செய்திகள் :

Rashmika: 'நான் கடந்து வந்த பாதை நீண்டது..!' - மாநில விருதை பெற்ற ராஷ்மிகா நெகிழ்ச்சி

post image

தெலங்கானா மாநில அரசின் 'Gaddar' திரைப்பட விருதுகள் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நேற்று (மார்ச்.19) நடந்தது.

இதில் 'தி கேர்ள் ஃபிரெண்ட்' படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதை நடிகை ராஷ்மிகா மந்தனா பெற்றார்.

இந்நிலையில் விருது வாங்கியது குறித்து ராஷ்மிகா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "நான் சிறுவயதில் இருக்கும்போது, மாநில அளவில் யாராவது விருதுகளை பெற்றால் நான் அவர்களை ஒரு சூப்பர் ஸ்டாரைப் பார்ப்பது போலத் தான் பார்ப்பேன்.

இவர்கள் எப்படி சாதித்தார்கள்? அவர்களுடைய அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கும்?' என்றெல்லாம் யோசிப்பேன்.

ஆனால், நேற்று மாலை நானே ஒரு மாநில விருதைப் பெற்றது எனக்கு மிகவும் ஸ்பெஷலான தருணமாக இருந்தது.

அதனை என் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால் நான் கடந்து வந்த பாதை மிக நீண்டது என்பதை என்னால் உணர முடிகிறது. பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும், மனநிறைவாகவும் இருக்கிறது.

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

இந்த ஆண்டு எனக்கு ஓர் அழகான தொடக்கமாக அமைந்திருக்கிறது. அதுவும் தெலங்கானா மாநிலம் என்னை ஒரு மாநில விருதோடு வரவேற்பது இன்னும் ஸ்பெஷலாக இருக்கிறது.

'தி கேர்ள் பிரண்ட்'-ஐ இவ்வளவு சிறப்பாக உருவாக்கியதற்கு நன்றி ராகுல் (படத்தின் இயக்குநர்)" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

"என்னுடைய நடிப்புக்காக கிண்டல் செய்யப்பட்டேன், ஆனால் இன்று..!"- மாநில விருது வாங்கிய ராஷ்மிகா

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ‘தி கேர்ள் பிரண்ட்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இவருடன் நடிகர் தீக்சித் ஷ... மேலும் பார்க்க

Sreeleela: "சினிமாவில் 'டாக்டர்' ஸ்ரீலீலா அல்ல; வெறும் ஸ்ரீலீலாதான்" - மனம் திறந்த நடிகை ஸ்ரீலீலா

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருப்வர் நடிகை ஸ்ரீலீலா. சமீபத்தில் வெளியான பராசக்தி திரைப்படத்துக்குப் பிறகு, பவன் கல்யாணுடன் இவர் இணைந்து நடித்துள்ள 'உஸ்தாத் பகத் சிங்' படம் உருவாகியிர... மேலும் பார்க்க

ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா ரிசப்ஷன் க்ளிக்ஸ்! |Photo Album

ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா சங்கீத் க்ளிக்ஸ்! |Photo Album மேலும் பார்க்க

Toxic: `மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் சூழல்' யஷ்-ன் 'டாக்சிக்' பட ரிலீஸ் தள்ளிவைப்பு

'கே.ஜி.எஃப்' புகழ் நடிகர் யஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'டாக்சிக்' (Toxic: A Fairy Tale for Grown-ups) திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றியமைக்கப்படுவதாகப் படக்குழு அதிகாரப்பூர்... மேலும் பார்க்க