செய்திகள் :

திருத்தணி: ஓடும் பேருந்தில் பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை - அரசு பேருந்து கண்டக்டர் கைது!

post image

திருத்தணியிலிருந்து சோளிங்கருக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பயணித்திருக்கிறார். பேருந்தில் அதிக கூட்டம் இருந்திருக்கிறது. இந்தச் சூழலில் டிக்கெட் கொடுப்பது போல கண்டக்டர் ஒருவர், மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. முதலில் ஏதேச்சையாக கைபட்டு விட்டதாக மாணவி கருதியிருக்கிறார். ஆனால் கண்டக்டர் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை உணர்ந்த மாணவி, கூச்சல் போட்டிருக்கிறார். அதனால் சக பயணிகள், மாணவியிடம் என்ன நடந்தது என்று கேட்டிருக்கிறார்கள். உடனே கண்டக்டர் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக கண்ணீர் மல்க மாணவி கூறியிருக்கிறார். உடனே சக பயணிகள், கண்டக்டரிடம் என்ன நடந்தது என்று விசாரித்திருக்கிறார்கள். அப்போது கண்டக்டர், கூட்டத்தில் தெரியாமல் கைபட்டிருக்கலாம் எனக் கூறியிருக்கிறார். ஆனால் மாணவியோ, தெரியாமல் கைபடுவதற்கும் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதும் தனக்குத் தெரியாதா எனக் கேள்வி எழுப்ப, மாணவிக்கு ஆதரவாக சிலர் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேருந்தைக் காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லும்படி பயணிகள் தெரிவித்தனர்.

ஆன்லைன் மூலம் பணத்தை பறித்ததால் சிக்கிய பின்னணி!
கைது

அதனால் கண்டக்டருக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தநிலையில் மாணவியின் உறவினர்களுக்குத் தகவல் தெரிந்து அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்துவிட்டனர். பின்னர், அவர்கள் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் கண்டக்டரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தகவல் தெரிந்ததும் திருத்தணி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். அதைத் தொடர்ந்து மாணவி தரப்பில் கண்டக்டர் மீது பாலியல் சீண்டல் தொடர்பாகப் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து திருத்தணி அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிந்து கண்டக்டரைக் கைதுசெய்தனர். அவரிடம் விசாரித்தபோது அவரின் பெயர் இளையராஜா (49) எனத் தெரியவந்தது. ஓடும் பேருந்தில் மாணவிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்த குற்றச்சாட்டில் கண்டக்டர் கைதுசெய்யப்பட்ட சம்பவம், திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாக்கெட் மாவு தோசையால் 2 குழந்தைகள் உயிரிழப்பா? - தீவிர சிகிச்சையில் பெற்றோர்... என்ன நடந்தது?

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் கடையில் தோசை மாவு வாங்கி சமைத்து சாப்பிட்ட குழந்தைகள் இருவர் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.கடந்த ஏப்ரல் 1-ம் தேதி, அகமதாபாத்தைச் சேர்ந்த விமல் குமா... மேலும் பார்க்க

சாத்தான்குளம் விவகாரம்: ``ஆயுள் தண்டனையை விட மரண தண்டனையே..." - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட கைதான 9 பேரும் குற்றவாளிகள் என்று கடந்த மாதம் 23-ம் தேதி நீதிபதி முத்து குமரன் தீர்ப்பளித்தார். தொடர்ந்து குற்றவாளிகளுக... மேலும் பார்க்க

காட்டி கொடுத்த டாட்டூ, மதுபாட்டில்: உறவுக்கு தடையாக இருந்ததால் காதலன் மூலம் கணவனை எரித்துகொன்ற மனைவி

உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் இருக்கும் சையான் என்ற இடத்தில் கடந்த ஒன்றாம் தேதி முகம் எரிந்த நிலையில் அடையாளம் காணமுடியாத ஒருவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் ... மேலும் பார்க்க

`கிட்னி மோசடி புகாரில் பிக்பாஸ் ஜூலி; ஆதாரங்கள் போலிஸில்.!' - அதிர்ச்சி தகவலின் பகீர் பின்னணி

சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஜூலியைத் தொடர்புபடுத்தி எழுந்துள்ள கிட்னி மோசடி புகார் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.சென்னை உயர் நீதிமன்ற மது... மேலும் பார்க்க

சென்னை: வங்கியில் வேண்டுமென்றே 1,156 கிராம் நகைகளை தவறவிட்ட முன்னாள் பெண் ஊழியர் - அதிர்ச்சி பின்னணி

சென்னையில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் கிளை மேலாளராக அகமது காதிரி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், 05.12.2025-ம் தேதி பணியிலிருந்தபோது மணிபர்ஸ் ஒன்று கீழே விழுந்து கிடந்ததைப் பார்த்தார். உடனே அதை எடு... மேலும் பார்க்க

மகனைக் காப்பாற்ற `நரபலி' கொடுக்கப்பட்ட மகள் - ரத்தத்தை எடுத்து சடங்கு... அதிரவைத்த தாய்!

ஜார்க்கண்ட் மாநிலம், ஹசரிபாக் பகுதியில் பெண் ஒருவர் செய்த காரியம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அப்பெண், உடல் நலமில்லாத தன்னுடைய மகனைக் காப்பாற்ற சொந்த மகளை நரபலி கொடுத்துள்ளார். ரேஷ்மி... மேலும் பார்க்க