செய்திகள் :

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை: 21 மணி நேரம் நடந்தும் கைக்கூடாதது ஏன்? Quick Points

post image

கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி தொடங்கிய போர், நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் நல்ல முடிவை எட்டும் என்று உலகமே நினைத்திருந்தது.

ஆனால், பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லமாபாத்தில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் கலந்துகொண்ட பேச்சுவார்த்தை தோல்வியில்தான் முடிந்துள்ளது.

21 மணிநேரம் பேச்சுவார்த்தை நடந்தும், ஏன் நல்ல முடிவு எட்டப்படவில்லை?
காலிபாஃப் - ஷெபாஸ் ஷெரீப்
காலிபாஃப் - ஷெபாஸ் ஷெரீப்

> ஆரம்பத்தில் இருந்தே ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை அமெரிக்கா விரும்பவில்லை.

2025-ம் ஆண்டு ஜூன் மாதம், அமெரிக்கா ஈரானைத் தாக்கிய போது கூட, ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு பகுதிகளைத்தான் குறி வைத்தது.

இப்போதும் போர் தொடங்கியதற்கு இதுவே காரணம்.

நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் ஜே.டி.வான்ஸ் இதை முன்னெடுத்தபோது, இதற்கு ஈரான் தயாராக இல்லை.

> ஹார்முஸ் ஜலசந்தி தங்களிடம் இருக்க வேண்டும் என்றும், அந்தப் பாதையைக் கடக்க ஈரானுக்கு கப்பல்கள் சுங்க வரி கட்ட வேண்டும் என்றும் ஈரான் கூறியிருக்கிறது. ஆனால், அமெரிக்கா இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

> அமெரிக்கா முடக்கி வைத்திருக்கும்‌ ஈரான் சொத்துகளை உடனடியாக விடுவிக்கப்படும் என்று பேசப்பட்டிருக்கிறது. இதற்கு அமெரிக்கா ஒத்துக்கொள்ளவில்லை.

> லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலும் நிறுத்தப்பட வேண்டும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கும் அமெரிக்கா ஒத்துக்கொள்ளவில்லை.

ஆக, பரஸ்பர எந்தக் கோரிக்கைக்கும் இரு நாடுகளும் ஒத்துக்கொள்ளவில்லை. அதனால்தான், பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.

நொய்டா போராட்டம்: `பாக்கிஸ்தான் சதி' - அரசு குற்றச்சாட்டு; 2027 தேர்தலை நோக்கித் திரும்பும் அரசியல்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் குறைந்த ஊதியம் மற்றும் மோசமான பணிச்சூழலைக் கண்டித்து 40,000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலை தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த விவகாரம் அம்மாநிலத்தி... மேலும் பார்க்க

``பிரதமர் மோடிக்கு இது இறுதி எச்சரிக்கை" - முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் வீடியோ

நாளை மறுநாள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறப்பட்டது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றத்தில் தீபம்; மாநில விழாவாக தைப்பூசம் - வெளியானது பாஜகவின் தேர்தல் வாக்குறுதி

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று (ஏப்ரல் 14) பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. மத்திய அமைச்சரும், முன்னாள் தேசிய தலைவருமான ஜேபி நட்டா 'புதிய யுகம் படைக்கும் தாமரை... மேலும் பார்க்க

`8,000 ரூபாய் கூப்பனில் என்ன வாங்கப் போகிறீர்கள்?’ - வீட்டுக்குள் சென்று நலம் விசாரித்த ஸ்டாலின்

தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டையில் நேற்று இரவு தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு, அடுத்தகட்ட பரப்புரைக்காக வேலூருக்கு வந்திருக்கிறார். இன்று மாலை 5 மணியளவில், சென்னை-பெங்க... மேலும் பார்க்க

Election 2026: பதவிக்காக பகையாகிறதா அப்பா - மகன் உறவு; தகிக்கும் தமிழக அரசியல் களம்

'தாயும் பிள்ளையும்தான் என்றாலும் வாயும் வயிறும் வேறு' என்பார்கள். தமிழக அரசியல் களத்தில் இந்தப் பழமொழியை இப்போது கொஞ்சம் மாற்றி 'தகப்பனும் பிள்ளையும்' எனச் சொல்லலாம். வடக்கே மறைந்த முலாயம் சிங் யாதவ் ... மேலும் பார்க்க

'ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம்', 'மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு' - விசிக தேர்தல் அறிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவிருப்பதால், அரசியல் கட்சிகள் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக முதலில் தெரிவித்திருந்த திருமா, பிறகு விலகினார... மேலும் பார்க்க