கரூர்: `100 இடங்களில் மனிதப்பட்டிகள்; திமுக-வினரை கண்டுகொள்ளாத அதிகாரிகள்' - எம்...
"என்னுடைய நடிப்புக்காக கிண்டல் செய்யப்பட்டேன், ஆனால் இன்று..!"- மாநில விருது வாங்கிய ராஷ்மிகா
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
இவர் இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ‘தி கேர்ள் பிரண்ட்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
இவருடன் நடிகர் தீக்சித் ஷெட்டி கதாநாயகனாகவும், அனு இம்மானுவேல் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் தெலுங்கானா மாநில அரசின் 'Gaddar' திரைப்பட விருதுகள் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நேற்று (மார்ச்.19) நடந்தது.
இதில் 'தி கேர்ள் ஃபிரெண்ட்' படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதை நடிகை ராஷ்மிகா மந்தனா பெற்றார்.
விருது வாங்கிய பின் மேடையில் பேசிய ராஷ்மிகா மந்தனா, "ஒரு காலத்தில் என்னுடைய நடிப்புக்காக கிண்டல் செய்யப்பட்டேன்.
இப்போது என் நடிப்புக்காக விருது கிடைத்துள்ளது. மிகப்பெரிய பாதையை கடந்து வந்ததை போல உணருகிறேன்.
'தி கேர்ள் ஃபிரெண்ட்' மாதிரியான படத்துக்காக விருது கிடைத்துள்ளது மிக சிறப்பான ஒரு விஷயம்.

ஏனெனில் இது போன்ற நிறைய படங்கள் வருவதை ஊக்குவிக்கும். இப்படத்தை கொடுத்த ராகுலுக்கு நன்றி.
நான் இங்கு மருமகளாய் வருவதற்கு முன் மகளாய் வந்தேன். அப்போது நிறைய அன்பு தந்தீர்கள்.
இப்போது ஒரு மருமகளாய் உங்கள் முன் நிற்கிறேன். பெருமையாய் இருக்கிறது, உங்கள் அன்புக்கு என்றும் நன்றியுள்ளவளாய் இருப்பேன்." என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.


















