செய்திகள் :

`தேசம் உங்களை மன்னிக்காது' - பாஜகவுடன் ரகசிய உடன்பாடு என்ற மம்தா கருத்துக்கு ஜோதிமணி கண்டனம்

post image

திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சி பாஜகவோடு ரகசிய உடன்பாடு வைத்துள்ளது என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் மம்தாவின் பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

ஸ்டாலின் - மோடி
ஸ்டாலின் - மோடி

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ''இந்தியாவின் ஒரு மூத்த அரசியல்வாதி, மூன்று முறை மேற்குவங்கத்தின் மாண்புமிகு முதலமைச்சர் திருமிகு.மம்தா பானர்ஜி அவர்கள் இப்படி கொஞ்சமும் பொறுப்பில்லாமல், உண்மைக்குப் புறம்பாக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் ,திமுக கட்சிகளை பாஜகவோடு ரகசிய உடன்பாடு வைத்துள்ளார்கள் என்று பேசுவது அபத்தமானது மட்டுமல்ல கடுமையான கண்டனத்திற்குரியது.

தமிழ்நாட்டில் நாங்கள் பாஜகவிற்கு எதிராக ஒவ்வொரு தினமும் யுத்தம் நடத்திக் கொண்டுள்ளோம். எமது மொழி, இனம், பண்பாடு ,வளர்ச்சி அனைத்திற்கும் எதிராக உள்ள பாஜகவை இந்தத் தேர்தலில் தோற்கடிப்பதே எங்கள் இலக்கு. அஇஅதிமுக முகமூடி அணிந்து கூட பாஜக தமிழ்நாட்டில் கால்பதித்து விடக்கூடாது என்பதில் எமது தமிழினம் உறுதியோடு உள்ளது.

எமது தலைவர்,மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல்காந்தி அவர்கள் அச்சமற்று அயராது மோடி அரசிற்கும்,பாஜகவிற்கும் எதிராக சமரசமற்ற போராட்டத்தை நடத்திவருகிறார். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக மாண்புமிகு முதலமைச்சர் திமுகவின் தலைவர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் பாஜகவோடு சமரசமற்று போராடிவருகிறார். தேசிய அளவில் நாடாளுமன்றத்தில் நாங்கள் பாஜக அரசை எதிர்த்து நடத்தும் போராட்டத்தில் திமுக எப்பொழுதும் எங்கள் பக்கம் நிற்கிறது.

ஆனால் திரிணமுள் காங்கிரஸ் பல நேரங்களில் அப்படிச் செயவதில்லை. ஆனாலும் உங்கள் மீது எந்த அவதூறுகளையும் நாங்கள் பரப்பியதில்லை. ஏனென்றால் பாஜகவிற்கு எதிரான யுத்தத்தில் ,நாட்டின் நலன்கருதி எதிர்கட்சிகள் ஒன்றாகவே பயணிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.நீங்களும்.அந்த நிலைப்பாட்டிலேயே நில்லுங்கள். அதுதான் மேற்குவங்கத்திற்கும்,இந்தியாவிற்கும் நல்லது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

நீங்கள் 15 ஆண்டுகாலம் செய்த சாதனைகளைச் சொல்லி வாக்குக்கேளுங்கள். மக்கள் உங்கள் பக்கம் நிற்பார்கள். கூட்டணிக் கட்சிகளை அவதூறு செயவதன் மூலம் நீங்கள் அடையக்கூடியது ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டில் மட்டுமல்ல கேரளம்,புதுச்சேரி,அஸ்ஸாம் ,மேற்குவங்கம் உள்ளிட்ட எந்த மாநிலத்திலும் பாஜக வெல்லக் கூடாது என்பதே எமது நிலைப்பாடு.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடித்து ,இந்தியாவைப் பாதுகாக்க எமது தலைவர் ராகுல் காந்தி தலைமையேற்று நடத்தும் போராட்டத்தில் நீங்கள் பங்கேற்காவிட்டாலும் பரவாயில்லை. பலவீனப்படுத்த முயற்சி செய்யாதீர்கள். இந்த தேசம் உங்களை மன்னிக்காது" என்று விமர்சித்திருக்கிறார்

Iran : `இன்று இரவு முழு நாகரிகமும் அழிந்துவிடும்' - ஈரான் போரில் ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா இணைந்து நடத்திய கூட்டு தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து ஈரான் இஸ்ரேல் மீதும், அண்டை நாடுகளில் இருக்கும் அம... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி Vs உதயநிதி : 'கண்ணியமற்ற அழுக்கு பிரசாரம்!' - அரசியலுக்கு ஆரோக்கியமானதா?

சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கான காலம் முடிய சரியாக இன்னும் 2 வாரங்களே இருக்கிறது. தலைவர்கள் ஊர் ஊராக சுற்றி சுழன்று மக்கள் முன்னிலையில் பேசி வருகின்றனர். இப்போதுதான் பிரசாரம் கொஞ்சம் காரசாரமாக சூடு... மேலும் பார்க்க

`சின்னமெல்லாம் தீர்ந்துபோச்சு' தமிழகத்தை அதிரவைத்த சட்டமன்றத் தொகுதி பற்றித் தெரியுமா?| Vote Vibes

இந்தியத் தேர்தல் ஆணையத்தையும், ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் திகைக்க வைத்து, வரலாற்றில் தடம் பதித்த ஒரு தமிழக சட்டமன்றத் தொகுதி பற்றித் தெரியுமா? 30 ஆண்டுகளுக்கு முன்பு அனைவரையும் திரும்பிப் பார்க்க வ... மேலும் பார்க்க

கரூர்: 'கடவூர் ஒன்றியத்தை மேம்படுத்த இவற்றைச் செய்யலாம்...' - வேட்பாளர்களுக்கு இளைஞரின் வேண்டுகோள்

கரூர் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி. மிகவும் பின்தங்கிய தொகுதியான இந்த தொகுதியில் வரும் கடவூர் பகுதி வளர்ச்சி எதுவும் இன்றி கைவிடப்பட்ட பகுதியாக உள... மேலும் பார்க்க

ரூ.1048 கோடி சொத்து: 'தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர்!' - லால்குடி அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ்

அ.தி.மு.க சார்பில் திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டின், நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இந்நிலையில், அவர் தனது வேட்புமனுவில் இணைத்த... மேலும் பார்க்க

ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி கவலைக்கிடமா? - 'கோம் நகரில் தீவிர சிகிச்சை?' - உளவுத்துறை தகவல்!

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் மூத்த உச்சத் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டார். அதே தாக்குதலில் அவர் மகன் மொஜ்தபா கமேனியும் படுகாயமடைந்தத... மேலும் பார்க்க