செய்திகள் :

LIK: "யுதன் பாலாஜி என் வாழ்கையில் நல்லவராகவே இருக்கிறார்; SJ சூர்யா..." - பிரதீப் சொல்லும் ரீவைண்ட்

post image

விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் 'LIK' திரைப்படம், வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது.

'டிராகன்', 'லவ் டுடே', 'டியூட்' படங்களைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.

அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

'LIK'
'LIK'

இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று முன்தினம் (ஏப்ரல்.7) சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய பிரதீப் ரங்கநாதன், "நிறைய மனிதர்கள் அவர்களுக்கே தெரியாமல் சிறிய சிறிய விஷயங்கள் மூலம் மற்றவர்களின் வாழ்க்கையில் மாற்றங்களை உருவாக்குகிறார்கள்.

அந்தவகையில் என் வாழ்க்கையில் மாற்றங்களை உருவாக்கியவர்கள் எஸ்.ஜே சூர்யா சார், யுதன் பாலாஜி, அஷ்வத் மாரிமுத்து, கார்த்திக் சுப்புராஜ் சார், ஸ்ரீ கார்த்திக் போன்றவர்கள்தான்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா குறித்து பேசிய பிரதீப் ரங்கநாதன், "எஸ்.ஜே. சூர்யா சார் பற்றி ஒரு விஷயம் சொல்ல வேண்டும். நான் காலேஜ் முடித்த பிறகு அவரிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக சேர ஆசைப்பட்டேன்.

அவரோட அலுவலகத்துக்குப் போய் ரெஸ்யூம் கொடுத்தேன். அங்க இருந்தவங்க நீங்க போங்கன்னு சொன்னாங்க.

ஆனா அவர் வெளியே வரும்போது பார்க்கலாம் என்று நான் வெளியே போகாமல் எதிரே இருந்த படிக்கட்டில் உட்கார்ந்தேன்.

பிரதீப் ரங்கநாதன்
பிரதீப் ரங்கநாதன்

அப்போது எஸ்.ஜே சூர்யா சார் என்னைப் பார்த்து 'யார் அந்த பையன்?' என அவருடன் இருந்த யுதன் பாலாஜியிடம் கேட்டார். யுதன் பாலாஜியை உங்கள் எல்லோருக்கும் தெரியும்.

நான் ஸ்கூல் படிக்கும்போது இவர் ரொம்ப ஃபேமேஸ். கனா காணும் காலங்களில் ஜோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எனக்கு இவரை ரொம்ப பிடிக்கும். அவர்தான் 'இவர் உதவி இயக்குநராகச் சேர வந்திருக்கிறாராம் சார்' என எஸ்.ஜே சூர்யா சாரிடம் சொன்னார்.

என்னை சார் உள்ளே அழைத்தார். 'நான் உங்களிடம் உதவி இயக்குநராகச் சேர வேண்டும்'னு சொன்னேன். அவர் மீண்டும் 'ரெஸ்யூம் கொடுத்துட்டீங்களே, போங்க'ன்னு சொன்னார்.

ஆனா அந்தத் தருணம் எனக்கு மறக்க முடியாதது. நான் செய்த குறும்படம் பற்றி சொன்னேன் என்னிடம் நிறைய கேள்வி கேட்டார். நிறைய உலகப்படம் பார்க்கச் சொன்னார்.

எஸ்.ஜே சூர்யா
எஸ்.ஜே சூர்யா

நிறைய விஷ்யங்களைக் கற்றுக்கொண்டு வர சொன்னார். அவரைப் பார்த்தப் பிறகு கீழே வந்தேன். யுதன் பாலாஜி நின்றுகொண்டிருந்தார். அவர் என்னிடம் நான்கு வார்த்தை நல்லதாகச் சொன்னார்.

என்ன சொன்னார் என்று எனக்கு ஞபாகம் இல்லை. ஆனால் நல்லதைச் சொன்னார். அதனால் அவர் என் வாழ்கையில் நல்லவராகவே இருக்கிறார்" என்று பேசியிருக்கிறார்.

"இந்த சீரிஸ் நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் இருந்தது, ஆனா.!"- 'காட்டான்' குறித்து விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த வெப் சீரிஸ் 'முத்து என்கிற காட்டான்'. இந்த வெப் சீரிஸை இயங்குநர் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இருவரும் இயக்கி இருந்தனர். மக்களிடையே இந்த வெப் சீரிஸ்... மேலும் பார்க்க

கண்ணே கண்மணியே: "நான் இறைவனுக்காக எழுதிய பாடல் இது" - மஃஷூக் ரஹ்மான் | வரித்துணையே 16

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகள் குறித்தும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர... மேலும் பார்க்க

LIK: "அனிருத் நடிக்க வேண்டிய படம் அது!"- ஆர்.ஜே பாலாஜி ஷேரிங்ஸ்

விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் 'LIK' திரைப்படம், வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது. 'டிராகன்', 'லவ் டுடே', 'டூட்' படங்களைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். அன... மேலும் பார்க்க

Rajini: "சாரி, அதைப்பத்தி கருத்து சொல்ல விரும்பல" - 'ஜனநாயகன்' பற்றிய கேள்விக்கு ரஜினியின் பதில்

ரஜினிகாந்த் தற்போது 'ஜெயிலர் 2' படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இதனைத் தொடர்ந்து சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருக்கி... மேலும் பார்க்க

LIK: "அப்போ 250 ரூபாய்தான் இருந்தது; அனிருத் 50,000 ரூபாயை என் பேக்ல வச்சிருக்கார்" - விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் 'LIK' திரைப்படம், பல தாமதங்களுக்குப் பிறகு வருகிற ஏப்ரல் 10-ம் தேதி திரைக்கு வருகிறது. 'டிராகன்', 'டியூட்' திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனின் அடுத... மேலும் பார்க்க

LIK: "'டூட்' படத்தில அவர் நடிச்சது முதல்ல பிடிக்கல, ஆனா.!"- பிரதீப் ரங்கநாதன் குறித்து ஆர்.ஜே.பாலாஜி

விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் 'LIK' திரைப்படம், வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது. 'லவ் டுடே', 'டிராகன்', 'டூட்' படங்களைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இப்படம் வெளியாகவிருக்கிறது.... மேலும் பார்க்க