செய்திகள் :

"கத்திக் கத்தியே செத்துப்போ'ன்னு என்னை சபிச்சிட்டாங்க, சுடுகாட்டுல பேசியிருந்தாக்கூட..!"- சீமான்

post image

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “கூட்டங்களில் கத்திக் கத்தியே செத்துப்போ என்று என்னை மக்கள் சபித்துவிட்டார்கள்” என ஆதங்கத்துடன் பேசியிருக்கிறார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (ஏப்ரல்.8) பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.

அப்போது பேசிய அவர், "மலையாள நடிகர் மம்முட்டியிடம், ஏன் நீங்கள் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை? என்று சிலர் கேட்டிருக்கிறார்கள்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
சீமான்

அதற்கு அவர், “எங்கள் மக்கள் தங்கள் தலைவர்களை திரையரங்குகளில் தேடுவதில்லை" என்று பதிலளித்திருக்கிறார்.

ஆனால் இங்கு மக்கள் திரையரங்குகளைத் தவிர வேறு எங்கும் தலைவர்களை தேடுவதில்லை.

முன்பு திரையரங்கில் படம் பார்க்கும்போது விசிலடித்தீர்கள். இப்போது தெருவில் விசிலடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

கூட்டங்களில் இப்படியே கத்திக் கத்தியே பேசி செத்துப்போ என என்னை சபித்துவிட்டனர்.

மக்களை ஏமாற்றுவது எளிது. ஆனால் மக்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்த்துவது கடினம்.

நானும் 15 ஆண்டுகளாக கத்திக் கத்திப் பேசி பார்த்து விட்டேன். உங்கள் காதில் விழமாட்டிங்கிறது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
சீமான்

சுடுகாட்டில்போய் பேசியிருந்தால் கூட பாவம் பார்த்து நான்கு பிணமாவது எழுந்து வந்திருக்கும்.

இந்த முறையாவது மானம், ரோஷம், கோபம் எல்லாம் வருகிறதா? என்று பார்ப்போம்" என்று ஆதங்கத்துடன் பேசியிருக்கிறார்.

'வழக்கமான வழியில் செல்லாதீர்கள்; வேற வழியில் போங்க' - ஹார்முஸ் ஜலசந்தியில் ரூட்டை மாற்றும் ஈரான்

இஸ்ரேல் லெபனானைத் தாக்கியதால், ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடப்பட்டுள்ளது என்று ஈரானிய செய்திகள் கூறுகின்றன. இன்னொரு பக்கம், ஹார்முஸ் ஜலசந்தியில் நிற்கும் கப்பல்கள் செல்ல வேறு வழியைக் கூறியிருக்கிறது இ... மேலும் பார்க்க

'சரியான நபர் இவர் தான்' ஈரான் அமைதி பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் செல்லும் ஜே.டி.வான்ஸ்

நாளை (ஏப்ரல் 10) இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிரந்தர போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில், அமெரிக்கா சார்ப்பில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்... மேலும் பார்க்க

இரான் போர்: `இது `சுற்றுலா' அல்ல சுழல் மிஸ்டர் டிரம்ப்.!' - பின் வாங்கியதா அமெரிக்கா? | Explained

முன்னாள் ஆசிரியர் , பிபிசி உலக சேவை, லண்டன்மணிவண்ணன் திருமலைஇரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28ம் நாள் தொடங்கிய குண்டுத் தாக்குதல், சுமார் ஒரு மாத காலத்துக்கும் மேலான பிராந்தியச் சேதத... மேலும் பார்க்க

Iran: இஸ்ரேலின் செயல்; ஆதரித்த ட்ரம்ப்; மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதா ஈரான்?

இந்திய நேரப்படி நேற்று அதிகாலை, ஈரான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இனி ஹார்முஸ் ஜலசந்தியும் திறக்கப்படும் என்று கூறப்பட்டது. ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. இதற்கு முக்கிய கார... மேலும் பார்க்க

திருநெல்வேலி: விஜய் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம், ரோடு ஷோ! - ஸ்பாட் விசிட் போட்டோஸ்!

திருநெல்வேலி: விஜய் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்.! ரோடு ஷோ! ஸ்பாட் விசிட் போட்டோஸ்.! மேலும் பார்க்க