செய்திகள் :

“தொகுதிகளை குறி வைத்து காய் நகர்த்துகிறாரா மாப்பிள்ளை?” - தென் மாவட்ட விசிட் பின்னணி

post image

தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும், முதல்வரின் மருமகன் சபரீசன் தி.மு.க நிர்வாகிகளிடம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார். தேர்தல் நேரத்தில் சபரீசன் மேற்கொண்ட இந்த விசிட் தி.மு.க வினரால் உன்னிப்பாக கவனிக்கபடுகிறது. 

தி.மு.க தலைவரும் முதல்வருமான ஸ்டாலினின் மருமகன் சபரீசன், கடந்த வாரம் வில்லிவாக்கத்தில் நடந்த தி.மு.க தேர்தல் பிரசார ஆலோசனை கூட்டத்தில் நேரடியாக பங்கெடுத்தார். தி.மு.கவின் அதிகாரபூர்வ நிகழ்விலோ, தேர்தல் பிரசார கூட்டங்களிலோ தலைக்காட்டாமல் இருந்த சபரீசனின் இந்த மூவ்வை தி.மு.க வினரே ஆச்சர்யத்தோடு பார்த்தனர். ஆனால், வில்லிவாக்கம் தொகுதி தி.மு.க வேட்பாளர் கார்த்திக் மோகன், சபரீசனின் நண்பர் என்பதால் நண்பருக்காக இந்த பிரசார கூட்டத்திற்கு வந்திருக்கிறார் என்றார்கள் தி.மு.க வினர். 

சபரீசனின் நேரடி அரசியல் என்ட்ரி?
சபரீசனின் நேரடி அரசியல் என்ட்ரி?

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தென் மாவட்டங்களில் சபரீசன் தொடர் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். கன்னியாக்குமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி என மூன்று மாவட்டங்களில் உள்ள தி.மு.க நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தி.மு.க வேட்பாளர்களை அழைத்து நேரடியாக தொகுதி நிலவரம் குறித்து கேட்டுள்ளார்.

மேலும், சில தொகுதிகளில் தி.மு.க-வுக்கு நெருக்கடியாக இருந்துள்ளது. குறிப்பாக கன்னியாக்குமரி மாவட்டத்தில் இரண்டு தொகுதிகள் தி.மு.க கூட்டணிக்கு நெருக்கடியாக இருப்பதாக அங்குள்ள உடன்பிறப்புகள் சொல்லியுள்ளார்கள். அதனை கேட்டுக்கொண்ட சபரீசன், அதை சரிகட்ட என்ன செய்ய வேண்டும்? என்று நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார்.

“தற்போது அவர், பயணம் மேற்கொண்ட மூன்று மாவட்டங்களுக்கும் மண்டல பொறுப்பாளராக தி.மு.க-வின் எம்.பி கனிமொழி இருக்கிறார். அவர் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால், அந்த தொகுதிகளை நேரடியாக அவரால் கண்காணிக்க முடியவில்லை. எனவே, முதலில் அந்த மூன்று மாவட்டங்களுக்கு சபரீசன் சென்று தொகுதி நிலவரங்களை கேட்டறிந்துள்ளார். அதோடு திருநெல்வேலியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் சபரீசனின் சாய்ஸ் என்பதால், திருநெல்வேலிக்கு கூடுதல் முக்கியதும் கொடுத்திருக்கிறார்” என்கிறார் திருநெல்வேலி மாவட்ட தி.மு.க பிரமுகர் ஒருவர்.

சபரீசன்

இதை தாண்டி தி.மு.க தலைமை ஒவ்வொரு தொகுதிக்கு இருபது ஸ்வீட் பாக்ஸ்கள் வரை செலவழிக்க திட்டமிட்டுள்ளதாம். சில இடங்களில் தேவை அதிகமாக இருப்பதால், அது குறித்தும் நேரடியாக அறிந்துக்கொள்ளவும் தலைமை சார்பில் சில பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாம்.  

இந்த மூன்று மாவட்டங்கள் மட்டுமல்லாமல், மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கும் அடுத்தடுத்து இவர் பயணப்பட இருக்கிறாராம். எந்தெந்த தொகுதிகளில் தி.மு.க வீக்காக இருக்கிறது என்கிற விவரங்களை பென் நிறுவனத்தின் மூலம் வாங்கி, அந்த தொகுதிகளை சரி கட்டும் வேலையை சபரீசனே மேற்கொள்ள உள்ளார் என்கிறார்கள் அறிவாலயத்திற்கு நெருக்கமானவர்கள். 

ஈரான், ட்ரம்ப் 'ஹார்முஸ் ஜலசந்தி'யை சொந்தம் கொண்டாட முட்டியுமா? சுங்க வரி வசூலிக்க முடியுமா?

அமெரிக்கா, இஸ்ரேல் தங்கள் மீது நடத்திய தாக்குதலை சரிசெய்யவும்... ஈடுகட்டவும் ஈரான் ஒரு வழியைப் பரிந்துரைத்துள்ளது. அந்தப் பரிந்துரையின்படி, இப்போது ஹார்முஸ் ஜலசந்தியில் நின்றுகொண்டிருக்கும் கப்பல்கள்,... மேலும் பார்க்க

'வழக்கமான வழியில் செல்லாதீர்கள்; வேற வழியில் போங்க' - ஹார்முஸ் ஜலசந்தியில் ரூட்டை மாற்றும் ஈரான்

இஸ்ரேல் லெபனானைத் தாக்கியதால், ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடப்பட்டுள்ளது என்று ஈரானிய செய்திகள் கூறுகின்றன. இன்னொரு பக்கம், ஹார்முஸ் ஜலசந்தியில் நிற்கும் கப்பல்கள் செல்ல வேறு வழியைக் கூறியிருக்கிறது இ... மேலும் பார்க்க

"கத்திக் கத்தியே செத்துப்போ'ன்னு என்னை சபிச்சிட்டாங்க, சுடுகாட்டுல பேசியிருந்தாக்கூட..!"- சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “கூட்டங்களில் கத்திக் கத்தியே செத்துப்போ என்று என்னை மக்கள் சபித்துவிட்டார்கள்” என ஆதங்கத்துடன் பேசியிருக்கிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித... மேலும் பார்க்க

'சரியான நபர் இவர் தான்' ஈரான் அமைதி பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் செல்லும் ஜே.டி.வான்ஸ்

நாளை (ஏப்ரல் 10) இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிரந்தர போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில், அமெரிக்கா சார்ப்பில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்... மேலும் பார்க்க

இரான் போர்: `இது `சுற்றுலா' அல்ல சுழல் மிஸ்டர் டிரம்ப்.!' - பின் வாங்கியதா அமெரிக்கா? | Explained

முன்னாள் ஆசிரியர் , பிபிசி உலக சேவை, லண்டன்மணிவண்ணன் திருமலைஇரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28ம் நாள் தொடங்கிய குண்டுத் தாக்குதல், சுமார் ஒரு மாத காலத்துக்கும் மேலான பிராந்தியச் சேதத... மேலும் பார்க்க