செய்திகள் :

அஜித் ரசிகர்கள் வாக்குகளை குறிவைக்கும் அதிமுக – விஜய் பிரிக்கும் வாக்குகளை ஈடுகட்டுமா?

post image

தமிழ் திரைத்துறைக்கும், தமிழ்நாடு அரசியலுக்கும் நீண்ட நெடிய தொடர்புண்டு. திரைத்துறையில் இருந்து வந்த பலர், அரசியலிலும் ஜொலித்துள்ளனர். அந்த வரிசையில் சமீபத்திய வரவான நடிகர் விஜயின் வருகை, முன்னணி அரசியல் கட்சிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசியல் எதிரி, பாஜக கொள்கை எதிரி என அரசியல் செய்யும் விஜய், எதிர்வரும் தேர்தலில் கணிசமான திமுக எதிர்ப்பு வாக்குகளை பிரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே கரூர் விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்து கூட்டணியில் இணைக்க அதிமுகவினர் மேற்கொண்ட முயற்சிகள் கைகூடவில்லை. இதனால் விஜய் பிரிக்கும் திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறி, திமுகவிற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.

இதனால் முள்ளை முள்ளால் எடுப்பது போல, நடிகர் விஜய்யால் ஏற்படும் பாதிப்பை நடிகர்களை கொண்டே சரி செய்ய திட்டமிட்டுள்ள அதிமுக, அவருக்கு எதிராக உள்ள நடிகர்கள் அஜித்குமார், ரஜினிகாந்த் ரசிகர்களின் ஆதரவை திரட்ட முயன்று வருகிறது. இதன்படி நடிகர் ரஜினிகாந்திற்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது, அஜித்குமார் உடன் எடப்பாடி பழனிசாமி இருக்கும் போட்டோக்களை பரப்புரையில் காட்டுவது போன்றவற்றை அதிமுகவினர் செய்து வருகின்றனர்.

எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணி

இதன் ஒரு பகுதியாக கோவை அதிமுகவினர் ரஜினிகாந்த் மற்றும் அஜித்குமார் ரசிகர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது சகோதரர் அன்பரசன் ஆகியோர் ரஜினிகாந்த் மற்றும் அஜித்குமார் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து அதிமுகவிற்கு ஆதரவு தருமாறு கேட்டு வருகின்றனர். அதிலும் எஸ்.பி.வேலுமணி அஜித்குமார் ரசிகர்களைப் பார்க்கச் செல்லும் இடங்களில் எல்லாம், ‘’அஜித்குமார் ஜெயலலிதா மீது பெரும் மரியாதை கொண்டவர். அடிக்கடி அவரைச் சந்திப்பார். ஜெயலலிதா மறைந்தபோதுகூட வெளிநாட்டில் இருந்து வந்து அவரது சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார். அஜித் மீது எங்களுக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. நீங்கள் அ.தி.மு.க.விற்கு ஆதரவு தர வேண்டும்" எனப் பேசி வருகிறார்.

இந்த நிலையில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பரப்புரை செய்த போது, அஜித் ரசிகர்கள் நற்பணி இயக்கக் கொடியுடன் வந்த அஜித்குமார் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் அஜித்குமார் இரட்டை இலை  சின்னத்திற்கு ஆதரவு தருவது போல அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் உடன் இருக்கும் போட்டோவையை பரிசாக அளித்தனர். இதனால் அதிமுகவினர் உற்சாகம் அடைந்தனர்.

“காசு வாங்கி சீட்டை கொடுத்தார் கார்க்கே” - ஹசீனா சையத் பதவி பறிப்பின் பின்னணி!

``மகிளா காங்கிரஸ் கட்சிக்கு எம்.எல்.ஏ சீட் கொடுக்காமல் போனதற்கு காங்கிரஸ் கட்சியில் பணத்திற்கு சீட்டை விற்றதே காரணம்” என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார் மகிளா காங்கிரஸ் மாநில தலைவர் ஹசினா சையத்... மேலும் பார்க்க

“எடப்பாடி தொகுதிக்கு... விஜய் போட்ட புதிய ஸ்கெட்ச்” - விரைவில் அதிரடி அறிவிப்பு!

234 தொகுதிகளில் போட்டியிட வேண்டிய த.வெ.க கட்சி, எடப்பாடி தொகுதியில் போட்டியிட முடியாத காரணத்தினால் 233 தொகுதிகளில் மட்டுமே களமிறங்க உள்ளது. எனவே எடப்பாடி தொகுதியிலும் தனது கொடி பறக்க வேண்டுமென முடிவெட... மேலும் பார்க்க

'அமெரிக்கா போனால் போகாட்டும்' NATO-விற்கு வேறு ஐடியா சொல்லும் ஜெலன்ஸ்கி; அதில் உக்ரைனுக்கு லாபம்

'நமக்கு வேண்டியபோது உதவவில்லை; இனியும் தேவை வந்தால் உதவமாட்டார்கள்' என்று ஈரான் போரில் அமெரிக்காவிற்கு நேட்டோ உதவாததால் கடும் அதிருப்தியில் இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இதனால், நேட்டோவில் இருந... மேலும் பார்க்க

"இந்தியப் பெண்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்" - ஜெய்ராம் ரமேஷ் காட்டம்

2023-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட 'நாரி சக்தி வந்தன் அதினியம்' எனும் மசோதா மக்களவையிலும், மாநில சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்குகிறது. இந்த மசோதா நிறைவேற்ற 2027-ம் ஆண்டு மக... மேலும் பார்க்க

`கண்டா வரச் சொல்லுங்க ராகுலை கையோட கூட்டி வாருங்க.!' ஸ்டாலினுடன் ஒரே மேடையில் ஏற மறுக்கிறாரா ராகுல்?

கொளுத்திப் போட்ட விஜய்!''கண்டா வரச் சொல்லுங்க..ராகுலைக் கையோட கூட்டி வாருங்க..''திமுக உடன் பிறப்புகள் மற்றும் தமிழக காங்கிரஸ் தொண்டர்களின் இன்றைய சிக்சுவேஷன் சாங் இதுதான்.நடைபெறவிருக்கும் தமிழக சட்டசப... மேலும் பார்க்க