‘மிஸ்டர் எக்ஸ்’ இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர் ஆர்யா, அவருடைய கரியரில் பல மல்டி ஸ்டாரர் படங்க... மேலும் பார்க்க

விக்ரம் பிறந்தநாளில் காத்திருக்கும் சப்ரைஸ்; ரெடியான புரோமோ வீடியோ - 'சீயான் 63' அப்டேட்!

அடுத்த அதிரடிக்கு ரெடியாகிவிட்டார் 'சீயான்'விக்ரம். 'வீரதீர சூரன்' படத்திற்கு பின் அடுத்து அவர் பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார். ``சில நேரங்களில் மௌனம் என்பது ஒரு மிகப்பெரிய தயாரிப்புக்க... மேலும் பார்க்க