செய்திகள் :

Mammootty: " `லோகா' படத்தில் என்னை ஏமாற்றிவிட்டார்கள்" - மம்மூட்டி கலகல

post image

18 வருட இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டியும், மோகன்லாலும் இணைந்து நடித்திருக்கும் 'பேட்ரியாட்' திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தை 'சீ யூ சூன்', 'மாலிக்' போன்ற திரைப்படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

Mammootty - Mohanlal
Mammootty - Mohanlal

படத்தின் ரிலீஸையொட்டி 'தி ஹாலிவுட் ரிப்போர்டர்' ஊடகத்தின் இந்திய பதிப்பிற்குப் பேட்டியளித்திருக்கிறார் மம்மூட்டி.

இதில், 'லோகோ' திரைப்படத்தின் அவருடைய மூத்தோன் கதாபாத்திரம் தொடர்பாகப் பேசியிருக்கிறார்.

மம்மூட்டி, " முதலில் துல்கர் சல்மான் என்னிடம் 'லோகா' திரைப்படம் பற்றியே பேசவில்லை. அவருடைய மேலாளர் ஒரு சின்ன வாய்ஸ் ஓவர் கொடுப்பதற்காக என்னைக் கூப்பிட்டார்.

அது மட்டும்தான், 'லோகா' முதல் பாகத்தில் செய்தேன். சொல்லப்போனால், மூத்தோன் கதாபாத்திரத்தின் காட்சியில் வரும் கைகூட என்னுடையது கிடையாது. திரைப்படம் வெளிவந்த பிறகுதான், அது நீங்கள், உங்களுடைய கை என்றார்கள்.

நடிகர் மம்மூட்டி
மம்மூட்டி

இப்போது அந்தப் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்கிற பொறுப்பும் வந்துவிட்டது. சொல்லப்போனால், என்னை ஏமாற்றிவிட்டார்கள் (சிரித்தபடியே...).

'லோகா'வில் நடிப்பதற்கு அவர்கள் என்னைச் சம்மதிக்க வைத்தாலும், நான் என்னுடைய சம்பளத்தைச் சொல்லி அவர்களைச் சம்மதிக்க வைக்க வேண்டும்." எனக் கூறியிருக்கிறார்.

Patriot: "நீண்ட நாட்களுக்குப் பிறகு நாங்கள் சேர்ந்து நடித்ததற்கான காரணம்?!" - மம்மூட்டி

18 வருட இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டியும், மோகன்லாலும் இணைந்து நடித்திருக்கும் 'பேட்ரியாட்' திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை 'சீ யூ சூன்', 'மாலிக்' போன்ற திரைப்படங்களை இய... மேலும் பார்க்க

"அகந்தை அகன்றது, அன்பு வென்றது" - 10 ஆண்டு காலத் தனிமைக்கு முற்றுப்புள்ளி - இயக்குநர் பிரியதர்ஷன்

இந்திய சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோயினி படமாக வெளியானது லோகா. இந்தப் படத்தின் மூலம் இந்தியத் திரையுலகின் முக்கிய நாயகியாக வலம் வருபவர் நடிகை கல்யாணிப் பிரியதர்ஷன். இவருடைய அப்பா இயக்குநர் பிரியதர்ஷன்... மேலும் பார்க்க

தென்னிந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைக்கும் டாப் 4 Gen Z மலையாள நாயகிகள்!

யதார்த்தமான கதைகள், உணர்வுப்பூர்வமான நடிப்பு - இதுதான் மலையாள சினிமாவின் அடையாளம். ஆனால் இன்று அந்த அடையாளத்தைத் தாண்டி, சமூக வலைத்தளங்களின் ரீல்ஸ் முதல் தியேட்டர் ஸ்கிரீன் வரை தென்னிந்திய ரசிகர்களின்... மேலும் பார்க்க

"நூற்றுக்கணக்கான நடிகர்கள்; 100 நாள்கள் படப்பிடிப்பு!"- ‘பள்ளிச்சட்டம்பி’ படம் குறித்து டொவினோ தாமஸ்

டொவினோ தாமஸ், கயாடு லோஹர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பள்ளிச்சட்டம்பி’. இப்படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி இருக்கிறார். ஏப்ரல் 10 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்த... மேலும் பார்க்க

'துல்கர் சல்மானுக்கும் எனக்கும் பிரச்னையா?'- டொவினோ தாமஸ் விளக்கம்

டொவினோ தாமஸ், கயாடு லோஹர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பள்ளிச்சட்டம்பி’. இப்படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி இருக்கிறார். ஏப்ரல் 10 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்த... மேலும் பார்க்க

"அப்பா அந்த சமயத்துல இறந்துட்டாரு; நான் சினிமாவுக்கு வந்தது அம்மாவுக்கு பிடிக்கல.!"- நிவின் பாலி

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான நிவின் பாலி தனது முதல் படமான மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்பின் ஆடிஷன் குறித்து பகிர்ந்திருக்கிறார். மலையாள ஊடகமான மனோரமாவிற்கு அளித்திருக்கும் பேட்டியில் பேசியிருக்கும் ந... மேலும் பார்க்க