செய்திகள் :

'முதல்வர் கொடுத்த ராஜ்ய சபா எம்.பி சீட்டை பெற மறுத்தேன்...' - அதிர்ச்சியூட்டிய திருமாவளவன்

post image

'தி.மு.க-வுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாக முதல்வர் ஸ்டாலின் சொன்னார், ஆனால் நான் பெற மறுத்துவிட்டேன்' என திருமா பேசியிருப்பது வி.சி.க-வினர் மத்தியில் அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து விரிவாக விசாரித்தோம்.

திருமா
திருமா

வி.சி.க போட்டியிடும் 8 தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார் அக்கட்சித் தலைவர் திருமாவளவன். இச்சூழலில் மார்ச் 6-ம் தேதி காட்டுமன்னார்கோவில் வேட்பாளர் ஜோதிமணி இளையபெருமாளை ஆதரித்து பிரசாரம், செயல்வீரர் கூட்டங்கள் நடத்தப்பட்டன. செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர் வேட்பாளர்கள் தேர்வு, தொகுதி பங்கீடு குறித்துப் பேசினார். அப்போது "தொகுதி பங்கீட்டின்போது முதல்வர் ஸ்டாலின் இடத்திலிருந்து நான் யோசித்தேன். தொகுதிகளை வற்புறுத்தி பெறுவதெல்லாம் எனக்கு வராது. சொல்லப்போனால், 8 என்ற எண்ணிக்கையே முன்மொழிந்ததே நான்தான்.

8 தொகுதிகள் கொடுங்கள்.. உடனே கையெழுத்து போடுகிறேன் எனச் சொன்னேன். அண்ணன் ஸ்டாலின் 7 தொகுதிகளும் 1 ராஜ்ய சபா சீட்டும் தருவதாகச் சொன்னார். ஆனால், ராஜ்ய சபா எம்.பி சீட்டை பெற மறுத்துவிட்டேன். சென்றமுறையே 6 தொகுதிகள்தான் கிடைத்தது. ஆகையால் 8 தொகுதிகள் கொடுத்துவிடுங்கள் என்றேன்" எனப் பேசினார்.

விசிக உயர்நிலைக் குழுக் கூட்டத்தின் தீர்மானம்
விசிக உயர்நிலைக் குழுக் கூட்டத்தின் தீர்மானம்

திருமாவின் இந்த பேச்சு வி.சி.க-வினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 'இரட்டை இலக்க தொகுதிகளும் ஒரு ராஜ்ய சபா சீட்டும் வேண்டும்' என்பதுதான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்ட தீர்மானம். கட்சிக்குள் இரட்டை இலக்கத் தொகுதிகள் வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு தி.மு.க-விடம் 8 தொகுதிகள் போதும் என தலைவர் சொன்னது ஏன்... ஒரு ராஜ்ய சபா சீட்டுக்காக தே.மு.தி.க தனது கூட்டணியையே மாற்றிக் கொண்டு வந்திருக்கிறது. அப்படியிருக்கையில் கொடுத்த சீட்டை தலைவர் ஏன் மறுக்க வேண்டும்" எனப் புலம்புகிறார்கள்.

`என் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் கல்லுப்பட்டி ஆலமர மேடை' - நெகிழ்ந்த தங்கம் தென்னரசு

``என் மனதில் என்றும் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும் மேடை இந்தக் கல்லுப்பட்டி ஆலமர மேடைதான்" - தந்தை தங்கப்பாண்டியன் பிரசாரத்தைத் தொடங்கிய ஆலமர மேடையில் தனயன் தங்கம் தென்னரசு உணர்ச்சி பூர்வமான பிரசா... மேலும் பார்க்க

'நோ' Money, 'நோ' UPI: இனி Fastag தான் நெடுஞ்சாலைகளில் கட்டாயம்; 10-ம் தேதிக்கு மேல் இதை மீறினால்?

நெடுஞ்சாலைகளில் டோல் கேட்கள் டிஜிட்டல் மயமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இன்னும் பலரிடம் ஃபாஸ்ட் டேக் இருப்பதில்லை. அதனால், அவர்கள் டோல் கேட்டுகளில் பணமாகவும், யு.பி.ஐ-யிலும் பேமென்ட் செய்து வருகின... மேலும் பார்க்க

வங்கதேச எல்லையில் தொடரும் ஊடுருவல்; பாம்பு, முதலைகளைப் பயன்படுத்தப்போகும் எல்லைப் பாதுகாப்புப் படை

பங்களாதேஷில் இருந்து அடிக்கடி ஏராளமானோர் இந்தியாவிற்குள் ஊடுருவி வருகின்றனர். அவர்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எல்லைப் பாதுகாப்புப் படையினரைப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. ஊடுருவல்காரர்கள் பிரச்னை மே... மேலும் பார்க்க

இனி இந்தியாவில் தங்க 'நகைகளை' இறக்குமதி செய்ய கடும் கட்டுப்பாடு! - விவரம் என்ன?

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல், தங்க நகைகளின் இறக்குமதியில் கடும் கட்டுப்பாட்டை விதித்துள்ளது மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம்.2010-ம் ஆண்டில் இருந்து இந்தியா 10 ASEAN நாடுகளுடன் பொருள்... மேலும் பார்க்க

''என்னுடைய நிலைப்பாட்டைத் தள்ளி வைக்கிறேன்; காட்டுமன்னார்கோவில் தொகுதியில் ஜோதிமணி போட்டி!': திருமா!

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போகும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன். திமுக கூட்டணியிலிருந்து விசிக-விற்கு 8... மேலும் பார்க்க

Form 16-ன் பெயர் மட்டுமல்ல; அதன் 'நடைமுறையும்' மாறுகிறது - என்ன அது?

ஒவ்வொரு ஜூன் மாதமும் நிறுவனங்களில் வேலை பார்க்கும் சம்பளதாரர்கள் ஒவ்வொருவருக்கும் இமெயில்களில் ஃபார்ம் 16 எட்டிப்பார்க்கும். இந்த ஃபார்ம் 16 வருவதற்குப் பின்னால், பெரிய நடைமுறை உள்ளது. அதாவது ஒவ்வொரு ... மேலும் பார்க்க