செய்திகள் :

'வழக்கமான வழியில் செல்லாதீர்கள்; வேற வழியில் போங்க' - ஹார்முஸ் ஜலசந்தியில் ரூட்டை மாற்றும் ஈரான்

post image

இஸ்ரேல் லெபனானைத் தாக்கியதால், ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடப்பட்டுள்ளது என்று ஈரானிய செய்திகள் கூறுகின்றன.

இன்னொரு பக்கம், ஹார்முஸ் ஜலசந்தியில் நிற்கும் கப்பல்கள் செல்ல வேறு வழியைக் கூறியிருக்கிறது இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை.

ஏன் இந்தப் பாதை மாற்றம் என்று இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் கப்பற்படை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஈரான் சொல்லும் புதிய பாதை
ஈரான் சொல்லும் புதிய பாதை

"ஹார்முஸ் ஜலசந்தியில் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் பாதையில் இப்போது கடல் கண்ணிவெடிகள் இருக்கும் வாய்ப்புகள் உண்டு. மேலும், அந்தப் பிராந்தியத்தில் நடந்துள்ள சமீபத்திய தாக்குதல் அந்தப் பாதையைப் பாதுகாப்பற்றதாக மாற்றியிருக்கலாம்.

இந்த ரிஸ்க்குகளைக் குறைக்க... ஆபத்தான வழித்தடத்தைத் தவிர்க்க, இந்தப் பாதையைப் பயன்படுத்துங்கள்" என்று புதிய பாதை வரைப்படத்தை ஈரான் வெளியிட்டுள்ளது.

இன்னொரு பக்கம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் ஹார்முஸ் ஜலசந்தி குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருக்கும் சாராம்சம் இதுவே - "ஈரான் நாட்டிற்குள்ளும், ஈரான் நாட்டைச் சுற்றியும் இருக்கும் அனைத்து அமெரிக்க கப்பல்கள், விமானங்கள் மற்றும் ராணுவப் படைகள் இறுதி ஒப்பந்தம் முடிவாகும் வரை... அது அமலாகும் வரை அங்கேயே இருக்கும்.

அது நடக்கவில்லை என்றால் இதுவரை யாரும் பார்த்திராத தாக்குதல்கள் அங்கே நடக்கும்.

'அணு ஆயுதம் இல்லை' மற்றும் 'ஹார்முஸ் ஜலசந்தி திறந்திருக்கும் மற்றும் பத்திரமாக இருக்கும்' என்று ஈரான் ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

அது நடக்கவில்லை, மீண்டும் தாக்குதல்கள் தொடங்கும்".

ஈரான், ட்ரம்ப் 'ஹார்முஸ் ஜலசந்தி'யை சொந்தம் கொண்டாட முட்டியுமா? சுங்க வரி வசூலிக்க முடியுமா?

அமெரிக்கா, இஸ்ரேல் தங்கள் மீது நடத்திய தாக்குதலை சரிசெய்யவும்... ஈடுகட்டவும் ஈரான் ஒரு வழியைப் பரிந்துரைத்துள்ளது. அந்தப் பரிந்துரையின்படி, இப்போது ஹார்முஸ் ஜலசந்தியில் நின்றுகொண்டிருக்கும் கப்பல்கள்,... மேலும் பார்க்க

“தொகுதிகளை குறி வைத்து காய் நகர்த்துகிறாரா மாப்பிள்ளை?” - தென் மாவட்ட விசிட் பின்னணி

தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும், முதல்வரின் மருமகன் சபரீசன் தி.மு.க நிர்வாகிகளிடம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார். தேர்தல் நேரத்தில் சபரீசன் மேற்கொண்ட இந்த வி... மேலும் பார்க்க

"கத்திக் கத்தியே செத்துப்போ'ன்னு என்னை சபிச்சிட்டாங்க, சுடுகாட்டுல பேசியிருந்தாக்கூட..!"- சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “கூட்டங்களில் கத்திக் கத்தியே செத்துப்போ என்று என்னை மக்கள் சபித்துவிட்டார்கள்” என ஆதங்கத்துடன் பேசியிருக்கிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித... மேலும் பார்க்க

'சரியான நபர் இவர் தான்' ஈரான் அமைதி பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் செல்லும் ஜே.டி.வான்ஸ்

நாளை (ஏப்ரல் 10) இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிரந்தர போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில், அமெரிக்கா சார்ப்பில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்... மேலும் பார்க்க

இரான் போர்: `இது `சுற்றுலா' அல்ல சுழல் மிஸ்டர் டிரம்ப்.!' - பின் வாங்கியதா அமெரிக்கா? | Explained

முன்னாள் ஆசிரியர் , பிபிசி உலக சேவை, லண்டன்மணிவண்ணன் திருமலைஇரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28ம் நாள் தொடங்கிய குண்டுத் தாக்குதல், சுமார் ஒரு மாத காலத்துக்கும் மேலான பிராந்தியச் சேதத... மேலும் பார்க்க