செய்திகள் :

Iran: இஸ்ரேலின் செயல்; ஆதரித்த ட்ரம்ப்; மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதா ஈரான்?

post image

இந்திய நேரப்படி நேற்று அதிகாலை, ஈரான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இனி ஹார்முஸ் ஜலசந்தியும் திறக்கப்படும் என்று கூறப்பட்டது.

ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம், 'இஸ்ரேல்'.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் போர் நிறுத்த அறிவிப்பிற்குப் பின், சில பதிவுகளைப் பதிவிட்டது. அதில் ஈரான் மீதான போர் நிறுத்தம் தொடரும். ஆனால், அந்தப் போர் நிறுத்தத்தில் லெபனான் விதிவிலக்கு என்று கூறப்பட்டிருந்தது.

சொன்னதைப் போல, இஸ்ரேல் நேற்று லெபனான் மீது தாக்குதல் நடத்தியது.

லெபனான் தாக்குதல்
லெபனான் தாக்குதல்

இஸ்ரேலின் இந்தத் தாக்குதலை அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ஆதரித்திருக்கிறார். அவர் பேசும்போது, ஈரானுடனான போர் நிறுத்தம் லெபனானிற்குப் பொருந்தாது என்று கூறியிருக்கிறார்.

ஆனால், ஈரான் குறிப்பிட்ட போர் நிறுத்தத்தில் லெபனானும் அடங்கியிருந்தது.

ஆக, இஸ்ரேலும், அமெரிக்காவும் போர் நிறுத்தத்தை மீறியதாக, ஈரான் மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. இது அறிக்கையாக எங்கும் இன்னும் வெளியாகவில்லை.

ஆனால், ஈரானிய பத்திரிகைகள் ஹார்முஸ் ஜலசந்தி மூடலை உறுதிப்படுத்தி உள்ளன.

"கத்திக் கத்தியே செத்துப்போ'ன்னு என்னை சபிச்சிட்டாங்க, சுடுகாட்டுல பேசியிருந்தாக்கூட..!"- சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “கூட்டங்களில் கத்திக் கத்தியே செத்துப்போ என்று என்னை மக்கள் சபித்துவிட்டார்கள்” என ஆதங்கத்துடன் பேசியிருக்கிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித... மேலும் பார்க்க

'சரியான நபர் இவர் தான்' ஈரான் அமைதி பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் செல்லும் ஜே.டி.வான்ஸ்

நாளை (ஏப்ரல் 10) இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிரந்தர போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில், அமெரிக்கா சார்ப்பில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்... மேலும் பார்க்க

இரான் போர்: `இது `சுற்றுலா' அல்ல சுழல் மிஸ்டர் டிரம்ப்.!' - பின் வாங்கியதா அமெரிக்கா? | Explained

முன்னாள் ஆசிரியர் , பிபிசி உலக சேவை, லண்டன்மணிவண்ணன் திருமலைஇரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28ம் நாள் தொடங்கிய குண்டுத் தாக்குதல், சுமார் ஒரு மாத காலத்துக்கும் மேலான பிராந்தியச் சேதத... மேலும் பார்க்க

திருநெல்வேலி: விஜய் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம், ரோடு ஷோ! - ஸ்பாட் விசிட் போட்டோஸ்!

திருநெல்வேலி: விஜய் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்.! ரோடு ஷோ! ஸ்பாட் விசிட் போட்டோஸ்.! மேலும் பார்க்க

சட்டமன்றத் தேர்தல் 2026: அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரியில் தொடங்கிய வாக்குப்பதிவு!

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்தல் தேதியும் குறிப்பிடப்பட்டது. அதன் அடிப்படையில் இதில், புதுச்சேரி, கேரள... மேலும் பார்க்க