தவெக வேட்பாளருக்கு ஆதரவாக திமுக நிர்வாகி; திருநாவுக்கரசர் மகனுக்கு நெருக்கடி? - ...
"அகந்தை அகன்றது, அன்பு வென்றது" - 10 ஆண்டு காலத் தனிமைக்கு முற்றுப்புள்ளி - இயக்குநர் பிரியதர்ஷன்
இந்திய சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோயினி படமாக வெளியானது லோகா. இந்தப் படத்தின் மூலம் இந்தியத் திரையுலகின் முக்கிய நாயகியாக வலம் வருபவர் நடிகை கல்யாணிப் பிரியதர்ஷன். இவருடைய அப்பா இயக்குநர் பிரியதர்ஷன் பல மெகா ஹிட் படங்களை இயக்கியவர். இவரும் நடிகை லிஸியும் 1990-ல் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் தம்பதிக்கு கல்யாணி, சித்தார்த் என்ற மகனும் உள்ளனர். இதற்கிடையில், சுமார் 24 ஆண்டுகால வாழ்க்கைக்குப் பிறகு 2014-ல் இந்த தம்பதியினர் விவாகரத்து கோரி விண்ணப்பித்தனர். 2016-ல் இவர்களது விவாகரத்து முறைப்படி முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், தற்போது பிரியதர்ஷனும் லிஸியும் சேர்ந்து வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியானது. இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த இயக்குநர் பிரியதர்ஷன், ``நாங்கள் 32 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தோம். இடையில் சலிப்பும், ஈகோவும் எங்களை ஆட்கொண்டன. அதனால் யார் பெரியவர் என்ற விவாத்தாலேயே பிரிந்தோம். ஆனாலும், எங்களுக்குள் ஒரு உண்மையான காதல் எங்கோ மறைந்திருந்தது. வயதான காலத்தில் ஒரு துணை மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து மீண்டும் சேர்ந்தோம். இது மிகவும் எளிமையான முடிவு. தற்போதைக்கு மறுமணம் செய்துகொள்ளும் திட்டம் இல்லை. நாங்கள் ஒரு தம்பதியாகவே வாழ்ந்து வருகிறோம்." என்றார்.
இந்தத் தம்பதியினர் மீண்டும் இணைவதற்கு இவர்களது பிள்ளைகளான நடிகை கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் சித்தார்த் ஆகியோர் முக்கியப் பங்காற்றியுள்ளனர். கடந்த 6 முதல் 8 மாதங்களுக்கு முன்பே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் சென்னையில் உள்ள லிஸியின் ஸ்டுடியோவிற்கு நடிகர் மம்மூட்டி நேரில் வந்து, இந்த தம்பதியினரைச் சந்தித்துத் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் பிரியதர்ஷன் தற்போது அக்ஷய் குமார் நடிப்பில் 'பூத் பங்களா' என்ற பட வேலையில் பரபரப்பாக இயங்கி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

















