செய்திகள் :

பீகார் அரசியலில் புதிய சகாப்தம்: முதல் பாஜக முதலமைச்சராகிறார் சாம்ராட் சவுத்ரி - பின்னணி என்ன?

post image

பீகாரில் கடந்த 20 ஆண்டுகளாக நீடித்த நிதிஷ் குமாரின் ஆட்சி நிறைவுக்கு வந்துள்ள நிலையில், மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பா.ஜ.க-வைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி பதவியேற்க உள்ளார். இதன் மூலம், பீகார் மாநில வரலாற்றிலேயே பா.ஜ.க-வைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமரப்போகிறார்.

பல முறை கட்சித் தாவலில் ஈடுபட்டாலும் தொடர்ந்து 20 ஆண்டுகளாக பீகார் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருந்தவர் நிதிஷ் குமார். கடந்த சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டு முதல்வரானார். அவருக்கு மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும் என விருப்பம் இருந்ததாகக் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து, அண்மையில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நிதிஷ் குமார் - மோடி
நிதிஷ் குமார் - மோடி

இந்த நிலையில், நிதிஷ் குமார் தனது பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார். பா.ஜ.க சட்டமன்றக் கட்சித் தலைவராகவும், துணை முதலமைச்சராகவும் பணியாற்றி வந்த சாம்ராட் சவுத்ரி ஒருமனதாக முதல்வர் நாற்காலிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சாம்ராட் சவுத்ரி தனது நியமனம் குறித்து எக்ஸ் பக்கத்தில், ``இது எனக்கு வெறும் பதவி மட்டுமல்ல. பீகார் மக்களுக்கு சேவை செய்வதற்கும், அவர்களின் நம்பிக்கையையும் கனவுகளையும் நிறைவேற்றுவதற்கும் கிடைத்த ஒரு புனிதமான வாய்ப்பாகும்.

மக்களின் எதிர்பார்ப்புகளை முழு அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும் நிறைவேற்றுவேன் என்று நான் உறுதியளிக்கிறேன். பிரதமர் மோடியின் திறமையான தலைமையின் கீழ், பீகாரை வளர்ச்சி, நல்லாட்சி மற்றும் செழிப்பின் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்ல நான் தொடர்ந்து பாடுபடுவேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நாளை (ஏப்ரல் 15, 2026) பீகார் முதலமைச்சராக சாம்ராட் சவுத்ரி பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பீகார் அரசியலில் ஜேடியு (JD-U) கட்சியின் ஆதிக்கம் குறைந்து, பா.ஜ.க தனது சொந்த பலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது இந்திய அரசியலில் ஒரு முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது.

பணி மாறுதலுக்கு பணம் வாங்கும் முறை ஒழிக்கப்படும்; திருப்பூரில் விஜய் அறிவித்த வாக்குறுதிகள் என்ன?

தவெக தலைவர் விஜய் இன்று திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய விஜய் சில வாக்குறுதிகளை அறிவித்தார்.விஜய் பேசியதாவது, 'நாளை மறுநாள் நம்முடைய தேர்தல் வாக்குறுதிகளை புத்... மேலும் பார்க்க

'டார்கெட் 1 லட்சம் வாக்குகள்!' - பெரம்பூரில் வெல்வாரா விஜய்? |களநிலவரம் ஓர் அலசல்!

தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில், பெரம்பூரில் விஜய்யை 1 லட்சம் வாக்குகள் பெற வைப்போம் என டார்கெட் நிர்ணயித்து தொகுதிக்குள் தவெகவினர் பணியாற்ற... மேலும் பார்க்க

நொய்டா போராட்டம்: `பாக்கிஸ்தான் சதி' - அரசு குற்றச்சாட்டு; 2027 தேர்தலை நோக்கித் திரும்பும் அரசியல்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் குறைந்த ஊதியம் மற்றும் மோசமான பணிச்சூழலைக் கண்டித்து 40,000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலை தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த விவகாரம் அம்மாநிலத்தி... மேலும் பார்க்க

``பிரதமர் மோடிக்கு இது இறுதி எச்சரிக்கை" - முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் வீடியோ

நாளை மறுநாள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறப்பட்டது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றத்தில் தீபம்; மாநில விழாவாக தைப்பூசம் - வெளியானது பாஜகவின் தேர்தல் வாக்குறுதி

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று (ஏப்ரல் 14) பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. மத்திய அமைச்சரும், முன்னாள் தேசிய தலைவருமான ஜேபி நட்டா 'புதிய யுகம் படைக்கும் தாமரை... மேலும் பார்க்க

`8,000 ரூபாய் கூப்பனில் என்ன வாங்கப் போகிறீர்கள்?’ - வீட்டுக்குள் சென்று நலம் விசாரித்த ஸ்டாலின்

தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டையில் நேற்று இரவு தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு, அடுத்தகட்ட பரப்புரைக்காக வேலூருக்கு வந்திருக்கிறார். இன்று மாலை 5 மணியளவில், சென்னை-பெங்க... மேலும் பார்க்க