செய்திகள் :

DC Vs GT: "கடைசியில் எங்களுக்கு அதுதான் பலன் அளித்தது.!" - வெற்றி குறித்து கேப்டன் சுப்மன் கில்

post image

நேற்று (ஏப்ரல்.8) நடைபெற்ற குஜராத் vs டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி, கடைசி பந்து வரை சென்று விறுவிறுப்பான போட்டியாக மாறியது.

கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பிரசித் கிருஷ்ணாவின் ஸ்லோவர் பௌன்சர் பந்தை மில்லர் அடிக்க முடியாமல் ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் அணி இந்த சீசனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

வெற்றிக்கு பின்னர் பேசிய குஜராத் கேப்டன் சுப்மன் கில் "நாங்கள் விளையாடிய கடந்த மூன்று போட்டிகளுமே கடைசி ஓவர் வரை சென்றது.

DC vs GT
DC vs GT

ஆனால், இந்தப் போட்டியில் ஒரு வழியாக வெற்றி அடைந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் மில்லர் ரன் எடுக்காதபோது கூட, எங்களுக்கு வெற்றியின் மீது ஒரு நம்பிக்கை இருந்தது.

கடைசி பந்தை வீசுவதற்கு முன்னால் நான் பிரசித் கிருஷ்ணாவிடம் ஆலோசித்தேன். அப்போது யார்க்கர் வீசலாமா அல்லது ஸ்லோவர் பால் வீசலாமா என்ற விவாதம் எங்களுக்குள் ஓடியது.

இறுதியில், இந்த பிட்ச் இருக்கும் தன்மையைக் கணக்கில் கொண்டு, ஒரு துல்லியமான 'ஸ்லோவர்' பந்தை வீசினால் அதை பவுண்டரிக்கு அடிப்பது பேட்டருக்குக் கடினமாக இருக்கும் என்று முடிவு செய்தோம். அதுவே பலனும் அளித்தது.

பீல்டிங்கை பொறுத்தவரை, நான் தனிப்பட்ட முறையில் விட்டுக்கொடுத்த சில ஓவர் த்ரோக்கள் மற்றும் பவுண்டரிகளைத் தவிர்த்துப் பார்த்தால், பீல்டிங்கில் சேமிக்கப்பட்ட அந்த 5 முதல் 6 ரன்கள் தான் ஆட்டத்தின் போக்கை மாற்றின.

DC vs GT
DC vs GT

ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெறும் இது போன்ற போட்டிகளில், களத்தில் நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், செய்யும் சிறு தவறுகளும் மிக முக்கியமானது.

இந்த ஆடுகளத்தில் 210 ரன்கள் என்பது சராசரி ரன்களை விட 10-15 ரன்கள் அதிகம் என்றே நாங்கள் நினைத்தோம்,நாங்கள் பேட்டிங் செய்த போதே அது தெரிந்தது, பிட்ச் மந்தமாக இருந்ததால் பெரிய பவுண்டரிகளை அடிப்பது அத்தனை எளிதும் அல்ல .

அதனால், நாங்கள் சரியாகப் பந்துவீசினால் வெற்றி நிச்சயம் என்று நம்பினோம். தற்போது எனக்குத் தேவை ஒரு நல்ல தூக்கம் தான், நாளை காலை எழுந்திருக்கும்போது உடல்நிலை எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.

DC Vs GT: அந்த நேரத்தில் விக்கெட்டுகள் விழுந்தது தான் பின்னடைவு! – தோல்வி குறித்து அக்சர் படேல்

ஐபிஎல் 2026 தொடரின்நேற்றைய(ஏப்ரல் 8)விறுவிறுப்பான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. கடைசி வரை த்ரில்லாகச் சென்ற இந்தப் போட்டியில், டெல்லி அணி இலக்கை எட்ட முடியாமல் நூ... மேலும் பார்க்க

DC vs GT: "ரொம்ப நாள்களுக்குப் பிறகு ஒரு நல்ல விக்கெட்டை வீழ்த்திருக்கிறேன்" - ஆட்டநாயகன் ரஷித் கான்

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல்.8) நடைபெற்ற டெல்லி vs குஜராத் அணிகளுக்கிடையேயான போட்டியில் குஜராத் அணி 1 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய ரஷித் க... மேலும் பார்க்க

Sooryavanshi: `பயம்னா என்னனு தெரியல.!' - வைபவ்வின் ஆட்டத்தை வியந்து பாராட்டிய ஹர்திக் பாண்டியா!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐபிஎல் 2026 போட்டியில், கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஒரு தருணம் அரங்கேறியது. உலகின் தலைசிறந்த பந்துவீ... மேலும் பார்க்க

'பங்காளியும் அடி வாங்குறான் மாப்ள...' - குஷியில் CSK ரசிகர்கள் - மும்பை சரிந்தது எப்படி?

கஷ்ட காலம் தனியா வராது, ஒன்றுக்குப் பின் ஒன்னாவும் வராது, ஒன்னோடு ஒன்னு ஒட்டிக்கிட்டு நம்மள ஒன்றுக்குமே இல்லாம ஆக்க வரும். இதுக்கு உதாரணம் கேட்டீங்கன்னா ஒட்டுமொத்த மும்பை இந்தியன்ஸ் தரப்பும் ராஜஸ்தான்... மேலும் பார்க்க

RR vs MI: "வைபவ் சூர்யவன்ஷிட்டருந்து புதிய ஷாட்களைக் கத்துக்கணும்" - ஆட்டநாயகன் ஜெய்ஸ்வால்

நடப்பு ஐ.பி.எல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்.8) ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் - ராஜஸ்தான் அணியும் மோதின. இதில் மும்பை இந்தியன்ஸை 27 ரன்களில் வீழ்த்திய ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. குறிப்பாக ரா... மேலும் பார்க்க