செய்திகள் :

``திமுகவின் 'சைடு டிஷ்' திருமாவளவன்" - தேர்தல் பரப்புரையில் நடிகை விந்தியா சாடல்!

post image

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பரப்புரை தீவிரமாகியிருக்கிறது. திண்டிவனம் தொகுதி தி.மு.க கூட்டணிக் கட்சியான விசிக-வுக்கு ஒதுகப்பட்டது. அதனடிப்படையில் விசிக பொதுச் செயலாளர் வன்னி அரசு திண்டிவனம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அ.தி.மு.க வேட்பாளர் அர்ஜுனன் போட்டியிடுகிறார். எனவே, அர்ஜுனனை ஆதரித்துப் பிரசாரம் செய்த அ.தி.மு.க நட்சத்திரப் பேச்சாளர் நடிகை விந்தியா,``சமீபத்தில் தனது கூட்டத்தில் மதுபோதையில் வந்த தொண்டரைத் திருமாவளவன் அறைந்தார்.

திருமாவளவன், ஸ்டாலின்

குடித்தவனை அறைவதை விட, தெருவுக்குத் தெரு டாஸ்மாக் வைத்து அவர்களைக் குடிக்க வைத்த அதிகார போதையில் இருக்கும் ஸ்டாலினையோ, பிரேமலதாவையோ அறைய அவருக்குத் துணிச்சல் இருக்கிறதா? திமுக கூட்டணியில் திருமாவளவன் ஒரு கொத்தடிமை போல நடத்தப்படுகிறார். ஹோட்டலில் பரோட்டாவுக்கு எப்படி 'குருமா' ஒரு சைடு டிஷ்ஷோ, அதுபோலத்தான் தி.மு.க கூட்டணிக்கு 'திருமா' ஒரு சைடு டிஷ். அவருக்கு அங்கே சுயமரியாதை இல்லை. வேங்கைவயல், நாங்குநேரி, கள்ளக்குறிச்சி எனத் தனது சொந்த இன மக்கள் பாதிக்கப்பட்டபோது கூட, தனது அரசியல் லாபத்திற்காகத் திருமாவளவன் அமைதி காக்கிறார்.

ஒரு வில் வளைந்தால் அம்பு பாயும், ஆனால் அளவுக்கு மீறி வளைந்தால் அது உடைந்துவிடும். திருமாவளவன் இன்று உடைந்து போன வில்லாக இருக்கிறார். ஜெயலலிதா ஆட்சியில் அவருக்கு உரிய மரியாதை கிடைத்தது. ஆனால் இன்று, தன்னை அவமதிக்கும் நபர்களிடம் கூட வளைந்து கொடுத்து, ஒட்டுமொத்த சமூகத்தையும் தலைகுனிய வைக்கிறார்." எனக் காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

'4 மணிக்கு முதல்வர் முன்னிலையில் கட்சியில் இணையுங்கள்...' - பிரஷர் போடும் திமுக; குழப்பத்தில் அஜிதா!

முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை 4 மணிக்கு தூத்துக்குடிக்குச் செல்லவிருக்கிறார். அதற்குள் தவெக நிர்வாகி அஜிதாவை திமுக முகாமுக்கு இழுத்து முதல்வர் முன்னிலையில் கட்சியில் இணைத்து விட வேண்டுமென ஒரு டீம் தீவி... மேலும் பார்க்க

பேச்சுவார்த்தை தோல்வி: "ஈரானுக்கு கெட்ட செய்தி; ஆனாலும் ஒரு நல்ல செய்தி" - அமெரிக்கா சொல்வது என்ன?

அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பேசியதாவது..."எங்களுடைய நிபந்தனைகளை ஈரான் ஒத்துக்கொள்ளவில்லை. ... மேலும் பார்க்க

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை: 21 மணி நேரம் நடந்தும் கைக்கூடாதது ஏன்? Quick Points

கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி தொடங்கிய போர், நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் நல்ல முடிவை எட்டும் என்று உலகமே நினைத்திருந்தது.ஆனால், பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லமாபாத்தில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வா... மேலும் பார்க்க

பாலக்கோடு: கே.பி.அன்பழகனுக்கு டாக்டர் செந்தில்குமாருக்குப் போட்டி எப்படி இருக்கு? களநிலவரம் என்ன?

ஐந்து முறை தொடர்ந்து வெற்றிபெற்று ஆறாவது முறையாக பாலகோட்டில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு எதிராக, முன்னாள் எம்.பி டாக்டர் எஸ்.செந்தில்குமாரை தி.மு.க நிறுத்தியுள்ளது.கே.பி.அன்பழகன்... மேலும் பார்க்க

பாஜக பூத் கமிட்டி: "தமிழக பாஜக செயல்வீரர்களை எண்ணி பெருமைப்படுகிறேன்" - மோடி பாராட்டு; காரணம் என்ன?

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களின் பிரசாரம் தீவிரமாகியிருக்கிறது.தமிழ்நாட்டில் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என தேசிய ஜனநாயகக் கூ... மேலும் பார்க்க

திருவள்ளூர்: "விஜய் ஒரு நல்ல நடிகர்; அவ்வளவுதான் தெரியும்" - நடிகை நளினி

திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வி.ஜி. ராஜேந்திரனை ஆதரித்து, பிரபல நடிகை நளினி இன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடு... மேலும் பார்க்க