செய்திகள் :

Patriot: "நீண்ட நாட்களுக்குப் பிறகு நாங்கள் சேர்ந்து நடித்ததற்கான காரணம்?!" - மம்மூட்டி

post image

18 வருட இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டியும், மோகன்லாலும் இணைந்து நடித்திருக்கும் 'பேட்ரியாட்' திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தை 'சீ யூ சூன்', 'மாலிக்' போன்ற திரைப்படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

Mammootty - Mohanlal
Mammootty - Mohanlal

படத்தின் ரிலீஸையொட்டி 'தி ஹாலிவுட் ரிப்போர்டர்' ஊடகத்தின் இந்திய பதிப்பிற்குப் பேட்டியளித்திருக்கிறார் மம்மூட்டி.

இதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோகன்லாலுடன் சேர்ந்து நடித்த அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

மம்மூட்டி, " நானும் மோகன்லாலும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு இணைந்து நடிக்கிறோம். ஆனால், 'பேட்ரியாட்' திரைப்படம் நட்சத்திர அந்தஸ்தை முதன்மையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் கிடையாது.

நாங்கள் இருவரும் வெறும் இரண்டு கதாபாத்திரமாகவே நடிக்கிறோம். இத்திரைப்படம், அதன் கன்டென்ட்டை முதன்மையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.

இதில் பல எக்ஸ்பீரிமென்ட் விஷயங்களோடு, கமர்ஷியல் விஷயங்களையும் முயற்சி செய்திருக்கிறோம். அதனால்தான் நாங்கள் இணைந்து நடித்திருக்கிறோம். நாங்கள் இருவரும் இந்தப் படத்தில் நண்பர்களாகவே நடித்திருக்கிறோம்.

Kalamkaval - Mammootty
Kalamkaval - Mammootty

ஆனால், அந்தக் கதாபாத்திரங்கள் புதியதாக இருக்கும். எங்களைத் தாண்டி அழுத்தமான பெண் கதாபாத்திரங்களும் இத்திரைப்படத்தில் இருக்கின்றன. இத்திரைப்படம் ஒரு பார்முலாவைப் பின்பற்றியது கிடையாது.

ஆனால், இப்படம் புதிதாக ஒரு பார்முலாவை உருவாக்கும். அப்படியான திரைப்படம் இது. 130 நாட்கள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இப்படத்தை ஷூட் செய்தோம்.

இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில், என்னை மோகன்லாலின் மேலாளர்தான் கவனித்துக்கொண்டார். ஏனென்றால், என்னுடைய மேலாளர் மோகன்லாலை கவனித்துக் கொண்டிருந்தார்." எனத் தெரிவித்திருக்கிறார்.

Mammootty: " `லோகா' படத்தில் என்னை ஏமாற்றிவிட்டார்கள்" - மம்மூட்டி கலகல

18 வருட இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டியும், மோகன்லாலும் இணைந்து நடித்திருக்கும் 'பேட்ரியாட்' திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை 'சீ யூ சூன்', 'மாலிக்' போன்ற திரைப்படங்களை இய... மேலும் பார்க்க

"அகந்தை அகன்றது, அன்பு வென்றது" - 10 ஆண்டு காலத் தனிமைக்கு முற்றுப்புள்ளி - இயக்குநர் பிரியதர்ஷன்

இந்திய சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோயினி படமாக வெளியானது லோகா. இந்தப் படத்தின் மூலம் இந்தியத் திரையுலகின் முக்கிய நாயகியாக வலம் வருபவர் நடிகை கல்யாணிப் பிரியதர்ஷன். இவருடைய அப்பா இயக்குநர் பிரியதர்ஷன்... மேலும் பார்க்க

தென்னிந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைக்கும் டாப் 4 Gen Z மலையாள நாயகிகள்!

யதார்த்தமான கதைகள், உணர்வுப்பூர்வமான நடிப்பு - இதுதான் மலையாள சினிமாவின் அடையாளம். ஆனால் இன்று அந்த அடையாளத்தைத் தாண்டி, சமூக வலைத்தளங்களின் ரீல்ஸ் முதல் தியேட்டர் ஸ்கிரீன் வரை தென்னிந்திய ரசிகர்களின்... மேலும் பார்க்க

"நூற்றுக்கணக்கான நடிகர்கள்; 100 நாள்கள் படப்பிடிப்பு!"- ‘பள்ளிச்சட்டம்பி’ படம் குறித்து டொவினோ தாமஸ்

டொவினோ தாமஸ், கயாடு லோஹர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பள்ளிச்சட்டம்பி’. இப்படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி இருக்கிறார். ஏப்ரல் 10 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்த... மேலும் பார்க்க

'துல்கர் சல்மானுக்கும் எனக்கும் பிரச்னையா?'- டொவினோ தாமஸ் விளக்கம்

டொவினோ தாமஸ், கயாடு லோஹர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பள்ளிச்சட்டம்பி’. இப்படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி இருக்கிறார். ஏப்ரல் 10 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்த... மேலும் பார்க்க

"அப்பா அந்த சமயத்துல இறந்துட்டாரு; நான் சினிமாவுக்கு வந்தது அம்மாவுக்கு பிடிக்கல.!"- நிவின் பாலி

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான நிவின் பாலி தனது முதல் படமான மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்பின் ஆடிஷன் குறித்து பகிர்ந்திருக்கிறார். மலையாள ஊடகமான மனோரமாவிற்கு அளித்திருக்கும் பேட்டியில் பேசியிருக்கும் ந... மேலும் பார்க்க